காஷ்மீர் குளிரே அடித்தாலும் 24 மணி நேரத்திற்கும் உங்களுடைய உதடு டிரை ஆகவே ஆகாது. தேங்காய் எண்ணெயை உதட்டின் மேல் இப்படி தடவுங்க.

lip
- Advertisement -

இப்போது நம்முடைய ஊர்களிலேயே கடுமையான குளிர் இருக்கின்றது. அதாவது உதடு டிரையாகும் அளவுக்கு குளிர். உதட்டில் சில பேருக்கு வெடிப்பு வந்துவிடும். சில பேருக்கு அந்த வெடிப்பின் மூலம் ரத்தம் கூட கசியும். உதட்டை சுற்றி கருப்பு நிறம் வந்துவிடும். இப்படிப்பட்ட பிரச்சனைகள் எல்லாம் வராமல் இருக்க வேண்டும் என்றால் உதடை ஈரத்தன்மையோடு வைத்துக் கொள்ள வேண்டும். இதற்காக கடைகளில் இப்போது வேஸ்லின், லிப் பாம், லிப் மாய்ஸ்ரைசர் கிரீம் இப்படி நிறைய செயற்கையான பொருட்கள் கிடைக்கின்றது. ஆனால் அதைத் தொடர்ந்து 24 மணி நேரமும் நம்முடைய உதட்டில் போட்டு வைத்திருக்கும் போது சில நாட்கள் கழித்து நம்முடைய உதடு நிரந்தரமாக கருப்பு நிறமாக மாறுவதற்கும் நிறைய வாய்ப்புகள் உள்ளது. ஆக இயற்கையாக உதட்டை ஈரத்தன்மையோடு வைத்துக் கொள்ள நாம் என்ன செய்யலாம் என்பதை பற்றிய ஒரு சின்ன குறிப்பு இதோ உங்களுக்காக.

இதற்காக நாம் பயன்படுத்தக்கூடிய பொருள் 2. சுத்தமான மரச்செக்கு தேங்காய் எண்ணெய், ரோஜா இதழ்கள். பன்னீர் ரோஜா இதழ்கள் கிடைத்தால் ரொம்ப ரொம்ப சிறப்பு. சிவப்பு வண்ண பன்னீர் ரோஜா, பிங்க் நிற பன்னீர் ரோஜா இப்படி எதை வேண்டுமென்றாலும் நீங்கள் குறிப்புக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். எதுவுமே கிடைக்கவில்லை என்றால் பெங்களூர் ரோஸ் கிடைத்தாலும் அதையும் நீங்கள் குறிப்புக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். தவறு கிடையாது.

- Advertisement -

மூன்று ரோஜா பூக்களை எடுத்து அதனுடைய இதழ்களை மட்டும் தனித்தனியாக பிரித்து தண்ணீரில் போட்டு கழுவி விடுங்கள். அதன் பின்பு ஒரு வெள்ளை துணியில் போட்டு அதில் இருக்கும் தண்ணீரை எல்லாம் துடைத்து இரண்டு நிமிடம் வரை ஃபேன் காற்றில் ஆற வைத்துக் கொள்ளுங்கள். இந்த ரோஜா இதழ்களை ஒரு சிறிய உரலில் போட்டு நசுக்கிக் கொள்ள வேண்டும். இஞ்சி பூண்டு இடிப்பது போல நன்றாக நசுக்கிக்கோங்க.

அதில் 1 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெயை விட்டு மறுபடியும் ஒரு நான்கு முறை நசுக்கினால் இது ஒரு விழுது போல நமக்கு கிடைத்திருக்கும். அதை ஒரு சின்ன சில்வர் கிண்ணத்தில் போட்டு அதில் இன்னும் கொஞ்சம் இரண்டு டேபிள்ஸ்பூன் தேங்காய் எண்ணெயை ஊற்றி, இதை டபுள் பாய்லிங் மெத்தடின் சூடு செய்ய வேண்டும். நமக்கு தெரியும் அல்லவா. அடுப்பில் அகலமான பாத்திரத்தை வைத்து அதில் தண்ணீரை ஊற்றி, அதன் மேலே இந்த சின்ன கிண்ணத்தை வைத்து சூடு செய்ய வேண்டும். இது தான் டபுள் பாய்லிங் மெத்தட்.

- Advertisement -

10 நிமிடங்கள் சுடுதண்ணீரின் மேல் வைத்து தேங்காய் எண்ணெய் ஊற்றி இடித்து வைத்திருக்கும் ரோஜா இதழை சூடு செய்து கொள்ளுங்கள். அதன் பின்பு ஒரு ஸ்டீல் வடிகட்டியில் இதை ஊற்றி நன்றாக பிழிந்து வடிகட்டி எடுக்க வேண்டும். தேங்காய் எண்ணெயையும் ரோஜா இதழும் சேர்ந்த கலவை நமக்கு கிடைத்திருக்கும். சின்ன பிளாஸ்டிக் டப்பாவில் இதை ஊற்றி மூடி போட்டு 1 மணி நேரம் பிரிட்ஜில் வைத்துவிட்டு எடுத்தா தேங்காய் எண்ணெயும் அந்த ரோஜா இதழ்களும் கட்டியாக நமக்கு கிடைத்திருக்கும்.

ஆனால் பிங்க் நிறம் முழுமையாக கிடைத்திருக்காது. ஒரு சின்ன ஸ்பூனை வைத்து இதை மறுபடியும் நன்றாக கலந்து கொடுத்தால் சூப்பரான பிங்க் நிறத்தில் ஒரு லிப் பாம் நமக்கு லிக்விட் ஆக கிடைக்கும். மீண்டும் அதை மூடி போட்டு அப்படியே ஃப்ரிட்ஜில் ஒரு மணி நேரம் வைத்து விடுங்கள். அதன் பின்பு எடுத்து பாருங்கள் செம சூப்பரான லிபாம் தயார். இதை விரலில் தொட்டு உங்களுடைய உதட்டில் தடவிக் கொண்டால் உதடு பிங்க் நிறத்திலும் இருக்கும். அதோடு உதடு மாயசரைசராகவும் இருக்கும். பனிக்காலத்தில் உங்களுடைய உதடுக்கு எந்த பாதிப்பும் வரவே வராது. லிப்ஸ்டிக் போட்டுக் கொண்ட அழகையும் சேர்த்து பெறலாம். இந்த குறிப்பு பிடிச்சிருந்தா உங்க வீட்ல முயற்சி செய்து பாருங்கள்.

- Advertisement -