உங்கள் கையில் பணம் நிரந்தரமாக தங்கவில்லையா? இரவு நேரத்தில் இந்த 1 பொருளை சாப்பிடாதீங்க!

- Advertisement -

நாம் எல்லோருக்கும் மகாலட்சுமி நம் வீட்டில் நிரந்தரமாக தங்க வேண்டும் என்ற ஆசை தான் இருக்கின்றது. ஆனால் ஏனோ தெரியவில்லை. நாம் எதன் மீது அதிகப்படியான விருப்பத்தை வைக்கின்றோமோ, அது நம் கையை விட்டு சீக்கிரம் விலகி சென்று விடும். இது பணத்திற்கு அவசியம் பொருந்தும். ஏனென்றால் பலபேரது விருப்பமும் அதிகப்படியான பணத்தை சம்பாது சேர்க்க வேண்டும் என்றுதானே. அதற்கான வழி கிடைக்காமல் தான் திண்டாடி வருகின்றோம். என்ன தான் செய்வது? நம் முன்னோர்கள் கூறியிருக்கும் சில பழக்கவழக்கங்களை முறையாகப் பின்பற்றினாலே போதும். அனாவசியமான விரயங்களை தடுத்துவிடலாம். இதில் ஒரு தவறை, நாம் சில பேர் செய்கின்றோம். தெரியாமல் கூட செய்யலாம்! அதாவது இரவு நேரங்களில் தயிரை சாப்பிடுவது. இரவில் தயிர் சாப்பிடுவது அவ்வளவு பெரிய குற்றமா? என்று நீங்கள் சிந்திக்கலாம். நிச்சயம் குற்றம்தான். இரவு நேரங்களில் தயிரை சாப்பிட கூடாது. ஆரோக்கியத்திற்கும் நல்லதல்ல. ஆன்மீகத்திற்கும் நல்லதல்ல. எப்படி? என்பதைப் பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

curd

தயிர் என்பது விரைவாக ஜீரணம் ஆகாத ஒரு பொருள். பொதுவாகவே மனிதர்களுக்கு இரவு நேரங்களில் ஜீரணசக்தி குறைவாகத்தான் இருக்கும். அப்படி இருக்க, தயிர் சாப்பாட்டை இரவில் சாப்பிடும் போது கட்டாயமாக ஆரோக்கியம் கெடுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. இது தவிர குளிர்ச்சி தரக்கூடிய ஒரு பொருள் தயிர். சளி இருமல் போன்ற பிரச்சனை உள்ளவர்கள் கட்டாயம் இரவு நேரங்களில் இதை தவிர்ப்பது நல்லது.

- Advertisement -

சிலபேருக்கு உடல் அதிகமாக சூடாகும் தன்மை இருக்கும். இப்படிப்பட்டவர்கள் எல்லாம் வெயில் காலங்களில், வெந்தயத்தோடு நீர்மோர் குடிக்கும் பழக்கத்தை வைத்திருப்பார்கள். முடிந்தவரை இதையும் மாலை 6 மணிக்கு முன்பாகவே குடித்துவிட வேண்டுமே தவிர, இரவு நேரங்களில் குடிப்பதை தவிர்ப்பது நல்லது. அவரவர் உடல் சூழ்நிலைக்கு ஏற்றவாறு தான் நம்முடைய உணவு பழக்கவழக்கமும் இருக்க வேண்டும். உடல் சூழ்நிலை ஒத்துக் கொண்டால், இரவு நேரத்தில் தயிரை சாப்பிடலாமா? என்று கேட்காதீர்கள். எப்படிப்பட்ட உடல் சூழ்நிலை உள்ளவர்களும் இரவு நேரங்களில் கட்டாயம் தயிர் சாப்பிடக்கூடாது. இது ஆரோக்கியம்.

curd

ஆன்மீகப்படி தயிர் லட்சுமிகலாட்சம் உள்ள ஒரு பொருளாக சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.  அதாவது நிறைய அளவுள்ள பாலில், ஒரு சொட்டு உறை ஊற்றிய உடன், ஒரு இரவில், அந்த ஒரு சொட்டு தயிரானது அந்தப் பால் அனைத்தையும் தயிராக மாற்றுகிறது. சிறுதுளி தயிறுக்கு பாலை பெருக்கி, அந்த பால் முழுவதையும் தயிராக்கும் தன்மை இருக்கிறது.

- Advertisement -

இந்த தயிரை நாம் காலை வேளையில் அருந்தலாம், மதியம் வேளையிலும் அருந்தலாம். கட்டாயம் இரவு அருந்தக்கூடாது. ஏனென்றால் இரவு மகாலட்சுமி நம் வீட்டில் குடியேற பாலில் உறை தான் ஊற்ற வேண்டுமே தவிர, அந்த தயிரை நாம் விழுங்கக்கூடாது. மகாலட்சுமி குடிகொண்டிருக்கும் அந்த தயிரை இரவு நேரங்களில் நீங்கள் சாப்பிட, சாப்பிட உங்கள் செல்வவளமும் உங்கள் கையை விட்டு போய்க் கொண்டேதான் இருக்கும்.

mahalakshmi

மகாலட்சுமி குடிகொண்டிருக்கும் அந்த தயிரை இரவு நேரத்தில் சாப்பிட்டு தீர்த்து விட்டால், தயிர் உங்கள் வீட்டில் எப்படி இல்லாமல் போகிறதோ, அதேபோல் கையிலிருக்கும் பணமும் தீர்ந்துவிடும் என்பதுதான் உண்மை. நாம் உண்ணும் மற்ற பொருட்களை எல்லாம் கூட மகாலட்சுமிக்கு இணையாக கூறுவார்களே! என்ற சந்தேகம் பல பேருக்கு வரும். ஆனால் எந்த பொருளுடன், எந்த பொருளை சேர்த்தாலும் அது பெருகும் தன்மையை அடையாது. சிறிதளவு தயிருடன் எவ்வளவு பால் சேர்த்தாலும், அதை பெருக வைத்து, தயிராக மாற்றும் தன்மை தயிருக்கு மட்டும்தானே உண்டு. தன்னை பெருத்திக்கொள்ள கூடிய தன்மை இந்த தயிருக்கு உண்டு என்பதற்காக கூட, நம் முன்னோர்கள் இதை மகாலட்சுமிக்கு ஈடாக சொல்லியிருக்கலாம். எது எப்படியாக இருந்தால் என்ன? நம் முன்னோர்கள் நல்லது என்று எதைச் சொல்கிறார்களோ, அதை நாம் பின்பற்றித்தான் பார்ப்போமே.

- Advertisement -

curd

நீங்கள் இரவு நேரங்களில் தயிரை சாப்பிடாமல் உறை போடும் பழக்கம் இருந்தால், உங்கள் வீட்டில் சிறு துளி உறையானது, பெருகி எப்படி பல மடங்கு தயிராக மாறுகிறதோ, கை நிறைய தயிர் கிடைக்கிறதோ, அதே போல் உங்களுக்கு வரக்கூடிய வருமானமும் பெருகும். உங்களது கையில் சேமிப்பாக சேரும் என்பது தான் உண்மை. நம்பிக்கை உள்ளவர்கள் பின்பற்றலாம்.

இதையும் படிக்கலாமே
பெண்கள் தங்களுடைய தலையில் சூடிக்கொள்ளும் பூக்களுக்கும், நாம் கோவிலுக்கு வாங்கி செல்லக்கூடிய பூக்களுக்கும் இத்தனை சாஸ்திரங்களா?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Why we don’t eat curd at night. Eating curd at night is good or bad. Curd at night. Curd rice at night time. Curd at night myth.

- Advertisement -