இன்று மாலை இந்த 2 பொருட்களையும், பூஜை அறையில் வைத்து வழிபாடு செய்தால், உங்கள் வீட்டில் பண கஷ்டம் உடனடியாக தீரும்.

mahalakshmi2

என்னதான் பெரிய பெரிய பரிகாரங்களை செய்து பார்த்தாலும், பணம் கையில் தங்கவே இல்லை என்ற கஷ்டம் உள்ளவர்கள் இந்த சுலபமான பரிகாரத்தை நம்பிக்கையோடு செய்து பாருங்கள். பரிகாரங்களை, வழிபாட்டு முறையில், இறை நம்பிக்கையோடு செய்தால் தான் முழுப் பலன் தரும் என்ற நம்பிக்கையோடு இந்த பதிவினை தொடங்கலாம். இன்று வெள்ளிக்கிழமை. தொடர்ந்து வாரம் தோறும் வரும் 3 வெள்ளிக்கிழமை இந்த பரிகாரத்தை செய்யலாம். மூன்று வாரம் முடிந்த பின்பு, உங்களுடைய வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் ஏற்பட்டாலும் கூட இந்த வழிபாட்டை நிறுத்தாமல் தொடர்ந்து செய்வதில் தவறு ஒன்றும் கிடையாது.

mahalashmi3

இந்த பரிகாரத்திற்க்கு உங்களுக்கு தேவையான பொருள் சுத்தமான பசும் பாலும், சுத்தமான தேனும் தான். முடிந்தவர்கள் சுத்தமான பசும் பாலை வாங்கிக் கொள்ளுங்கள். முடியாதவர்கள் பாக்கெட் பாலில் இந்த பரிகாரத்தை செய்துகொள்ளலாம். வேறு வழி கிடையாது. உங்களுடைய வீட்டில் மாலை வெள்ளிக்கிழமை அன்று தீபம் ஏற்றி 6 மணி அளவில் மகாலட்சுமியை வழிபடும் வழக்கம் இருக்கும். நம் எல்லோரது வீட்டிலும் வெள்ளிக்கிழமை பூஜை காலையிலும் மாலையிலும் செய்வோம். இந்த பரிகாரத்தை நீங்கள் காலை செய்தாலும் சரி, மாலை செய்தாலும் சரி. இன்று செய்ய வேண்டும் என்றால் மாலை நேரத்தில் 6 மணி அளவில் செய்யலாம்.

பூஜை அறையை அலங்காரம் செய்துவிட்டு, மகா லட்சுமி தாயாருக்கு முன்பாக ஒரு சிறிய கிண்ணத்தில் 2 ஸ்பூன் அளவு பாலோடு, 1/2 ஸ்பூன் தேன் ஊற்றி கலந்து, அதே கிண்ணத்திற்கு உள்ளே ஒரு ரூபாய் நாணயத்தை போட்டு வைத்து விடவேண்டும். உங்களுக்கு தெரிந்த மகாலட்சுமி மந்திரத்தை 108 முறை உச்சரித்து உதிரி புஷ்பங்கள் மஹாலக்ஷ்மி தாயாருக்கு அர்ச்சனை செய்யுங்கள். ‘ஓம் மகாலட்சுமி தாயே போற்றி’ என்ற மந்திரத்தை சொல்லி அர்ச்சனை செய்தால் கூட போதும்.

milk with mahalashmi

இறுதியாக தீப ஆராதனை காட்டி, உங்களது பூஜையை நிறைவு செய்து கொள்ளுங்கள். இப்போது மகாலட்சுமி தாயாரின் திருவுருவப் படத்திற்கு கீழே வைத்திருக்கும் கிண்ணத்தில் இருந்து 1 ரூபாய் நாணயத்தை எடுத்து தண்ணீரில் கழுவ கூடாது. ஒரு சிறிய துணியால் துடைத்துவிட்டு நீங்கள் பணம் சேமிக்கும் பர்ஸிலோ, பெட்டியிலோ அந்த நாணயத்தை போட்டு வைத்துக் கொள்ளலாம்.

- Advertisement -

கிண்ணத்தில் மீதம் இருக்கும் அந்த பாலை உங்கள் நில வாசற்படிக்கு இரண்டு பக்கமும் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி விடுங்கள். மொத்தமாகவே நீங்கள் இரண்டு ஸ்பூன் பாலைத்தான் பூஜைக்காக பயன்படுத்தி இருப்பீர்கள். நில வாசலுக்கு வெளியே நீங்கள் சென்றுவிட்டு, அதன் பின்பு வீட்டிற்கு உள் பக்கம் பார்த்தவாறு நின்று கொண்டார்கள்.

honey 2

முதலில் வலது பக்கம் கொஞ்சமாக பால், அதன் பின்பு இடது பக்கம் கொஞ்சமாக பால் விட்டு விட்டு மகாலட்சுமி தாயார் உங்களுடைய வீட்டில் நிரந்தரமாக தங்க வேண்டும் என்ற வேண்டுதலை வைத்து பணக்கஷ்டம் தீர வேண்டும் என்று நினைத்தபடியே, நில வாசப்படியை தொட்டு நெற்றியில் இட்டுக் கொண்டாலே போதும்.

vasal-kathavu

வீட்டில் இருக்கக் கூடிய பணக்கஷ்டம் படிப்படியாக குறைவதை உங்களால் உணர முடியும். இந்த பரிகாரத்திற்க்கு நாம் பயன்படுத்தும் பால் சந்திரனின் அம்சம் பொருந்தியது. இதோடு சேர்த்து கோமாதாவிடம் பெறக்கூடிய பாலில், மகாலட்சுமி முழுமையாக வாசம் செய்கின்றாள். சுக்கிரனின் அம்சம் கொண்டது தேன். இந்த பொருட்களெல்லாம் சேர்த்து பரிகாரத்திற்கு பயன்படுத்துவதன் மூலம் நமக்கு பாதிப்பு ஏற்படுவதற்கு எந்த ஒரு வாய்ப்பும் கிடையாது. நம்பிக்கையோடு செய்தவர்களுக்கு பலன் மட்டுமே கிடைக்கும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
என்ன செய்தாலும் தூக்கமே உங்களுக்கு வரவில்லையா? படுத்த உடனே தூக்கம் வர இதை ஒரு டம்ளர் குடித்தால் போதுமே!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.