ஒவ்வொரு மாதத்தின் முதல் நாள் இப்படி மட்டும் செய்தால் பாவங்கள் நீங்கி, பணவரவு மேலும் மேலும் பெருகும் கட்டாயம் நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்!

cash-pasiparupu-payaru

ஒவ்வொரு மாதமும் முதல் நாளன்று பெரும்பாலும் சம்பளம் வாங்கிய நாளாக இருக்கும். அப்படி இல்லை என்றாலும் மாதத்தின் முதல் நாள் என்பது மிகவும் முக்கியமானது ஆகும். ஒரு வருடத்தின் தொடக்கம் எப்படி முக்கியமோ! அதே போல ஒரு மாதத்தின் தொடக்கமும் விசேஷமானது. அந்த நாளில் நாம் தெரிந்தோ! தெரியாமலோ! செய்த பாவங்களுக்கு பரிகாரம் தேடலாம். அதை எப்படி செய்வது? வாங்கிய சம்பளத்தை முதலில் என்ன செய்தால் மேலும் பணவரவு பெருகும்? என்பதையும் தெரிந்து கொள்ள இந்த பதிவை தொடர்ந்து படியுங்கள்.

money

பொதுவாக ஒவ்வொரு மாதமும் சம்பளம் வாங்கும் பொழுது அதிலிருந்து முதல் தொகையை நல்ல விஷயத்திற்கு செலவு செய்ய வேண்டும் என்று கூறுவார்கள். இல்லையானால் வீட்டிற்கு மகாலட்சுமி வருவதற்கு கல் உப்பை முதல் பொருளாக வாங்க வேண்டும் என்று சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. வீட்டில் குறையவே கூடாத ஒரு பொருளாக இருக்க வேண்டியது கல் உப்பு மற்றும் அரிசி.

அது போல் வாங்கிய முதல் நாள் சம்பளத்தில் சுயநலம் பார்க்காமல் மனம் உவந்து யாருக்காவது ஒருவருக்கு சாப்பாடு பொட்டலம் வாங்கி கொடுங்கள். இவ்வாறு செய்யச் செய்ய உங்களுக்கே அடுத்தவர்களுக்கு நிறைய உதவிகள் செய்ய வேண்டும் என்கிற ஆர்வமும் இயல்பாகவே வந்துவிடும். இந்த ஆர்வம் வந்து விட்டாலே போதும், எங்கிருந்தாவது பணம் உங்களுக்கு வந்து கொண்டே தான் இருக்கும் என்பது சூட்சமம்.

pichai-thanam

நாம் நமக்காக செலவு செய்யும் பணத்தை விட அடுத்தவர்களுக்கு ஒரு ரூபாய் செலவு செய்தால் கூட அது இரட்டிப்பாக நம்மிடம் வந்து சேரும் என்பது பண ஈர்ப்பு விதிகளில் முக்கிய அம்சமாக இடம் பெற்றுள்ளது. அதனால் வாங்கிய சம்பளத்தில் முதலில் பசி என்று இருப்பவருக்கு உணவு வாங்கிக் கொடுங்கள். ஒரு உணவு பொட்டலம் 30 ரூபாய் இருக்குமா? அதைக் கூட உங்களால் செலவு செய்ய முடியாதா என்ன? அடுத்தவர்களுக்கு உதவி செய்வதில் இருக்கும் சுகமே தனிதான். அதனை அனுபவித்து பார்ப்பவர்களுக்கு புரியும்.

- Advertisement -

நம் வாழ்க்கையில் தெரிந்தோ! தெரியாமலோ! எவ்வளவோ பாவங்களை செய்து இருப்போம். இதனால் பித்ரு தோஷம் மற்றும் குலதெய்வ சாபம் ஏற்படும். இந்த சாபம் நிவர்த்தியாக மாதம் முதல் தேதி அன்று ஒவ்வொரு முறையும் முழு பாசிப் பருப்பை வெல்லம் கலந்த நீரில் ஊற வைக்க வேண்டும். இதை முந்தைய நாளே செய்து வைக்க வேண்டும். மறுநாள் அந்த தானியத்தை பசுக்களுக்கு தானமாக கொடுக்க வேண்டும். இதனை மாதம் தவறாமல் செய்து பாருங்கள். உங்களுடைய கஷ்டங்கள் எல்லாம் மாறுவதை நீங்களே உணரலாம்.

pachai_payaru

ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்தில் பாவங்களை நீக்குவதற்கு இந்த பரிகாரத்தையும், புண்ணியம் சேர்த்துக் கொள்வதற்கு தான, தர்மத்தையும் செய்து வந்தாலே, உங்கள் மனதில் இருக்கும் குழப்பங்கள் நீங்கும். என்னடா இது வாழ்க்கை? என்கிற விரக்தி மனப்பான்மை களையப்பட்டு, ஒரு உத்வேகம் பிறக்கும். ஒவ்வொரு மாதமும் குலதெய்வ வழிபாடு செய்வது இன்னும் கூடுதல் பலன்களை கொடுக்கும். குலதெய்வம் தெரியாதவர்கள் ஐந்து முக குத்துவிளக்கை அலங்கரித்து குலதெய்வமாக நினைத்து, படையல் போட்டு பூஜைகள் செய்யலாம். இதனால் நல்ல பலன் கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே
நாளை(30/12/2020) மார்கழி திருவாதிரை! மாலை சந்திரனை தரிசனம் செய்வதால் என்ன பலன்? நல்ல வரன் அமைய, கணவன் ஆயுள் நீட்டிக்க எளிதாக வீட்டில் வழிபாடு செய்வது எப்படி?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.