நாளை(30/12/2020) மார்கழி திருவாதிரை! மாலை சந்திரனை தரிசனம் செய்வதால் என்ன பலன்? நல்ல வரன் அமைய, கணவன் ஆயுள் நீட்டிக்க எளிதாக வீட்டில் வழிபாடு செய்வது எப்படி?

thiruvathirai-viratham-mangalyam

மார்கழி மாதம் வரும் திருவாதிரை நட்சத்திரத்தன்று விரதமிருந்து வழிபடும் பெண்களுக்கு தீர்க்க சுமங்கலி வரம் கிடைக்கும் என்பது ஐதீகம். திருமணமான பெண்கள், கன்னிப்பெண்கள் என்று எல்லோருமே இந்த நாளில் விரதம் இருந்து வழிபட்டால் சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும். வானில் ஒளிரும் சந்திரனை இந்த நாளில் பார்ப்பது மிகவும் விசேஷமானது. முழு நிலவு இருக்கும் வேளையில், சிவபெருமானை வழிபட்டால் சிவ பார்வதியின் அருள் கிடைத்து, தம்பதியர்கள் ஒற்றுமையுடன் வாழ்ந்து தீர்காயுள் பெறுவார்கள். இதனை வீட்டில் எப்படி எளிதாக வழிபாடு செய்யலாம்? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

sivan-parvathi

இவ்வருடம் மார்கழி மாதம் இன்றைய நாளில் அதாவது இன்று மாலை 6:30 மணிக்கு தொடங்கிய திருவாதிரை நாளை மாலை 7:50 வரை நடைபெறுகிறது. இன்றும் நாளையும், சந்திர தரிசனம் செய்வது மிகவும் நல்லது. அது போல் நாளை மாலை சிவாலயம் சென்று வழிபடுவதும் மிகவும் விசேஷமானது. இன்றைய நாளில் செய்யப்படும் சிவதரிசனம் உங்களுடைய பாவங்களை நீக்கி, தம்பதிகளுக்குள் ஒற்றுமை நிலைக்க வழிவகை செய்யும். கணவனின் ஆயுள் நீட்டிக்க மனைவி விரதமிருந்து ஈசனை வழிபடுவது வழக்கம்.

கன்னிப்பெண்கள் தனக்கு பிடித்தமான வரன் கிடைக்க வேண்டியும், திருமணமான பெண்கள் கரம் பிடித்த கணவன் நீண்ட ஆயுள் பெற வேண்டியும் இந்த பூஜையை செய்ய வேண்டும். அன்றைய நாள் முழுவதும் விரதமிருந்து, பதினெட்டு வகையான காய்கறிகளை சமைத்து படையல் போட வேண்டும். பூஜையில் குலதெய்வமும், சிவபெருமானும், முழு முதற்கடவுளான விநாயகரும் இடம் பெற்றிருப்பது அவசியமாகும். முதலில் மஞ்சளில் பிள்ளையார் பிடித்து விபூதி, சந்தனம், குங்குமம் இட்டு அருகம்புல் சாற்றி தயார் செய்து கொள்ளுங்கள். விநாயகரை வணங்கிய பின் தான் எந்த ஒரு பூஜையும் ஆரம்பிக்க வேண்டும்.

manjal-pillaiyar2

பூஜையில் தாலி சரடை வைத்து வழிபடுவார்கள். புதிதாக தாலி சரடு மாற்ற நினைப்பவர்கள் இந்த நாளில் விரதமிருந்து வழிபாடு செய்து மாற்றுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கணவனின் நீண்ட ஆயுளுக்காக மாங்கல்ய சரடை வைத்து வழிபடும் நோன்பாகவும், இந்த விரதம் பார்க்கப்படுகிறது. ஆக மஞ்சள் கயிற்றை கட்டிக் கொண்டு, தாலி சரடை மஞ்சள் கலந்த தண்ணீரில் போட்டு பூஜையில் வைக்க வேண்டும். திருவாதிரைக்கு களி தான் பிரசித்தி பெற்ற நெய்வேத்தியம்.

- Advertisement -

எனவே திருவாதிரை களி செய்து பூஜையில் படைக்க வேண்டும். அதுபோல் பச்சரிசியில் அடை செய்வார்கள். அதையும் செய்து படைக்கலாம். இவையெல்லாம் சிவபெருமானுக்கு மிகவும் பிடித்தமான நைவேத்தியங்கள். நாளை மாலை 6 மணிக்கு பூஜைக்கு தேவையான எல்லாவற்றையும் தயார் செய்து, விளக்கு ஏற்ற வேண்டும். விநாயகரையும், சிவபெருமானையும், குல தெய்வத்தையும், முப்பெரும் தேவியரையும் மனதார வேண்டிக் கொண்டு தீப, தூப, ஆரத்தி காண்பிக்க வேண்டும்.

mangalyam1

பின்னர் பூஜையில் வைக்கப்பட்ட தாலி சரடை கணவன் கையால் மாட்டிக் கொள்ள செய்ய வேண்டும். பிறகு குடும்பத்துடன் அமர்ந்து படையலை சாப்பிட்டு விரதத்தை முடிக்க வேண்டும். கணவன் சாப்பிட்ட இலையில் மனைவி சாப்பிடுவது உத்தமம். இதனால் இவர்களுக்குள் அன்னோன்யம் பெருகி ஒற்றுமை நிலைக்கும். சிவ பார்வதியின் அருளோடு தீர்க்க சுமங்கலி வரம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. கன்னியருக்கு மனதிற்கு பிடித்த வரன் விரைவில் அமையும் என்பது ஐதீகம்.

இதையும் படிக்கலாமே
அஷ்டமி, நவமி அன்று ஒரு முடிவை எடுத்தால் இப்படி ஒரு ஆபத்து இருக்கிறதா? இதுநாள் வரை இது தெரியாம போச்சே!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.