மூன்று நாள் இந்த பரிகாரத்தை செய்தாலே போதும். சேமிப்பு அதிகரிக்கும்.

date-hundi
- Advertisement -

எவ்வளவுதான் பண வருமானம் இருந்தாலும், அந்த வருமானமானது நம் தேவையை பூர்த்திசெய்யும் அளவிற்கு இல்லை என்ற மனப்பான்மைதான் அனைவரின் மனதிலும் இருக்கும். ஏனென்றால் நம் வருமானம் அதிகரிக்க, நமது தேவைகளும் அதிகரித்துக் கொண்டேதான் இருக்கின்றது. கடந்த வருடத்தை விட இந்த வருடம் வருமானம் ஒருவருக்கு அதிகரிக்கிறது என்றால், அவரின் மனப்பான்மையானது, அதிகரிக்கப்பட்ட வருமானத்திலிருந்து எந்த தேவையை பூர்த்தி செய்து கொள்ளலாம், என்று நினைக்குமே தவிர, அந்த வருமானத்தை சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் பலருக்கு வருவதில்லை. நமது சேமிப்பை நாம் உயர்த்திக் கொள்ள வேண்டுமென்றால் நமக்கு வரும் வருமானத்தில் இருந்து, முதலில் சேமிப்புத் தொகையை எடுத்து வைத்துவிட்டு, பின்பு மீதம் உள்ள பணத்தில்தான் செலவினை கணக்கிட வேண்டுமே தவிர, செலவினை கணக்கிட்டு விட்டு சேமிப்பு தொகையை நம்மால் எடுத்து வைக்க முடியாது. ஏனென்றால் பட்ஜெட் என்றாலே பற்றாக்குறையில் தான் முடியும். நாட்டிற்கு பட்ஜெட் கணக்கு போட்டாலும் பற்றாக்குறை வரத்தான் செய்யும். வீட்டிற்கு பட்ஜெட் கணக்கு போட்டாலும் பற்றாக்குறை வர தான் செய்யும். இதுதான் உண்மை. இதனால் சிந்தித்து (வருமானம்-சேமிப்பு= செலவு). உங்களுக்கு வரும் வருமானத்தில் இருந்து சேமிப்புத் தொகையை முதலில் எடுத்து வைத்துவிட்டு மீதமுள்ள தொகையை செலவு செய்யுங்கள். இதோடு சேர்த்து பின்வரும் பரிகாரத்தையும் பின்பற்றினால் நிச்சயம் உங்களது வருமானமானது சேமிப்பில் இருக்கும்.

hundi

முதலில் புதியதாக வாங்கப்பட்ட ஒரு கண்ணாடிபவுலை எடுத்துக் கொள்ளவும். அந்த கண்ணாடி பலானது எச்சில் படாததாக இருக்க வேண்டும். உங்கள் வீட்டில் புதியதாக வைத்திருந்தாலும் அதை பயன்படுத்திக் கொள்ளலாம். அந்த கண்ணாடிபவுலில் மஞ்சள், குங்குமம் 3 அல்லது 5 என்ற எண் கணக்கில் வைத்துக் கொள்ளலாம். பின்பு கண்ணாடி பௌலில் பாதி அளவு சுத்தமான கல்லுப்பு நிரப்பிக் கொள்ள வேண்டும். பச்சை நிற துணியை மடித்து நிரப்பப்பட்ட கல் உப்பின் மேல் வைத்துக் கொள்ள வேண்டும். இந்தக் கண்ணாடி பவுலை பூஜைஅறையில் வைத்து பூக்களால் அலங்கரித்து கொள்ளலாம். உங்களுக்கு வரக்கூடிய வருமானம் எதுவாக இருந்தாலும் சரி, அதாவது மாத சம்பளம், தொழிலில் இருந்து கிடைக்கக்கூடிய லாபம், அல்லது பெண்கள் வீட்டிலேயே தொழில் செய்து சம்பாதிக்கும் வருமானமானம், ஏதாவது ஒரு பொருளை விற்று வந்த வருமானமாக இருந்தாலும் சரி.

- Advertisement -

இப்படி உங்கள் கைக்கு வரும் வருமான தொகையிலிருந்து ஒரு குறிப்பிட்ட தொகை (பத்து ரூபாயிலிருந்து 2,000 ரூபாய் வரை எந்த நோட்டாக இருந்தாலும் சரி). அந்த ஒரு நோட்டை, உங்கள் பூஜை அறையில் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருக்கும் அந்த கண்ணாடி பவுலின் பச்சை நிற துணிக்கு மேல் வைத்து விடவேண்டும்(வெறும் பத்து ரூபாய் தாளை வைத்தால் கூட போதும்). இது மூன்று நாட்களுக்கு உங்கள் பூஜை அறையில் அப்படியே இருக்க வேண்டும். மூன்று நாட்கள் கழித்து அந்தத் தொகையை எடுத்து உங்கள் செலவிற்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.  குறிப்பிட்ட நாள் தான் செய்யவேண்டும் என்ற எந்த கட்டாயமும் இல்லை. உங்களுக்கு வருமானம் எந்த சமயம் வருகின்றதோ அந்த சமயம் இந்த பரிகாரத்தை செய்தால் போதும். ஆனால் அந்த பச்சை துணியின் மீது வைக்கப்படும் தொகையானது உங்களுக்கு வந்த வருமானத்தில் இருந்து எடுக்கப்பட்ட தொகையைத்தான் இருக்க வேண்டுமே தவிர, வீட்டில் இருக்கும் பணத்தை எடுத்து வைக்கக் கூடாது. உங்களுக்கு வரக்கூடிய வருமானம், வங்கிக்கணக்கில் வந்தாலும் ஏ.டி.எம் மில் அந்த வருமானத்தில் இருந்து எடுத்து வரப்பட்ட தொகையில் இந்த பரிகாரத்தை செய்யுங்கள்.

money

இந்த பரிகாரத்தை செய்து விட்டு பூஜை அறையில் இறைவனுக்கு தீபம் ஏற்றி மனதார பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும். ‘இன்று போல் என்றும் பணவரவிற்கு எந்தக் குறைவும் இருக்கக் கூடாது. சேமிப்பு அதிகரித்துக் கொண்டே செல்ல வேண்டும்’ என்ற வேண்டுதலை மனதார வேண்டிக் கொள்வது மிகவும் சிறந்தது. பரிகாரம் என்று பார்த்தால் மிகவும் சிறிய விஷயம் தான். ஆனால் நம்பிக்கையோடு நாம் செய்யும் சிறிய காரியமாக இருந்தாலும் அதற்காக கிடைக்கும் பலன் அதிகம் என்பதை மறக்க வேண்டாம்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே
வீட்டில் இருக்கும் பணம் சிக்கனமாக செலவாக வேண்டுமா? இந்தப் பானையை உங்கள் வீட்டில் வைத்துப் பாருங்கள்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Selvam sera pariharam Tamil. Semippu in tamil. Panam sera pariharam Tamil. Panam sera tips Tamil. Panam vara pariharam.

- Advertisement -