வீட்டில் இருக்கும் பணம் சிக்கனமாக செலவாக வேண்டுமா? இந்தப் பானையை உங்கள் வீட்டில் வைத்துப் பாருங்கள்.

pot-lakshmi

எவ்வளவுதான் சம்பாதிக்கும் யோகம் ஒருவருக்கு இருந்தாலும் அந்த சம்பாத்தியத்தை சிக்கனப்படுத்தி எப்படி பணத்தை சேமிப்பது என்ற ரகசியம் சிலருக்கு தெரிந்திருக்கும். ஆனால் சிலர் வரும் வருமானத்தை சிக்கனப்படுத்த தெரியாமல் வீண் செலவிற்கு செலவழித்து விடுவார்கள். இதனால் அந்த மகாலட்சுமியானவள் வீட்டில் தங்காமல் உள்ளே வருவதும், போவதுமாக இருப்பாள். வீட்டில் வரும் வருமானத்தை வீண் விரயம் ஆகாமல் சேமித்துவைக்க ஒரு எளிய பரிகாரம் உள்ளது. அந்த பரிகாரத்தை பற்றிதான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

mahalakshmi

இந்தப் பரிகாரத்தை பார்ப்பதற்கு முன்பு சிலருக்கு இருக்கும் சந்தேகங்களை முதலில் தீர்த்துக் கொள்ளலாம். பில்கேட்ஸ், அம்பானி இவர்களைப் போன்றவர்கள் எல்லாம் இப்படிப்பட்ட பரிகாரங்களை செய்தா சேமித்து முன்னேறினார்கள். அவர்களுக்கெல்லாம் எப்படி பணம் சேர்கிறது? இந்த சந்தேகம் நம்மில் பலருக்கு இருக்கும். சிலருக்கு ஜாதக கட்டத்திலேயே யோகம் அதிகமாக இருக்கும். அவர்களுக்கு கோடீஸ்வரராகும் யோகம் அவர் ஜாதக கட்டத்திலேயே இருப்பதால் இவர்கள் கோடீஸ்வரராக இருக்கிறார்கள். ஜாதகத்தில் யோகமில்லாதவர்கள் தங்களுடைய உழைப்போடு சேர்த்து, இப்படி சில பரிகாரங்களையும் செய்தால் அவர்களது முன்னேற்றத்தில் வரும் தடைகள் குறைக்கப்படும் என்பதற்காகவே இப்படிப்பட்ட பரிகாரங்கள் கூறப்பட்டுள்ளது.

ஒன்றை மட்டும் எல்லோரும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். எந்த ஒரு பரிகாரத்தை செய்தாலும் பணமானது ‘கூரையைப் பிச்சிக் கொண்டு கொட்டோ கொட்டுன்னு கொட்டும்’ என்று அர்த்தமில்லை. உண்மையாக நீங்கள் சம்பாதித்த பணமானது, நல்ல வழியில் நீங்கள் சம்பாதித்த பணமானது, வீண் விரயம் ஆகாமல் சேமிப்பில் இருப்பதற்காகவும், உங்களின் முன்னேற்றத்திற்கு இருக்கும் தடைகள் நீங்குவதற்காகவும்தான் பரிகாரங்களே தவிர, யாருடைய தலையெழுத்தையும், யாராலும் மாற்றிவிட முடியாது. அது இறைவன் எழுதிய ஒன்று. அடுத்ததாக பரிகாரம் என்னவென்று பார்த்து விடலாம்.

money

பரிகாரத்திற்கு ஒரு சிறிய அளவு மண்பானையும், அந்த பானையை நிரப்பும் அளவிற்கு சில்லரை காசுகளையும் எடுத்து கொள்ள வேண்டும். உங்களால் எந்த அளவிற்கு சிறிய மண்பானையை வாங்க முடியுமோ, அந்த அளவிற்கு ஒரு சிறிய மண் பானையை வாங்கி அதை நன்றாக தண்ணீர் ஊற்றி கழுவி காயவைத்துக் கொள்ள வேண்டும். அந்த பானையில் முழுமையாக நிரம்பும் அளவிற்கு சில்லரை காசுகளை நிரப்பிக் கொள்ள வேண்டும். காசுகள் நிரப்பப்பட்ட அந்தப் பானையை தென்மேற்கு மூலையில் வைத்து விடவேண்டும். அந்த பானையின் வாய் பகுதியானது கிழக்கு பக்கம் பார்த்தபடி, பானையை கீழே சாய்த்து விடுங்கள். அப்போது பானையில் இருக்கும் சிலரை காசுகளில் இருந்து சில கீழே சிதறும் பரவாயில்லை. இப்படி அந்தப் பானையை நீங்கள் ஒரு பக்கமாக சாய்க்கும் போது ‘ஓம் தன பிராப்தி நமஹ’ என்ற மந்திரத்தை உங்கள் மனதார உச்சரித்துக் கொள்ள வேண்டும். அப்படியே அந்த இடத்தில் அந்த சாய்ந்த பானையையும், அந்த சிலரை காசையும் வைத்து விடுங்கள். ஆனால் நீங்கள் அந்த இடத்தில் வைத்திருக்கும் இந்தப் பனையானது யார் கண்களுக்கும் தெரியக்கூடாது. உங்கள் வீட்டில் குபேர மூலையான, தென்மேற்கு மூலையில் பணம் வைக்கும் பெட்டி இருந்தால், அதன் உள்ளே கூட நீங்கள் இப்படி வைத்துக் கொள்ளலாம். ஆனால் இதை யாரும் பார்க்கக் கூடாது என்பது முக்கியமான ஒரு விஷயம். யார் கண்ணிற்கும் தெரியக்கூடாது என்பதற்காக இதை துணி அல்லது வேறு ஏதும் பொருள் போட்டு மூடிவிடவும் கூடாது.

- Advertisement -

clay-pot

உங்கள் வீட்டில் குபேர மூலையில் அலமாரிகள் இருந்தால் கூட, அந்த அலமாரியின் மேல் பகுதியில் யார் கண்ணுக்கும் தெரியாமல் வைத்துக் கொள்ளலாம். வியாழக்கிழமை அன்று இந்த பரிகாரத்தை செய்வது மிகவும் சிறந்தது. இந்த பரிகாரத்தை ஒருமுறை செய்தால் மட்டும் போதும். அந்தப் பானையானது அந்த இடத்திலேயே நிரந்தரமாக இருக்கலாம். அந்த இடத்தை சுத்தம் செய்ய வேண்டும் என்று நினைத்தால் மட்டும் பானையையும் சிலரை காட்சிகளையும் எடுத்து துடைத்து விட்டு திரும்பவும் நீங்கள் இதை போன்று செய்து பானையை அந்த இடத்திலேயே திரும்பவும் வைத்துக்கொள்ளலாம். அந்தப் பானையில் சில்லரை காசுகள் எப்படி நிரம்பி உள்ளதோ அதேபோல் உங்களது வீட்டிலும் மகாலட்சுமி நிறைந்து இருப்பாள் என்று கூறப்படுகிறது.

இதையும் படிக்கலாமே
உங்கள் வாழ்க்கையில் நடக்கும் நன்மை, தீமைகளுக்கு அடுத்தவர்கள் காரணம் இல்லை?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Panam athikarikka Tamil. Panam peruga in Tamil. Mahalakshmi vasam seiyya Tamil. Panam sera pariharam Tamil.