உங்கள் கஷ்டங்கள் தீரவேண்டுமா? இந்த தானம் செய்தாலே போதும்.

Gopuram-1

மனிதர்கள் முன்ஜென்மத்தில் செய்த பாவங்கள் அனைத்தும், இந்த ஜென்மத்தில் தீர்க்கமுடியாத தோஷங்களாக அவர்களை பின்தொடர்ந்து வருகின்றது. நாம் முன் ஜென்மத்தில் செய்த பாவங்கள் மட்டுமல்ல, நம் முன்னோர்கள் பாவம் செய்திருந்தாலும் கூட அது அடுத்த தலைமுறையை பாதிக்கத்தான் செய்யும். வீட்டில் வாழும் பெண்களை கொடுமைப்படுத்தினால் அவரின் பரம்பரைக்கே ஸ்த்ரி தோஷமானது ஏற்பட்டுவிடும். இறந்தவர்களுக்கு முறையாக திதி கொடுக்கப்படவில்லை என்றால் பித்ரு தோஷமானது உண்டாகிவிடும். இப்படியாக நாம் செய்யும் ஒவ்வொரு தவறுகளுக்கும் ஒவ்வொரு தோஷங்கள் நம்மை வந்தடைகிறது.

நாம் தவறுகளை அறிந்து செய்தாலும், அறியாமல் செய்தாலும் அதில் நமக்கு ஏற்படக்கூடிய பாவமானது நம்மை விட்டு விலகுவதில்லை. சிலர் தன் வாழ்க்கையில் எதிர்கொள்ளக்கூடிய கஷ்டங்களிலிருந்து மீளவே முடியாமல் தவித்துக் கொண்டிருப்பார்கள்.

சிலருக்கு தீராத நோய் இருக்கும். சிலருக்கு வறுமை இருந்துகொண்டே இருக்கும். சிலருக்கு திருமணத்தில் தடை இருக்கும். கோடி கோடியாக சொத்து வைத்திருப்பவர்களுக்கு ஒரு வாரிசு இல்லாத கஷ்டம் இருக்கும். இப்படி பலருக்கு பல வகையில் தீராத கஷ்டங்கள் வாழ்க்கையில் வரும். இந்த பாதிப்புகளிலிருந்து, நம்மை காப்பாற்றிக் கொள்வதற்கு சில வழி முறைகளை நம் முன்னோர்கள் நமக்கு கூறியுள்ளார்கள். அதுதான் தானம்.

thanam

வசதி படைத்தவர்கள் தான் தானம் செய்ய வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை. நம்மால் முடிந்தவரை ஒரு சிறு உதவியை, இயலாதவர்களுக்கு செய்தாலும் அது ஒரு தானமாக தான் கருதப்படுகிறது. பெண்கள் காலையில் எழுந்து வாசலில் போடப்படும் கோலம் கூட, சிறு பூச்சிகளுக்கு செய்யும் தானம் தான். ஆதரவற்ற ஒருவருக்கு பசி நேரத்தில் ஒருவேளை சாப்பாடு வாங்கி தரும் புண்ணியம் கூட நம் பரம்பரைக்கே தொடரும் என்று கூறுவார்கள். இப்படிப்பட்ட தானத்தில் சிறந்த தானம் எது என்று நம்மில் சிலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

- Advertisement -

பொதுவாக தானத்தில் சிறந்த தானமாக கூறப்படுவது அன்னதானத்திற்கு அடுத்தபடியாக, ‘கோ’ தானத்தை கூறுவார்கள். பசுவை தானமாகக் கொடுப்பது கோ தானம் ஆகும். ஆனால் இந்த தானத்தை செய்வதற்கு எல்லோராலும் முடியாது. ஏனென்றால் இதற்காக ஆகும் பொருட்செலவு கொஞ்சம் அதிகம் தான். ஆனால் இந்த கோ தானத்திற்கு இணையாக சாஸ்திரத்தில் கூறப்படும் தானம் மட்டை தேங்காய் தானம். நாம் அன்றாடம் உபயோகப்படுத்தும் தேங்காயானது உறிக்கப்படாமல் மண்டையோடு கடைகளில் கிடைக்கும். அந்தத் அந்த மட்டை தேங்காயுடன் வெற்றிலை, பாக்கு, வேட்டி, துண்டு இவைகளை வைத்து ஒருவருக்கு நாம் கொடுக்கப்படும் தானமானது கோ தானத்திற்கு இணையாக கூறப்படுகிறது.

thengaimattai

அடுத்ததாக ஹோமங்களுக்கு பசு நெய் வாங்கிக் கொடுப்பது நாம் செய்த பாவங்கள் நம் அடுத்த சந்ததியினரை தொடராமல் இருக்கும் என்பது நம் முன்னோர்களின் கூற்று.

ஒருவரது கஷ்டம் தீர்க்கப்பட வேண்டும் என்றால் இந்த இரண்டு தானங்களையும் உங்களால் முடிந்த வரை தொடர்ந்து செய்து வர வேண்டும்.

ghee

பாவங்களை செய்து அதற்கு பரிகாரங்களை தேடுவதை விட நாம் வாழும் வாழ்நாட்களில் பாவங்கள் செய்யாமல் வாழ்வது மிகவும் சிறந்தது. நமக்கு அடுத்து வரும் சந்ததியினர் நன்றாக வாழவேண்டும் என்று எண்ணம் உள்ளவர்கள் எவரும் பாவச் செயலில் ஈடுபட மாட்டார்கள்.

இதையும் படிக்கலாமே
கருப்பு நிற உடை ஏன் கூடாது? எந்த கிழமை எந்த நிற உடை அணிந்தால் அதிர்ஷ்டம் உண்டாகும்?