கருப்பு நிற உடை ஏன் கூடாது? எந்த கிழமை எந்த நிற உடை அணிந்தால் அதிர்ஷ்டம் உண்டாகும்?

black-dres
- Advertisement -

கருப்பு நிற உடையை ஏன் அணிய கூடாது என்கிற கேள்வி நம்மில் பலருக்கும் இருக்கிறது. முக்கியமாக விழாக்கள், விசேஷங்கள் அல்லது இறை வழிபாடுகளில் கருப்பு நிற உடையை தவிர்ப்பது எதனால்? அதன் சாஸ்திர காரணம் என்ன? அறிவியல் காரணம் என்ன? என்ற குழப்பம் பலருக்கும் இருந்து வருகிறது. அதைப்பற்றிய விளக்கத்தை தற்போது இப்பதிவில் காணலாம் வாருங்கள்.

black-dress

கருப்பு நிறமானது சாஸ்திரத்தின்படி துக்கத்தின் அடையாளமாக தொன்றுதொட்டே கருதப்பட்டு வருகிறது. அதனால்தான் விழாக்கள் விசேஷங்களில் அல்லது தெய்வ வழிபாடுகளில் கருப்பு நிறத்தைத் தவிர்த்து வருகிறோம். மேலும் ஒரு நல்ல விசேஷம் நடக்கும் இடத்தில் கருப்பு நிற உடையை அணிந்து சென்றால் நம்முடைய மனோநிலையும் உற்சாகமாக இருப்பதில்லை. அது நமக்கு மட்டுமல்லாமல் நம்மிடம் உரையாட வருபவர்களுக்கும் தொற்றி விடுகிறது. அதனால்தான் நல்ல காரியம் நடக்கும் இடத்தில் கருப்பு நிறத்தை அணியாமல் இருக்க கூறுகிறார்கள். மேலும் கருப்பு நிறத்திற்கு வெயிலின் உஷ்ணத்தை விரைவில் உள்வாங்க கூடிய சக்தி இருக்கிறது. அதனால் பல நோய்கள் வரக்கூடிய வாய்ப்புகள் இருப்பதால் அதனை அதிகம் தவிர்ப்பது நல்லது. மற்றபடி பெரிதாக கண்டிப்பாக அணியக்கூடாது என்று சாஸ்திர குறிப்புகள் ஏதும் இல்லை. மேலும் கருப்பு நிறமானது சனிபகவானுக்குரிய நிறமாக கருதப்படுகிறது. எனவே சனிக்கிழமைகளில் கருப்பு நிற உடைகளை அணிவது நன்மையை தரவல்லது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

- Advertisement -

ஐயப்ப பக்தர்கள் கருப்பு நிற உடையை வழிபாட்டுக்கு அணிவது மட்டும் சரியா? என்று கேட்கலாம். அதற்குரிய காரணம் என்ன என்பதை பார்க்கலாம்.

sabarimalai-aiyyapaa

முந்தைய காலங்களில் ஐயப்ப பக்தர்கள் காட்டுவழி பாதையை கடந்துதான் ஐயப்பனை தரிசிக்க வேண்டிய நிலையில் இருந்தார்கள். காடு முழுவதும் வனவிலங்குகள் நிறைந்திருக்கும். அவைகளிடமிருந்து பக்தர்களை காக்க கருப்பு நிற உடையை தேர்ந்தெடுத்தார்கள். இருள் சூழ்ந்த வனாந்திரத்தில் கருப்பு நிறமானது விலங்குகளின் பார்வையில் தெரியாது. இந்த காலத்திலும் அதே காட்டு வழியை தான் ஐயப்ப பக்தர்கள் பயன்படுத்துகிறார்கள் எனவே தான் கருப்பு நிற உடை அணிந்து யாத்திரை மேற்கொள்கிறார்கள்.

- Advertisement -

எந்தெந்த கிழமைகளில் எந்த நிற உடையை அணிவது அதிர்ஷ்டத்தை மற்றும் நன்மையளிக்கும்?

 multi-colo

திங்கள் கிழமை:
திங்கள் என்பது சந்திரனுக்கு உகந்த நாளாக இருக்கிறது. சந்திரனுக்கு உரிய இந்த நாளில் வெள்ளை நிற உடை அணிவதால் பல நன்மைகள் உண்டாகும். எந்த காரியத்திற்காக சென்றாலும் தடையில்லாமல் நிறைவேறும். இல்லத்தில் அமைதி நிலவும். சண்டை சச்சரவு இல்லாமல் நல்ல நாளாக அன்றைய நாள் இருக்கும். சந்திரனுக்குரிய அந்த தினத்தில் வெள்ளை மலர், பால், தயிர் முதலானவற்றை தானம் அளிப்பதன் மூலம் சிறப்பான பலன்களை பெறலாம். மேலும் ஒருவருடைய ஜாதகத்தில் சுக்கிரன் சரியான இடத்தில் அமையவில்லை என்றால் வெள்ளை நிற உடை அணிந்து ரோஜா பூ, மல்லி, குங்குமப்பூ, தாமரை பூ போன்றவற்றை தானமாக வழங்குவதன் மூலம் நற்பலன்களை அடையலாம்.

- Advertisement -

whiteshirt

செவ்வாய்க்கிழமை:
செவ்வாய்க்கிழமை முருகனுக்கு உகந்த நாளாக இருக்கிறது. இந்த நாளில் சிவப்பு நிற உடை அல்லது ஆரஞ்சு நிற உடை அணிவது நல்ல பலன்களை தரும். வீண் விரயங்கள் ஏற்படாமல் சுபச்செலவுகள் உண்டாக்கும். கடன் தொல்லை நீங்கும். சூரியனுக்குரிய நிறமாக சிவப்பு இருக்கிறது. அன்றைய தினம் மாணிக்கக்கல் பதித்த நகைகளை அணிவதன் மூலம் சிறப்பான பலன்களை பெறமுடியும்.

புதன் கிழமை:
புதன்கிழமை விநாயகருக்கு உகந்த தினமாக இருக்கிறது. புதனுக்குரிய பச்சை நிற உடை அணிவது மகிழ்ச்சிகரமான நாளாக இருப்பதற்கு உதவும். நம் மனதை சமநிலைப்படுத்தி, நரம்பு மண்டலத்தை அமைதியாக்கி சாந்தப்படுத்த கூடியது. கர்ப்பிணி பெண்கள் மற்றும் இதய நோயாளிகள் அடிக்கடி இந்த நிறத்தை அணிவது சிறந்த பலனை நல்கும். புதன் சாதகமான கிரகமாக இருப்பதால் அவரின் கருணை கிடைக்கும்.

yellow

வியாழக்கிழமை:
வியாழன் குருவிற்கு உகந்த நாளாக கருதப்படுகிறது எனவே அந்நாளில் மஞ்சள் நிறம் அணிவது மிகச்சிறந்த பலன்களை வாரி வழங்க வல்லது. எந்த ஒரு காரியத்தை நீங்கள் செய்தாலும் மஞ்சள் நிற உடை அணிந்து செய்வதால் எந்த தடையும் இல்லாமல் வெற்றிகரமாக முடியும். நேர்மறை ஆற்றலை தந்து மனதை அமைதியாக வைத்திருக்கும். நரம்பு மண்டலம் வலுப்படும். அந்நாளில் முந்திரி, பாதாம் போன்றவற்றை தானம் வழங்குவதன் மூலம் சிறப்பான பலன்களை பெறலாம்.

வெள்ளிக்கிழமை:
வெள்ளிக்கிழமை அம்பாளுக்கு உகந்த தினமாக இருக்கிறது. அந்நாளில் சிவப்பு, மஞ்சள், பச்சை போன்ற வண்ணங்களை கொண்ட உடைகளை அணியலாம். வெள்ளிக்கிழமையில் இந்த நிற உடைகளை அணிந்து மங்களகரமாக கோவிலுக்கு சென்று வீட்டில் விளக்கேற்றி வழிபடுவதன் மூலம் தீய சக்திகள் விலகி, வாஸ்து தோஷம் நீங்கி சிறப்பான ஒரு வாழ்க்கையை அமைத்து தரும்.

black

சனிக்கிழமை:
சனிக்கிழமை சனி பகவானுக்கு உரிய நாளாக இருப்பதால் கருப்பு அல்லது கருநீலம், ஊதா போன்ற நிறத்தில் உடைகளை அணியலாம். சனிக்கிழமை அன்று சனிபகவானுக்கு பிடித்த கருப்பு நிற உடையை அணிவதன் மூலம் சனி கொடுக்கக்கூடிய துன்பத்திலிருந்து காத்து மனச்சோர்வு உண்டாகாமல் தடுக்கும். ராகு பகவானுக்கு அன்றைய தினம் கற்பூரம், தாமரை, சந்தனம் போன்றவற்றை தானம் கொடுப்பதன் மூலம் பல நன்மைகளை ஏற்படுத்திக் கொள்ளலாம், சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வழிபடுவதன் மூலமும் பிரச்சனைகளை குறைக்கலாம்.

ஞாயிற்றுக்கிழமை:
ஞாயிற்றுக்கிழமை சூரியனுக்குரிய நிறமான மஞ்சள் நிற உடைகளை அணியலாம். சிவப்பு அல்லது ஆரஞ்சு, பிங்க் போன்ற உடைகளை அணிவது சிறந்த பலன்களை தரவல்லது. இதனால் எதிரி பயம் நீங்கி மனம் அமைதி பெறும்.

இதையும் படிக்கலாமே
இந்த பொருளை பர்சில் வைத்தால் உங்களுக்கு அதிர்ஷ்ட மழை கொட்டும்.

- Advertisement -