ஒரே மாதிரி பிரியாணி புலாவ் சாப்பிட்டு போர் அடிக்குதா. ஒரு முறை இந்த பெங்களூர் பிரியாணியை ட்ரை பண்ணி பாருங்க. செம்ம டேஸ்ட்டா இருக்கும்.

begalore-biriyani
- Advertisement -

நம்ம வீட்ல ஒரே மாதிரி பிரியாணி, புலாவ், தக்காளி சாதம் செய்வோம். ஆனால் அது எல்லாமே கொஞ்சம் போர் அடிக்கிற மாதிரி இருக்கு. புதுசா ஏதாவது ரெசிபி ட்ரை பண்ணலாமா. அப்படின்னு யோசிப்பவர்களுக்கு இந்த குறிப்பு உதவியாக இருக்கும். பெங்களூரில் இப்படித்தான் புலாவ் செய்வார்கள். கொஞ்சம் வித்தியாசமாக தான் இந்த ரெசிபி இருக்கும். ஆனால், இதன் ருசி சூப்பரா இருக்குங்க. இன்னொரு விஷயம் தெரியுமா இந்த பிரியாணிக்கு தக்காளி சேர்க்க வேண்டாம். வாங்க நேரத்தை கடத்தாமல் சூப்பரான அந்த ஒன் பாட் ரெசிபியை நாமும் தெரிந்து கொள்வோம்.

செய்முறை

இதை சீரக சம்பா அரிசியில் செய்தால் சுவையாக இருக்கும். தேவை என்பவர்கள் பாசுமதி அரிசியிலும் செய்து கொள்ளுங்கள். 1 டம்ளர் சீரக சம்பா அரிசியை எடுத்து 3 முறை நல்ல தண்ணீரில் கழுவி விட்டு, 20 நிமிடம் அதை ஊற வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அடுத்தபடியாக ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக் கொள்ளுங்கள். சுத்தம் செய்த 1/2 கைப்பிடி மல்லித்தழை, சுத்தம் செய்த 1/2 கைப்பிடி புதினா, பச்சை மிளகாய் 3, போட்டு கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி இதை விழுதாக அரைக்கனும். காரத்துக்கு பச்சை மிளகாய் தான். உங்களுடைய காரத்திற்கு ஏற்ப பச்சை மிளகாயை கூட்டவோ குறைத்தோ சேர்த்துக் கொள்ளவும். அரைத்த இந்த விழுது அப்படியே இருக்கட்டும்.

அடுத்தபடியாக குக்கரை அடுப்பில் வையுங்க. நெய் 2 ஸ்பூன், எண்ணெய் 2 ஸ்பூன் ஊற்றி, பட்டை, லவங்கம், ஏலக்காய், பிரியாணி இலை, மிளகு 1/2 ஸ்பூன், கல்பாசி, அன்னாசி பூ, இந்த பொருட்களை எல்லாம் போட்டு தாளிக்க வேண்டும். இந்த மசாலா வாசம் எவ்வளவு பிடிக்குமோ இந்த பிரியாணி மசாலா பொருட்களை சேர்த்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அடுத்து இதில் நீளமாக நறுக்கிய பெரிய வெங்காயம் 1 சேர்த்து பொன்னிறம் வரும் வரை வதக்கவும். அடுத்தபடியாக இஞ்சி பூண்டு விழுது 1 டேபிள் ஸ்பூன், சேர்த்து மிக்ஸி ஜாரில் அரைத்து வைத்திருக்கும் அந்த பச்சை விழுதை இதில் ஊற்றி அடுப்பை மிதமான தீயில் வைத்து 4 லிருந்து 5 நிமிடங்கள் நன்றாக வதக்கி விடுங்கள்.

அடுத்தபடியாக இதில் மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன், கரம் மசாலா 1 ஸ்பூன், மல்லித்தூள் 1 ஸ்பூன், போட்டுக்கோங்க. இதோடு நறுக்கிய காய்கறிகளை சேர்க்க வேண்டும். கேரட், பீன்ஸ், பச்சை பட்டாணி, உருளைக்கிழங்கு, இதை எல்லாம் நறுக்கி எல்லா காயும் சேர்ந்தது போல சேர்த்து, ஒரு நிமிடம் போல வதக்குங்கள்.

- Advertisement -

பிறகு 1 கப் அரிசிக்கு 1 1/2 கப் அளவு தண்ணீர் சரியாக இருக்கும். தண்ணீரை ஊற்றி, தேவையான அளவு உப்பு போட்டு, தண்ணீர் நன்றாக கொதி வந்ததும் ஊற வைத்திருக்கும் அரிசியை இதில் போட்டு நன்றாக கலந்து விடுங்கள்.

இதையும் படிக்கலாமே: அட இட்லி தோசைக்கெல்லாம் சைடிஷ்னா இப்படித் தான் இருக்கணும் அப்படின்னு சொல்ற அளவுக்கு செம டேஸ்டான ஒரு வெங்காய தொக்கு ரெசிபி எப்படி செய்யறதுன்னு பார்க்கலாம் வாங்க.

உடனே குக்கரை மூடிடாதீங்க. நன்றாக கொதித்து தண்ணீர் எல்லாம் ஓரளவுக்கு சுண்டி வந்தவுடன், உங்களுடைய வீட்டில் வாழ இல்லை இருந்தால் அதை எடுத்து இந்த பிரியாணியின் மேல் வைத்துவிட்டு, அதன் பின்பு குக்கரை மூடி மிதமான தீயில் ஒரே ஒரு விசில் விட்டால் மணக்க மணக்க சூப்பரான பிரியாணி தயாராகி இருக்கும். வாழை இலே இல்லை என்றால், பிரச்சனை கிடையாது.

எப்போதும் போல குக்கரை மூடி விசில் விட்டு சாப்பிட்டு பாருங்கள். இதனுடைய டேஸ்ட் வேற லெவலுங்க. இதில் தக்காளி தயிர் எல்லாம் எதுவுமே சேர்க்க போது கிடையாது. ஆனாலும் இந்த புலாவ் பிரியாணி சூப்பராக தான் இருக்கும். ரெசிபி பிடிச்சவங்க ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -