அட இட்லி தோசைக்கெல்லாம் சைடிஷ்னா இப்படித் தான் இருக்கணும் அப்படின்னு சொல்ற அளவுக்கு செம டேஸ்டான ஒரு வெங்காய தொக்கு ரெசிபி எப்படி செய்யறதுன்னு பார்க்கலாம் வாங்க.

onion thokku dosai
- Advertisement -

பொதுவாக இட்லி தோசைக்கு அரைக்கப்படும் சட்னி வகைகளில் வெங்காய சட்னியும் ஒன்று. இதை பெரும்பாலும் அரைத்த உடனே சாப்பிட்டு விட வேண்டும். சிறிது நேரம் ஆனால் கூட இந்த சட்னி சாப்பிட நன்றாக இருக்காது. ஆனால் இந்த சமையல் குறிப்பு பதிவில் கொஞ்சம் வித்தியாசமாக அதே நேரத்தில் அதிக டேஸ்ட்டான ஒரு வெங்காய தொக்கு எப்படி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு பதிவில் பார்க்க போகிறோம்.

செய்முறை

இந்தத் தொக்கு செய்ய முதலில் அடுப்பில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றிக் கொள்ளுங்கள். எண்ணெய் சூடான உடன் 1 டேபிள் ஸ்பூன் கடலைப் பருப்பு, 1 டேபிள் ஸ்பூன் உளுத்தம் பருப்பு, 1 ஸ்பூன் சீரகம், 1/2 ஸ்பூன் வெந்தயம், 10 பல் பூண்டு இவை அனைத்தையும் எண்ணெயில் சேர்த்து பருப்பு லேசாக நிறம் மாறும் வரை வதக்கி கொள்ளுங்கள்.

- Advertisement -

அதன் பிறகு 3 பெரிய வெங்காயத்தை மீடியம் துண்டுகளாக நறுக்கி அதையும் சேர்த்து இத்துடன் அரை ஸ்பூன் உப்பு சேர்த்து வெங்காயம் நிறம் மாறும் வரை வதக்க வேண்டும். இந்த சமயத்தில் 10 காய்ந்த மிளகாய், 3 காஷ்மீரி சில்லி இரண்டையும் பத்து நிமிடம் சுடு தண்ணீரில் ஊற வைத்து அதையும் இதில் சேர்த்துக் கொள்ளுங்கள். மேலும் ஒரு சிறிய நெல்லிக்காய் அளவு புளியையும் இதில் சேர்த்து அனைத்தும் நிறம் மாறி வரும் வரை நன்றாக வதக்கி கொள்ளுங்கள்.

இப்போது வதக்கிய அனைத்தையும் ஒரு தட்டில் கொட்டி நன்றாக ஆற வைத்துக் கொள்ளுங்கள். மிக்ஸி ஜாரில் இவையெல்லாம் சேர்த்த பிறகு 1/2 ஸ்பூன் வெல்லம் மட்டும் சேர்த்து கொஞ்சம் கூட தண்ணீர் ஊற்றாமல் நல்ல பைன் பேஸ்ட்டாக அரைத்து கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்போது அடுப்பில் மீண்டும் கடாய் வைத்து 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானவுடன் 1ஸ்பூன் கடுகு, 1 கொத்து கருவேப்பிலை சேர்த்த பிறகு அரைத்து வைத்த இந்த வெங்காய தொக்கை இதில் சேர்த்து நன்றாக வதக்கி விடுங்கள். வெங்காய தொக்கு நாம் வதக்கும் போதே நிறம் மாறி வர வேண்டும். அது வரை நன்றாக வதக்க வேண்டும்.

இதையும் படிக்கலாமே: தக்காளி சேர்க்காமல் புளி ஊற்றி வெங்காயத்தை இப்படி வறுத்த சட்னி செஞ்சு பாருங்க சுவை பிரமாதமா வருமே!

பத்து நிமிடம் இப்படி வதக்கினாலே போதும் தொக்கின் நிறம் நன்றாக சிவந்து வந்து எண்ணெய் எல்லாம் மேலே பிரிந்து வந்து விடும். இந்த தொக்கை ஆற வைத்து ஒரு கண்ணாடி பாட்டில் போட்டு பிரிட்ஜில் ஸ்டோர் செய்து கொண்டால் மூன்று மாதம் கூட வரை வைத்து பயன்படுத்தலாம் ஒன்றும் ஆகாது. இந்த சுவையான வெங்காய தொக்கை நீங்களும் ஒரு முறை செய்து பாருங்கள்.

- Advertisement -