தலைமுடி பிரச்சினைக்கு நீங்கள் செய்யவே கூடாத 8 விஷயங்கள் என்ன தெரியுமா? இதெல்லாம் செஞ்சா இருக்கிற முடியும் கொட்டிடும்!

hair-fall-8
- Advertisement -

இன்று நமக்கு இருக்கும் பெரும்பாலான பிரச்சனையில் தலைமுடி பிரச்சனையும் பிரதானமானதாக இருந்து வருகிறது. இளம் தலைமுறையினருக்கு இளநரையை பிரச்சனையும், முடி கொட்டுதல் பிரச்சினையும் அதிகரித்து காணப்படுகிறது. முப்பது வயதிலேயே பாதி முடியை இழந்து நிற்கும் இன்றைய தலைமுறையினருக்கு தலை முடி பிரச்சனைக்கு தீர்வு தரும் வகையில் பல்வேறு விஷயங்கள் காண்பிக்கப்படுகிறது. அந்த வகையில் எந்த 8 விஷயங்களை தலை முடி பிரச்சனைக்கு நாம் செய்யவே கூடாது என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் இப்போது தெரிந்து கொள்ளவிருக்கிறோம்.

தலை முடிக்கு மருதாணி உபயோகிக்க பலரும் அறிவுறுத்துவார்கள். நீங்கள் மருதாணி இலைகளை எப்பொழுதும் நேரடியாக அரைத்து பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். மருதாணி இலையை காய வைத்து அரைத்து பவுடர் ஆக்கி அதன் பின் அதனை பயன்படுத்துவது தான் தலைமுடிக்கு ஆரோக்கியமானது.

- Advertisement -

தலை முடி பிரச்சனைக்கு கட்டாயம் ஈரத் தலையுடன் தலை வாருவது ஒரு காரணம் தான். தலைமுடி ஈரமாக இருக்கும் பொழுது சீப்பை எந்த காரணம் கொண்டும் நீங்கள் பயன்படுத்துவதை தவிர்க்கவும்.

hair-dryer

ஹேர் டிரையர் பயன்படுத்துபவர்கள் முற்றிலும் தலை முடியை காய வைக்க ட்ரையரைப் பயன்படுத்தாமல், முதலில் நல்ல உலர்ந்த துணியை பயன்படுத்தி ஈரத்தை துடைத்து விட்டு, சிறிது நேரம் வெயிலில் நின்ற பின்னர் ட்ரையரை பயன்படுத்தலாம். அதிகம் டிரையர் பயன்படுத்துவதால் முடியின் வலிமை குறையும்.

- Advertisement -

இயற்கையாகவே நம் முடியில் இருக்கும் வேர்க்கால்கள் ஒருவித எண்ணெயை சுரக்கும். எனவே நாமும் கூடுதலாக எண்ணெய்யை அப்பி கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. முடியானது வறண்டு போனதாக இல்லாமல் இருக்க லேசாக எண்ணெயைத் தடவினால் போதும். வழிய வழிய எண்ணையை தடவினால் அதன் மூலம் எளிதாக வெளிப்புற அழுக்குகள் ஈர்க்கப்பட்டு முடி உதிர்தல் பிரச்சனை ஏற்படுகிறது.

seeyakkai-podi

முடி உதிர்தல் பிரச்சனைக்கு நீங்கள் வீட்டிலேயே சீயக்காய் அரைத்து பயன்படுத்துவது மிகவும் சிறந்தது. கடையில் வாங்கும் சீயக்காயில் சில கெமிக்கல்கள் கலப்பது உண்டு. அது மட்டுமல்லாமல் அதிகமான கெமிக்கல் கலந்துள்ள ஷாம்பு வகைகளையும் தவிர்க்க வேண்டும். மைல்டு ஷாம்பூ பயன்படுத்துவது சிறப்பு!

- Advertisement -

தலை முடி பிரச்சனைக்கு இப்போது அதிகமாக வெங்காயம் மற்றும் பூண்டை அரைத்து தடவ சொல்லுகிறார்கள். வெங்காயம் மற்றும் பூண்டில் இருக்கும் சல்பர் சத்து அதிகம் என்பதால் நம் தலைமுடியில் நேரடியாக படுவதால் தலைமுடிக்கு பாதுகாப்பானது அல்ல எனவே எண்ணெயில் அதனை காய்ச்சி அந்த எண்ணெயை பயன்படுத்துவது தான் சிறந்த வழிமுறையாகும்.

hair-color

இளநரை மற்றும் வெள்ளை முடி பிரச்சனைக்கு ஹேர் கலரிங் செய்பவர்கள் அதனை அடிக்கடி செய்வதும், அதிகமாக செய்வதும் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்றாகும். தேவையான நேரத்தில், தேவையான இடங்களில் செய்து கொள்வது நல்லது. அமோனியா சேர்க்கப்பட்ட ஹேர் கலர் கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டும். இது சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்திவிடும் எனவே கவனம் தேவை.

தலை முடி பிரச்சனைக்கு எந்த ஒரு தீர்வுக்கும் குறிப்பிட்ட கால அவகாசத்தை கொடுத்து இருப்பார்கள். அந்த கால அவகாசத்திற்குள் நாம் அந்த குறிப்பை பயன்படுத்த வேண்டும். அதற்கு மேல் பயன்படுத்தினால் தலை முடியின் வேர் கால்கள் வலிமை இழக்கும். எனவே 10 நிமிடம் என்றால் அந்த பத்து நிமிடம் மட்டுமே ஊற வைத்து தலை முடியை அலசி விட வேண்டும். எனவே நேரக்கட்டுப்பாடு என்பதும் தலைமுடிக்கு மிகவும் முக்கியம் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

- Advertisement -