பூஜையறையை இப்படி மட்டும் நாம் வைத்துக் கொள்ளவே கூடாது! அப்படி இருந்தால் மனதில் 1000 கஷ்டம் வந்துவிடுமாம்.

pooja-room-lemon

நம் வீட்டில் பூஜை அறையை மட்டும் எப்பொழுதும் சுத்தமாக வைத்திருப்பது லட்சுமி கடாட்சத்தை நிலைக்க செய்யும். பெரும்பாலும் பூஜை அறை என்று தனியாக வைத்திருப்பவர்கள் ஏதாவது ஒரு அலமாரியில் தெய்வ படங்களை அமைத்து வைத்திருப்பார்கள். இப்படி பூஜை அறை அல்லாமல் தெய்வ படங்களை வைத்திருப்பவர்கள் கட்டாயம் ஒரு திரை போட்டு மறைத்து வைத்திருப்பது அவசியமாகும். பூஜை அறை திறந்தபடி இருப்பது வீட்டிற்கு அவ்வளவு நல்லதல்ல என்று சொல்வார்கள். இப்படியாக பூஜை அறையில் நாம் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டிய சில விதிமுறைகள் உள்ளன. அவற்றில் சிலவற்றை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

pooja-room

செல்ஃப்களில் பூஜை அறையை அமைத்து வைத்திருப்பவர்கள் கட்டாயம் திரை போட்டு மறைத்து இருப்பது நல்லது. அப்படி போடப்பட்டிருக்கும் திரையானது மஞ்சள் நிறத்தில் இருப்பது விசேஷமான பலன்களை கொடுக்கும். மஞ்சள் நிறம் கொண்ட ஸ்கிரீனை போட்டு வைத்தால் குருவின் அம்சம் கொண்ட யோகம் உண்டாகும். சிவப்பு, பச்சை வர்ணங்களிலும் இந்தத் துணியை அமைக்கலாம்.

பூஜை அறையில் கட்டாயம் இரண்டு நாட்களுக்கு ஒரு முறையாவது சுத்தம் செய்ய வேண்டும். அதாவது எப்படியும் இரண்டு நாட்கள் நாம் அப்படியே விட்டு வைத்து இருந்தால் சிலந்திகள் வலை பின்ன ஆரம்பித்துவிடும். இப்படி பூஜை அறையில் சிலந்திகள் வலை பின்னுவது வீட்டில் தரித்திரத்தை ஏற்படுத்தும். இதற்காகவே இரண்டு நாட்களுக்கு ஒருமுறை பூஜை அறையில் சிலந்திகள் வலை பின்னாமல் பார்த்துக் கொள்வது அவசியமாகும்.

elumichai lemon

கோவில்களில் கொடுக்கப்படும் எலுமிச்சை பழங்கள் பூஜை அறையில் வைத்து இருந்தால், அதை காய்வதற்கு முன்பே அப்புறப்படுத்திவிட வேண்டும். காய்ந்து போன எலுமிச்சை பழங்களை செடிகள் அல்லது நீர்நிலைகளில் போட்டு விடுவது உத்தமம். அவற்றை காய்ந்த பின் குப்பையில் மட்டும் எறியக்கூடாது.

- Advertisement -

கோவிலில் கொடுக்கப்படும் எலுமிச்சை பழங்கள், தேங்காய் போன்றவற்றை வீட்டில் சைவ சமையலுக்கு உபயோகப்படுத்தலாம். அசைவ சமையலில் இவற்றை தவிர்ப்பது நல்லது. கோவிலில் கொடுக்கப்படும் இந்த பொருட்களை கட்டாயம் மீண்டும் சுவாமிக்கு நைவேத்தியம் படைக்க பயன்படுத்தக் கூடாது என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.

thengai-coconut

சுவாமி சிலைகள் வைத்திருப்பவர்கள் வாரம் ஒரு முறையாவது அபிஷேகம் செய்வது உத்தமம். வெறும் தண்ணீரால் விக்ரகங்களுக்கு மந்திரங்கள் கூறி அபிஷேகம் செய்தாலும் போதுமானது. விக்கிரகங்களின் மீது தூசிகள் படியாமல் பார்த்துக் கொள்வது அவசியமான ஒன்றாகும். சுவாமி விக்ரகங்கள் மீது தூசு படிந்தால் அந்த வீட்டில் வறுமை உண்டாகும் என்பது ஐதீகம். எனவே சுவாமி சிலைகளை பராமரிக்க முடியாதவர்கள் அதனை தவிர்ப்பதே நல்லது.

vikragam1

பூஜை அறையில் செம்பு அல்லது பித்தளை சொம்பில் தண்ணீர் வைப்பவர்கள் தினந்தோறும் அதை புதிதாக மாற்ற வேண்டும். ஒரு நாள் வைத்த தண்ணீரை மீண்டும் பூஜை செய்யும் வரை அப்படியே வைத்திருப்பது தவறான செயலாகும். அதனை மறுநாள் கீழே ஊற்றி விட்டு புதிதாக தண்ணீரை வையுங்கள். தினமும் புதிய தண்ணீர் ஸ்வாமிக்கு படைப்பதால் வீட்டில் சுபீட்சம் நிலைத்து இருக்கும்.

பூஜை அறையில் வைக்கப்படும் இந்த தண்ணீரில் துளசி இலைகள் அல்லது பச்சை கற்பூரம் போட்டு வைப்பது விசேஷமானது. தண்ணீரை தினமும் ஒரு வீட்டில் பூஜை அறை மற்றும் வெளிப்புற இடங்களில் பறவைகள் குடிக்கும்படி வைப்பதன் மூலம் நிறைய நன்மைகளை நாம் பெறலாம். வீட்டில் மொட்டை மாடிகளில் குறிப்பாக இதுபோல் மண் சட்டியில் தண்ணீரை வைக்கலாம். தண்ணீர் வைத்து அதன் பக்கத்தில் கோதுமை, அரிசி, கேழ்வரகு போன்ற தானிய வகைகளை வைத்து பறவைகளை உன்ன செய்வது பெரும் புண்ணியத்தை சேர்க்கும்.

இதையும் படிக்கலாமே
1 வெள்ளிக்கிழமை இதை மட்டும் செய்தால் போதும் வருடம் முழுவதும் தடையில்லா பணப்புழக்கம் உங்களிடம் இருக்கும்!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.