இந்த நாளில் பெண்கள் வீட்டில் ஒட்டடை அடித்தால்! ஆண்களுக்கு கடன் அதிகமாகுமாம் தெரியுமா?

sad-cash-cleaning

கடன் சுமை என்பது இன்று பலரும் சுமந்து கொண்டிருக்கும் மிகப்பெரிய சுமையாக உள்ளது. சாதாரணமாக யாருக்கும் கடன் ஏற்படுவது இல்லை. உண்மையில் கடன் சுமை ஏற்படுவதற்கு உங்கள் ஜாதகத்தில் இருக்கும் கிரக நிலைகளும், கர்ம வினைகளும் காரணமாக அமைந்து இருக்கும். கூடுதலாக வீட்டில் நாம் செய்யும் சிறு சிறு தவறுகளும் தரித்திரத்தை உண்டாக்கி கடன் சுமையை அதிகரித்து விடுகிறது. இப்படி நாம் செய்யும் எந்த தவறுகள் கடன் சுமையை அதிகரிக்கின்றன? என்பது தான் இந்த பதிவின் மூலம் பார்க்க இருக்கின்றோம்.

kadan

கடன் சுமை அதிகரிக்க பெரும்பாலும் வீட்டில் இருக்கும் பெண்கள் வீட்டை மகாலட்சுமி கடாட்சத்துடன் வைக்காமல் இருப்பதே காரணமாக இருக்கும். ‘அதெல்லாம் ஒன்னுமில்லைங்க, நாங்க நல்லா தான் சுத்த பத்தமாக வைத்திருக்கிறோம். இருப்பினும் எங்கள் வீட்டில் கடன் அதிகமாக இருக்கிறது’ என்று கூறுபவர்களுக்கு இப்பதிவு விடை அளிக்கும். வீட்டை சுத்த பத்தமாக வைத்திருக்கிறோம் என்கிற பெயரில் ஒரு சிலர் செய்யும் அட்டகாசம் தாங்க முடியாது.

எல்லாக் கிழமையிலும் எல்லாவற்றையும் நாம் செய்துவிடக் கூடாது. குறிப்பிட்ட கிழமைகளில் குறிப்பாக வெள்ளிக்கிழமையில் சுத்தம் செய்யக் கூடாத சில விஷயங்கள் உள்ளன. இவற்றை செய்வதால் வீட்டில் கடன் பிரச்சினை ஏற்படுவதற்கு நிறைய வாய்ப்புக்கள் உள்ளன. உதாரணத்திற்கு வெள்ளிக்கிழமையில் ஒட்டடை அடிப்பது தவிர்க்க வேண்டிய ஒரு விஷயமாக இருக்கிறது. அதிலும் வெள்ளிக்கிழமையில் பெண்கள் ஒட்டடை அடிப்பது கூடவே கூடாது.

ottadai

பொதுவாக பெண்கள் ஒட்டடை அடிப்பது குடும்பத்தில் கடன் பிரச்சினையை உண்டாக்கும் என்பார்கள். ஆண்கள் தான் வீட்டில் ஒட்டடை அடிக்க வேண்டும் என்பது நியதி. மற்ற எல்லா வேலைகளையும் பெண்கள் பார்த்தாலும் இந்த ஒரு வேலையை ஆண்கள் செய்வது தான் வீட்டிற்கு நல்லது. வெள்ளிக்கிழமையில் பெண்கள் ஒட்டடை அடித்தால் மகாலட்சுமியை விரட்டி அடிப்பதற்கு சமம் ஆகும்.

- Advertisement -

அதே போல் வெள்ளிக்கிழமையில் பூஜை அறையை சுத்தம் செய்வது மிகவும் நல்லது. ஆனால் பூஜை பொருட்களை அன்றைய நாளில் சுத்தம் செய்வது கூடாது. வியாழக்கிழமை அன்று பூஜை பொருட்களை கழுவி சுத்தம் செய்துவிட வேண்டும். அதே போல் வீட்டில் வெள்ளிக்கிழமை அன்று மட்டும் அழுக்கு துணிகளை சேர்த்து வைத்திருப்பது கூடவே கூடாது. ஒரு சிலருக்கு வேலை நிமித்தம் காரணமாக தினமும் துணி துவைக்க முடியாமல் இருப்பார்கள். இவர்கள் வாரம் ஒரு முறை தான் துணியைத் துவைப்பார்கள். அப்படி இருப்பவர்கள் வெள்ளிக்கிழமை அன்று துவைப்பதை தவிர்க்க வேண்டும். பொதுவாகவே வெள்ளிக்கிழமையில் அழுக்கு துணிகள் வீட்டில் இருக்கக்கூடாது. இதனால் வீட்டில் கடன் சுமை அதிகரிக்கும்.

pooja-items

பாத்ரூம், கழிவறையையும் இந்த நாளில் சுத்தம் செய்யக்கூடாது. அதே போல் சமையலறையில் அலமாரிகளில் போடப்பட்டிருக்கும் பேப்பர்களை புதிதாக மாற்ற கூடாது. மளிகை பொருட்களை எதுவாக இருந்தாலும் அதனை துடைத்து எடுக்க கூடாது. அதை எல்லாம் மறுநாள் தாராளமாக பார்த்துக் கொள்ளுங்கள். ஆனால் வெள்ளிக்கிழமை அன்று எந்த ஒரு பொருளையும் சுத்தம் செய்வது கூடாது.

toilet-cleaning

அதற்கு பதிலாக நிரப்பி வைப்பது மிகவும் நல்லது. உப்பு, அரிசி, தானியங்கள் போன்றவற்றை வாங்கி நிரப்பி வைக்கலாம். இதனால் அன்னக்குறை ஏற்படாது என்பார்கள். மேலும் மகாலட்சுமி கடாட்சம் உண்டாகும். இதனால் கடன் சுமை குறையும் என்பார்கள். இவற்றையெல்லாம் தவிர்ப்பதன் மூலம் இருக்கின்ற கடன் பிரச்சனையையும் சுலபமாக குறைக்க முடியும் என்கின்ற கருத்தை முன்வைத்து இப்பதிவை முடித்துக் கொள்வோம்.

இதையும் படிக்கலாமே
திருஷ்டி பொருளை தெரியாமல் மிதித்து விட்டால் இதெல்லாம் நடக்குமா? இதில் இருந்து தப்புவது எப்படி?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.