வாழ்வில் தடைகள் நீங்கி, நீங்கள் தொட்டதெல்லாம் வெற்றி அடைய இந்த 3 வார்த்தைகளும், 3 இலைகளுமே போதும்.

shivan2

சிலர் வாழ்க்கையில் மிகவும் கஷ்டப்பட்டு உழைப்பார்கள். தூக்கமில்லாமல், சோம்பேறித்தனத்தை தள்ளிவைத்துவிட்டு, 24 மணிநேரமும் முயற்சி செய்து வேலை செய்து கொண்டிருந்தாலும், சில பேரால் வெற்றி என்ற இலக்கை அடையவே முடியாது. வெற்றி அவர்களிடத்திலிருந்து வெகு தூரத்தில் இருக்கும். இதில் இரண்டாவது ரகமும் உண்டு. கொஞ்சமாகத்தான் உழைப்பார்கள். கஷ்டப்படவே மாட்டார்கள். ஆனால் ஏதாவது ஒரு வேலையை செய்யலாம் என்று நினைத்து தொடங்குவார்கள். அது வெற்றியில் முடியும். அதாவது கஷ்டப்படாமல் சுலபமாக தொட்டதெல்லாம் வெற்றி அடைந்து விடும். இப்படிப்பட்டவர்கள் அதிர்ஷ்டசாலிகள். இவர்கள் அருகில் வெற்றியானது எப்போதுமே இருக்கும்.

sucess

இதில் நீங்கள் எந்த ரகத்தைச் சார்ந்தவர்கள். நீங்கள் அதிர்ஷ்டசாலிகளாக இருந்தால் எந்த பரிகாரமும் தேவையில்லை. வாழ்க்கையை சந்தோஷமாக வாழ்ந்து கொண்டே செல்ல வேண்டியதுதான். ஒருவேளை துரதிஷ்டம் உங்கள் அருகில் இருப்பது போல, நீங்கள் உணர்ந்தால் இந்த பரிகாரத்தை செய்து பலனடையலாம்.

இறை நம்பிக்கையோடு, முழு நம்பிக்கையோடு செய்ய வேண்டிய பரிகாரம் இது. காலையில் சூரிய உதயத்திற்கு முன்பாக எழ வேண்டும். உங்கள் வீட்டிற்கு அருகில் எங்கேயாவது அரசமரம் இருந்தால், அந்த அரசமரம் இருக்கும் இடத்திற்கு நீங்கள் சென்று, சிவபெருமானை வேண்டி அந்த மரத்திலிருந்து மூன்று இலைகளைப் பறித்துக் கொள்ள வேண்டும்.

முடிந்தால் அந்த மரத்தடியிலேயே அமர்ந்து இந்த 3 இலைகளை உங்கள் வலது உள்ளங் கைகளில் வைத்துக் கொண்டு, சிவபெருமானை நினைத்து ‘ஓம் நமசி வசி’ என்ற மூன்று வார்த்தை கொண்ட இந்த மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். முடியாதவர்கள் முந்தைய நாளே அரச இலைகளை உங்கள் வீட்டுக்கு எடுத்து வந்து வைத்துக் கொள்ளலாம்.

- Advertisement -

காலையில் எழுந்து சுத்தபத்தமா குளித்து முடித்துவிட்டு, உங்கள் பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்துவிட்டு, இந்த அரச இலைகளை உங்கள் கைகளில் வைத்துக் கொண்டு, ‘ஓம் நமசி வசி’ என்ற மந்திரத்தை 108 முறை உச்சரித்தாலும் தவறு கிடையாது. வீட்டிலும் இந்த பரிகாரத்தை தாராளமாக செய்யலாம்.

shiva

இதை பரிகாரம் என்று சொல்வதைவிட, முழுமையான இறைவழிபாடு என்று தான் சொல்ல வேண்டும். முழு நம்பிக்கையோடு அரச இலைகளை உங்கள் கையில் வைத்துக்கொண்டு, எல்லாம் உங்கள் வசம் ஆகவேண்டும் என்று எம்பெருமானை வேண்டிக்கொண்டு, இந்த மந்திரத்தை உச்சரிப்பவர்களுக்கு வெற்றி நிச்சயம் உண்டு. எதிர்காலத்தில் அரச வாழ்வு கிடைப்பதற்கு கூட நிறையவே வாய்ப்பு உள்ளது. இந்த வழிபாட்டினை இத்தனை நாட்கள் தான் செய்யவேண்டும் என்ற எந்த அவசியமும் கிடையாது. தினமும் கூட செய்து வரலாம்.

arasa-ilai

முக்கியமான வேலைகளுக்கு நீங்கள் செல்லும் நேரங்களில், இந்த மந்திரத்தை உச்சரித்து, உரு ஏற்றி வைத்திருக்கும் அந்த இலையை, உங்களுடன் கொண்டு போனால் நீங்கள் செல்லும் காரியம் தடைபடாமல் நடக்கும். கடனை வசூல் செய்ய சென்றாலும், அவசியமான தேவைகளுக்காக கடன்பெற சென்றாலும் இந்த இலைகளை உங்கள் பாக்கெட்டில் வைத்துக்கொள்ளலாம்.

kadan

ஒரு வாரத்திற்கு கூடுமானவரை அந்த இலைகள் வாடாமல் இருக்கும். அந்த இலைகளை உங்கள் பூஜை அறையில் வைத்து விட்டு, மீண்டும் உங்கள் கையில் வைத்து இந்த மந்திரத்தை உச்சரிக்க, பழைய இலைகளை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். ரொம்பவும் காய்ந்தவுடன் மீண்டும் புதிய இலைகளை மாற்றிக்கொள்வது நல்லது. பழைய இலைகளை கால் படாத இடங்களில் போட்டுவிடலாம். நம்பிக்கையுள்ளவர்கள் நம்பிக்கையோடு செய்து பலன் அடைய வேண்டும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
உங்க வீட்டு கண்ணாடியின் முன்பு இந்த ஒரு பொருளை, இப்படி வையுங்க! கஷ்டம் எல்லாம் காணாமல் போய், காசு பணம் கொட்ட தொடங்கிவிடும்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.