நீங்கள் சேமித்த பணத்தை இந்த இடத்தில் மறைத்து வைக்கும் பழக்கம் உங்களுக்கு உள்ளதா?

money

பொதுவாகவே மனிதர்கள் அனைவரும் தான் சேமித்து வைத்த பணத்தை ஓரிடத்தில் பத்திரமாக வைக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களாகத் தான் இருப்பார்கள். வங்கியில் கூட சேமிக்காமல் தனது வீட்டிலேயே ஏதாவது ஒரு இடத்தில் மறைத்து வைப்பார்கள். அதில் தவறு ஒன்றும் இல்லை. சேமிப்பு பழக்கம் நல்ல பழக்கம் தான். ஆனால் சிலர் அந்த பணத்தை பூஜையறையில் மறைத்து வைப்பார்கள். இந்த பழக்கம் தவறு.

Pooja room

பல பேர் கைகளில் சென்று வந்த அந்த பணத்தை பூஜை அறையில் வைப்பது தவறு என்பது சிலரின் கூற்று. அதாவது பணம் என்பது நல்ல காரியத்திற்கும் செலவழிக்கப்படுகிறது. கெட்ட காரியத்திற்கும் செலவழிக்கப்படுகிறது. அதை தீட்டு உள்ளவர்கள் கையில் தொடுகிறார்கள். தீய எண்ணம் கொண்டவர்களும் கையில் தொடுகிறார்கள். இப்படிப்பட்டவர்கள் தொட்டால் பணத்தின் புனிதம் போய்விட்டது என்று அர்த்தமாகி விடுமா? பணம் என்பது அந்த மகாலட்சுமியின் அம்சம். இதற்கு எந்த வகையான தீட்டும் இல்லை. அது ஒரு புனிதமான பொருள் தானே. அது யார் கைகளுக்கு எப்படி சென்று வந்தாலும் அதன் மதிப்பு அதுதான். அப்படி என்றால் இந்தப் பணத்தை எதற்காக கோவில் உண்டியலில் போடுகிறார்கள்? ஆகவே பணத்தை பூஜை அறையில் சாமியின் முன்பு வைத்து ஆசீர்வாதம் பெற்று எடுத்துக் கொள்ளலாம் அதில் எந்த தவறும் இல்லை. இதேபோல் உண்டியல் காசு அல்லது கோவிலுக்கு செல்வதற்காக சேமிக்கப்படும் காசு இவைகளெல்லாம் பூஜையறையில் வைத்துக்கொள்ளலாம்.

ஆனால் நீங்கள் சேமித்த பணத்தை மட்டும் அந்த இடத்தில் வைக்காதீர்கள் என்று தான் கூறப்பட்டுள்ளது. நீங்கள் சேமித்த அந்த பணமானது 100 ஆகவோ 200 ஆகவோ இருந்தால் அதில் பெரிய பாதிப்புகள் எதுவும் தெரியாது. ஆனால் ஒரு லட்சம், இரண்டு லட்சம் வரையிலான பணத்தைக் கொண்டு போய் பூஜை அறையில் சாமிக்கு பின்னாலோ அல்லது சாமி அரைகிலோ மறைத்து வைத்திருந்தால் அது கண்டிப்பான தவறான விஷயமாக கருதப்படுகிறது.

poojai arai

நாம் இறைவனை வழிபாடு செய்யும் சமயத்தில் முழுமனதோடு இறைவனை வழிபட வேண்டும் என்பதுதான் முறையான ஒன்று. ஆனால் நீங்கள் பூஜை அறைக்குள் சென்று அந்த இறைவனை பார்க்கும்போது சாமி கும்பிட வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு வராது. உங்களது சிந்தனை எல்லாம், நீங்கள் சேமித்த அந்த பணத்தின் மீதே இருக்கும். அந்தப் பணம் பத்திரமாக தான் இருக்கின்றதா? அந்த பணத்தை வேறு ஏதாவது தேவைக்கு பயன்படுத்திக் கொள்ளலாமா? அதாவது உங்களின் சிந்தனைகள் அனைத்தும் அந்த பணத்தின் மீதுதான் போகுமே தவிர இறைவழிபாட்டில் மீது போகாது. இதனால்தான் நம் முன்னோர்கள் பணத்தை பூஜை அறையில் வைக்கக் கூடாது என்று கூறியுள்ளார்கள். நம் மக்கள் இந்தக் கூற்றை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றி, பல பேர் கைக்கு சென்ற பணத்தை சாமி அறையில் வைக்க கூடாது என்று திசை திருப்பி விட்டார்கள். எந்த ஒரு கருத்தாக இருந்தாலும் அதில் உள்ள முழு அர்த்தத்தையும் தெரிந்து கொண்டு பின்பற்றுவது நல்லது. பணத்தை பத்திரமாக வைப்பது நம் கடமையாக இருந்தாலும், அந்தப் பணத்தை நமக்கு கொடுத்த, இறைவனை முழுமனதோடு வழிபடுவதும் நம் கடமைதான் என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே
வீட்டில் சுபகாரியங்கள் தொடர்ந்து தடைபட்டுக் கொண்டே இருந்தால் இதுதான் காரணம்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Dont hide money in pooja room. Never hide money in pooja room. Poojai araiyil vaika kodathavai. Poojai arai ragasiyam. If hide money in the pooja room?