படுக்கை அறையில் இருக்கக் கூடாத பொருள் என்ன? இந்த பொருள் இருந்தால் கணவன் மனைவிக்குள் ஒற்றுமையே இருக்காதாம் தெரியுமா?

couple-fight-bedroom
- Advertisement -

படுக்கை அறையில் இருக்க கூடாத ஒரு முக்கியமான பொருள் என்ன? இந்த பொருள் எந்த கிரகத்தினுடைய காரகத்துவம் பெற்றுள்ளது? இதனால் விளையக் கூடிய எதிர்மறை விளைவுகள் என்ன? ஏன் இதை படுக்கை அறையில் வைக்கக் கூடாது? என்பது போன்ற வாஸ்து ரீதியான மற்றும் ஜோதிட ரீதியான கேள்விகளுக்கான பதிலை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து இருக்கிறோம், வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

படுக்கை அறையில் தான் பெரும்பாலான சண்டை, சச்சரவுகள் ஆரம்பிக்கின்றன. அன்னோன்யமாக இருக்கக் கூடிய கணவன், மனைவியும் இந்த பொருட்களை குவித்து வைப்பதால் சண்டை போட ஆரம்பித்து விடுவார்களாம். இந்த பொருட்கள் சிலர் பல வருடங்களாக குவித்து வைத்திருப்பார்கள். இதனால் அவர்களுக்குள் நிறையவே மன சங்கடங்களும், வெறுப்புகளும் வருவதற்கான வாய்ப்புகளும் அமைந்திருக்கும். எனவே இத்தகைய பொருட்களை படுக்கை அறையில் இருந்து அகற்றுவது ரொம்பவே நல்லது.

- Advertisement -

படுக்கை அறையில் இருக்க கூடாத முக்கியமான ஒரு பொருள் ‘துருப்பிடித்த இரும்பு’ ஆகும். இரும்பு சாமான்கள், இரும்பு கலன்கள், இரும்பு சம்பந்தப்பட்ட டூல்ஸ் போன்றவை பரண் மேல் வைத்திருப்பது அல்லது கட்டிலுக்கு அடியில் வைத்திருப்பது பல வீடுகளில் உண்டு. இப்படி இரும்பு பொருட்கள் வைத்திருந்தால் கண்டிப்பாக அதை பராமரித்து பத்திரமாக வைத்திருக்க வேண்டும். துருப்பிடித்து போய், இரும்பு உதிர ஆரம்பித்தால் கண்டிப்பாக அங்கு கெட்ட சக்திகளின் ஆதிக்கம் அதிகரிக்க துவங்கும்.

இரும்பு சனி பகவானுடைய காரகத்துவம் கொண்டுள்ள ஒரு பொருளாகும். இரும்பு சனி பகவானுக்கு உரிய உலோகம் என்பதால் இரும்பு சம்பந்தப்பட்ட பொருட்கள் பொதுவாக வீட்டில் அதிகம் இருக்கக் கூடாது. இரும்பு சம்பந்தப்பட்ட பொருட்கள் இருந்தாலும், அதை முறையாக பராமரிக்க வேண்டும். துருப் பிடிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இரும்பு டூல்ஸ் பாக்ஸ் வைத்திருக்கிறீர்கள் என்றால் அதில் சாக்பீஸ் அல்லது கரி துண்டு போட்டு வைத்தால் சீக்கிரம் துருப் பிடிக்காமல் இருக்கும். இது போல ஏதாவது ஒரு பாதுகாப்பு முறையை நீங்கள் செய்து வைக்க வேண்டும்.

- Advertisement -

படுக்கை அறைக்கு கீழே கண்டிப்பாக இரும்பு சம்பந்தப்பட்ட பொருட்கள் இருக்கக் கூடாது. இது நிம்மதியான தூக்கத்தை கெடுக்கும் என்று கூறுவார்கள். அது மட்டும் அல்லாமல் இரும்பு துருப்பிடித்து உதிர ஆரம்பித்தால் குடும்பத்தில் சண்டையையும், சச்சரவுமும் அதிகரிக்க துவங்கும். இங்கு சனி கிரகத்தின் தாக்குதலும் இருக்கும். உங்கள் ராசிக்கு ஏற்ப சனி பகவானுடைய அம்சம் எப்படி இருக்கிறதோ, அதற்கு ஏற்ப உங்களுடைய பிரச்சனைகளும் கண்டிப்பாக இருக்கும்.

அதே போல படுக்கை அறையில் கனமான இரும்பு பொருட்களும் இருக்கக் கூடாது. கனமான பீரோக்கள் அல்லது கனமான இரும்பு சம்பந்தப்பட்ட எந்த பொருட்களையும் படுக்கை அறையில் வைக்க கூடாது. அதை வரவேற்பறையில் வைத்துக் கொள்ளலாம். படுக்கை அறையில் ஈரமான துணிகளை ஒருபோதும் வைத்திருக்கக் கூடாது. படுக்கை அறையில் வாஷிங் மெஷின் வைத்திருப்பவர்கள் கண்டிப்பாக கவனமாக இருக்க வேண்டும். படுக்கை அறையில் இருக்கும் கண்ணாடி திரை போட்டு மூடப்பட்டிருக்க வேண்டும். படுக்கை அறை வாஸ்து பொருட்களை வாங்கி வைத்தால் கணவன் மனைவிக்குள் சண்டை சச்சரவுகள் வராமல் இருக்கும். இப்படி வாஸ்து ரீதியாகவும், ஜோதிட ரீதியாகவும் படுக்கை அறையில் இருக்கக் கூடாத சில விஷயங்கள் உண்டு. இதை நீங்கள் மாற்றி அமைப்பதன் மூலம் உங்களுடைய பிரச்சனைகள் தீர்வதற்கான வாய்ப்புகளும் உண்டு.

- Advertisement -