உங்க வீட்டு தோசை கல்லை சுத்தம் செய்து கை வலிக்குதா? தோசை கல்லை, தோசை மாவு வைத்தே சுத்தம் செய்ய சூப்பர் டிப்ஸ் உங்களுக்காக.

dosai
- Advertisement -

இரும்பு தோசை கல்லை பயன்படுத்துபவர்களுக்கு அந்த தோசை கல்லை சுத்தம் செய்வது ஒரு பெரிய வேலையாக இருக்கும். தொடர்ந்து தோசை சுட்டு கொண்டு இருக்கும் தோசை கல்லில் சுற்றிலும் பார்த்தால் அந்த எண்ணெய் பிசுக்கு அப்படியே ஒட்டி இருக்கும். பிசுபிசுப்பாக இருக்கும் அந்த இடத்தில் தோசை வார்த்தால் சரியாக வராது. மாவு கல்லோடு ஒட்டிக் கொள்ளும். இப்படிப்பட்ட தோசை கல்லை சுத்தம் செய்ய நிறைய வழிகள் உள்ளது. அவை எல்லாவற்றையும் விட ஒரு சுலபமான வழியைத்தான் இன்று நாம் பார்க்கப் போகின்றோம்.

தோசை கல்லின் ஓரங்களில் இருக்கும் பிசுபிசுப்பை நீக்க தோசை மாவு ஒன்றே போதும். அது கூட நல்ல தோசை மாவை பயன்படுத்த வேண்டும் என்று அவசியம் கிடையாது. டப்பாவில் கடைசியாக காலியாகும் போது மிகவும் புளித்த தோசை மாவு இருக்கும் அல்லவா. அதை கீழே கொட்டாமல் இப்படி பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

- Advertisement -

பிசுபிசுப்பாக இருக்கும் தோசை கல்லை எடுத்துக் கொள்ளுங்கள். அதன் மேலே புளித்த தோசை மாவை நன்றாக தடவி அப்படியே வைத்து விடுங்கள். 15 இல் இருந்து 20 நிமிடங்கள் அப்படியே ஊறட்டும். அதன் பின்பு ஒரு கூர்மையான கத்தி அல்லது கூர்மையான கரண்டி ஏதாவது ஒன்றை எடுத்து தோசைக்கல்லின் ஓரத்தில் இருக்கும் எண்ணெய் பிசுக்கை அப்படியே சீவி எடுத்தால் லேயர் லேயராக எண்ணெய் பிசுக்கு நீங்கி வந்துவிடும். நம்ப முடியவில்லையா. உங்க வீட்ல ஒரு வாட்டி ட்ரை பண்ணி பாருங்க

தோசைக்கல்லின் ஓரங்களில் மட்டும் தான் இப்படி சுத்தம் செய்ய வேண்டும். நடுவில் மாவு படலாம் தவறு கிடையாது. ஆனால் கத்தியை வைத்தோ கரண்டியை வைத்தோ ரொம்பவும் நடுப்பகுதியில் சொரண்டிவிட்டால் மீண்டும் தோசைக்கல் பழகுவதற்கு இரண்டு நாட்கள் எடுக்கும் அவ்வளவுதான்.

- Advertisement -

இதே போல இந்த புளித்த தோசை மாவை வைத்து உங்கள் வீட்டில் இருக்கும் ஸ்டீல் குழாய்களை தேய்த்து கழுவினால் அதில் இருக்கும் உப்பு கறை சீக்கிரம் நீங்கிவிடும். குளியலறையில் பயன்படுத்தும் பக்கெட் போன்ற பிளாஸ்டிக் பொருட்களில் லேசாக உப்பு கறை படிந்து இருந்தால் அதையும் இந்த புளித்த மாவை வைத்து தேய்த்து கழுவினால் உப்பு கறை ஒட்டாமல் பாத்ரூமில் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் பளபளப்பாக இருக்கும்.

இதே புளித்த மாவில் இன்னொரு குறிப்பையும் பார்த்துவிடலாம். உங்களுடைய வீட்டில் நீங்கள் ரோஜா செடி, மல்லி பூ செடி, அல்லது மற்ற காய்கறிகள் செடி மற்ற பூச்செடிகள் வளர்த்து வருகிறீர்கள் என்றால் அதற்கு இந்த புளித்த மாவை பயன்படுத்தலாம். 1 லிட்டர் தண்ணீரில் ஒரு குழி கரண்டி அளவு புளித்த மாவை ஊற்றி நன்றாக கலந்து இந்த தண்ணீரை அந்த செடிகளுக்கு ஊற்றும் போது செடிகள் செழிப்பாக வளரும். கொத்து கொத்தாக பூக்கள் காய்கள் காய்க்க தொடங்கும்.

காரணம் புளித்த மாவில் நுண்ணுயிர் சத்து அதிகமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நல்ல பாக்டீரியா என்று சொல்லுவார்கள் அல்லவா அது இந்த புளித்த மாவில் அதிகம் உள்ளது. அதை செடிகளில் சேர்க்கும்போது செடிகளுக்கு ஊட்டச்சத்து கிடைத்து செழிப்பாக வளர்ந்து நிறைய காய்கள் பூக்களை கொடுக்கும் என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். உங்களுக்கு மேலே சொன்ன வீட்டு குறிப்புகள் பிடித்திருந்தால் முயற்சி செய்து பாருங்கள். நிச்சயமாக நல்ல ரிசல்ட் கிடைக்கும்.

- Advertisement -