நீண்ட காலம் பயன்படுத்தாத தோசை கல்லில் எப்படி மொறுமொறு என்று மீண்டும் எளிதாக தோசை வார்ப்பது? தோசை கல்லை பழக்குவது இவ்வளவு எளிதா?

iron-dosa-kal-caustic-soda
- Advertisement -

பயன்படுத்தாத தோசை கல் எல்லோருடைய வீட்டிலும் நிச்சயம் நீண்ட காலம் எங்காவது ஒரு மூலையில் அடைபட்டுக் கொண்டிருக்கும். எப்பொழுதும் நான்ஸ்டிக் தோசை கல்லை விட, இரும்பு தோசைக்கல் தான் நீண்ட காலம் உழைக்கக் கூடியது மற்றும் ஆரோக்கியமானதும் கூட! அப்படி இருக்க இந்த பயன்படுத்தாத தோசை கல்லை மீண்டும் எடுத்து சுத்தம் செய்து மொறுமொறுன்னு தோசை வார்ப்பது எப்படி? என்பதைத் தான் இந்த வீட்டுக்குறிப்பு பதிவின் மூலம் இனி தொடர்ந்து நாம் அறிந்து கொள்ள இருக்கிறோம்.

பயன்படுத்தாத இந்த இரும்பு தோசைக்கல் ஆரம்பத்தில் வாங்கிய புதிதில் பழகுவது கூட சற்று சிரமமான காரியம் தான். புதிதாக வாங்கிய இரும்பு கல்லை சாதம் வடித்த கஞ்சி தண்ணீரில் ஒரு நாள் முழுவதும் மூழ்கும்படி ஊற விட்டு விடுங்கள். அதன் பிறகு மறுநாள் லேசாக விளக்கெண்ணெய் அல்லது நல்லெண்ணெய் தடவி காய விடுங்கள். அதன் பிறகு சூட்டுடன் தண்ணீர் தெளித்து வெங்காயத்தை இரண்டாக வெட்டி அதன் பாதி பகுதியை அதன் மீது தேய்த்து அதன் பிறகு முதல் முதலில் ஒரு முட்டையை ஆஃப் பாயில் அல்லது ஆம்லெட் போட்டு கொள்ளுங்கள். அதன் பிறகு நீங்கள் தோசை வார்த்தால் ரொம்பவே எளிதாக தோசை மொறுமொறுன்னு வார்க்க வரும்.

- Advertisement -

அதைப் போலவே பயன்படுத்தாத பழைய இரும்பு தோசை கல்லை முதலில் காஸ்டிக் சோடாவை வாங்கி சுத்தம் செய்யலாம். இதற்கு ஒரு வாயகன்ற பக்கெட்டில் பாதி அளவிற்கு தண்ணீரை பிடித்துக் கொள்ளுங்கள். ஒரு கைப்பிடி அளவிற்கு காஸ்டிக் சோடாவை போட்டு கொள்ளுங்கள். பின்பு நீங்கள் உங்களுடைய இந்த பழைய இரும்பு தோசை கல்லை அதில் மூழ்கும் படி செய்யுங்கள். காஸ்டிக் சோடாவை கைகளில் தொடக்கூடாது என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

காஸ்டிக் சோடா பெரும்பாலும் சோப்பு தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது. மேலும் உங்களுடைய சிங் அல்லது தண்ணீர் செல்லும் குழாய்களில் ஏதாவது அடைப்பு இருந்தால் கொஞ்சம் காஸ்டிக் சோடாவை போட்டு சுடுதண்ணீரை அரை பக்கெட் அளவிற்கு ஊற்றி விட்டால் போதும், எத்தகைய அடைப்புகளையும் கொஞ்ச நேரத்தில் கரைத்து வெளியில் தள்ளி விடும். தண்ணீர் அடைப்பு அனைத்தும் சரியாகி மீண்டும் தண்ணீர் இலகுவாக செல்ல உதவும்.

- Advertisement -

இந்த காஸ்டிக் சோடா பயன்படுத்தி ஒரு நாள் முழுவதும் உங்களுடைய தோசை கல்லை ஊற வையுங்கள். நீங்கள் என்னதான் புளி தண்ணீர், எலுமிச்சை, வினிகர், பேக்கிங் சோடா, உப்பு போன்றவற்றை பயன்படுத்தினாலும் காஸ்டிக் சோடா தரும் ரிசல்ட்டை அவ்வளவு சுலபமாக இவைகள் தருவதில்லை. பின்பு மறுநாள் காலையில் இந்த தண்ணீரை எல்லாம் கீழே ஊற்றிவிட்டு தோசை கல்லை எடுத்து சோப்பு மற்றும் இரும்பு நார் கொண்டு நன்கு தேய்த்து கொடுத்தால் போதும் விடாப்பிடியான அழுக்குகள், கரைகள், எண்ணெய் பிசக்குகள் அனைத்தும் நீங்கிவிடும்.

இதையும் படிக்கலாமே:
தேங்காய் எண்ணெயை இப்படி செய்யுங்கள் போதும் ஒரு கொசு கூட உங்களை கடிக்கவே செய்யாது தெரியுமா? இப்படி செய்தால் பூச்சிக்கடி, கொசுக்கடியால் இனி குழந்தைகள் அழாது இருக்குமே!

அதன் பிறகு நீங்கள் தோசை கல்லில் சாதம் வடித்த கஞ்சி தண்ணீரை ஊற்றி ஒரு மணி நேரம் ஊற விடுங்கள். அதன் பிறகு விளக்கெண்ணெய் அல்லது நல்லெண்ணெய் தடவி காய விடுங்கள். பிறகு தண்ணீர் தெளித்து சுத்தம் செய்துவிட்டு ஒரு ஆம்லெட் போடுங்கள். ஒவ்வொரு முறை தோசை வார்க்கும் பொழுதும் எண்ணெயை நன்கு தடவ வேண்டும். நன்கு பழகிய பின்பு தான் எண்ணெயை குறைக்க வேண்டும். இப்பொழுது தோசை வார்த்தால் எப்பேர்ப்பட்ட பழைய தோசை கல்லும் நன்கு மொறுமொறுன்னு தோசையை சுட்டு தரும்.

- Advertisement -