தேங்காய் எண்ணெயை இப்படி செய்யுங்கள் போதும் ஒரு கொசு கூட உங்களை கடிக்கவே செய்யாது தெரியுமா? இப்படி செய்தால் பூச்சிக்கடி, கொசுக்கடியால் இனி குழந்தைகள் அழாது இருக்குமே!

mosquito-coconut-oil
- Advertisement -

கொசுக்கடி மற்றும் பூச்சி கடி தொந்தரவு அதிகம் இருக்கும் இல்லங்களில் என்னதான் லிக்வீட்டுகள் போட்டு வைத்தாலும் கொசு மட்டும் ஒழிந்த பாடில்லை என்று புலம்புவார்கள். அப்படிப்பட்டவர்கள் தேங்காய் எண்ணெயை இப்படி செய்து கொள்ளும் பொழுது ஒரு கொசு கூட உங்களை கடிக்காமல் பாதுகாக்கலாம். குறிப்பாக குழந்தைகள் அழாமல் நிம்மதியாக தூங்க இந்த வீட்டுக்குறிப்பு உங்களுக்கு உபயோகமாக இருக்கும். வாங்க கொசு கடிக்காம இருக்க இனி என்ன பண்ணலாம்? என்று பார்ப்போம்.

கொசு கடிக்காமல் இருக்க செயற்கை கெமிக்கல் கலந்த லிக்விட்களை பயன்படுத்தினால் மூச்சு திணறல் வருவதற்கு வாய்ப்புகள் உண்டு. சுவாச பிரச்சனைகள் இருப்போர் பெரும்பாலும் இதனை தவிர்ப்பது நல்லது. இதற்கு பதிலாக ஓடமஸ் தடவி பலரும் தூங்குவது உண்டு. ஆனால் இதுவும் கூட நீண்ட நேரம் நிற்காது. எனவே நீங்கள் கொஞ்சம் தேங்காய் எண்ணெயை இப்படி செய்து வைத்து தடவினால் இரவு முழுவதும் ஒரு கொசு கூட உங்களை நெருங்காது.

- Advertisement -

இதற்கு முதலில் ஒரு பாத்திரத்தில் ஆறு டீஸ்பூன் அளவிற்கு தேங்காய் எண்ணெயை ஊற்றிக் கொள்ளுங்கள். ரெண்டு கொத்து வேப்பிலையை உருவி சேருங்கள். இதனுடன் ரெண்டு சிறிய கற்பூர வில்லைகளை நொறுக்கி சேருங்கள். பின்னர் பாத்திரத்தை அடுப்பில் வைத்து நன்கு தேங்காய் எண்ணெயை கொதிக்க விட வேண்டும். தேங்காய் எண்ணெய் கொதிக்கும் பொழுது கற்பூரம் மற்றும் வேப்பிலை இலையின் சாறு அதில் இறங்கும். எண்ணெயின் நிறம் மாறுபடும்.

இந்த சமயத்தில் நீங்கள் அடுப்பை அணைத்து அப்படியே குளிர வைத்து விடுங்கள். சூடு இல்லாமல் நன்கு குளிர்ந்ததும் இதனை வடிகட்டி ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ளுங்கள். இந்த எண்ணெயை நீங்கள் கை, கால், முகம், கழுத்து போன்ற பகுதிகளில் லேசாக தடவிக் கொள்ளலாம். வெளிப்புறத்தில் தெரியும் உடல் பாகங்களில் இதை தடவி இரவில் தூங்கினால் நிம்மதியாக நீங்கள் தூங்கலாம். கொசு, பூச்சி போன்ற எந்த தொந்தரவும் இல்லாமல் இருக்கும்.

- Advertisement -

குறிப்பாக குழந்தைகளுக்கு உடல் முழுவதும் இதை தடவி தூங்க வைத்தால் ஒரு கொசு கூட உங்கள் குழந்தையை நெருங்காது. கடிக்கவும் செய்யாது. கொசு மட்டுமல்லாமல் எந்தவிதமான பூச்சி தொந்தரவுகளும் இருக்காது. இந்த வாசம் பூச்சிகளுக்கு பிடிப்பதில்லை எனவே பூச்சிகள் உங்கள் குழந்தையை நெருங்காது பாதுகாக்கலாம். இது ஒரு சிறந்த மாய்ஸ்ரைசிங் என்பதால் நீங்கள் காலையில் வெதுவெதுப்பான தண்ணீரில் குளித்தால் உங்களுடைய உடல் ரொம்பவே புத்துணர்ச்சியாக இருக்கும்.

இதையும் படிக்கலாமே:
இயற்கையாக மை தயாரிப்பது எப்படி? 10 பைசா செலவில்லாமல் வீட்டிலேயே 10 நிமிஷத்தில் கண் மை இப்படித்தான் தயாரிக்கணுமா?

நீங்கள் இதற்கு பிசுபிசுப்பு இல்லாத தேங்காய் எண்ணெயை பயன்படுத்தினால் இன்னும் சிறப்பு! இப்பொழுது பிசுபிசுப்பு இல்லாத எண்ணெய் கூட விற்பனைக்கு இருக்கிறது. இயற்கையான முறையில் இந்த வகையில் நீங்கள் கொசு மற்றும் பூச்சிகளிடம் இருந்து பாதுகாப்பாக இருக்க முடியும். இதற்காக நூற்றுக்கணக்கில் செலவு செய்து லிக்விட்களை வாங்கி மாட்டி இருக்கின்ற உடல் நலத்தையும் கெடுத்துக் கொள்ள வேண்டாம். இப்படி உடலில் பூசிக் கொள்ள விரும்பாதவர்கள் வேப்பிலையை சாம்பிராணி போடும் தூப காலில் போட்டு சிறிதளவு சாம்பிராணி போட்டு புகைத்து எரியவிட்டு அதன் புகையை மலையில் வீடு முழுவதும் காட்டி பிறகு ஜன்னல், கதவுகளை அடைத்து விடுங்கள். ஒரு கொசு கூட உங்கள் வீட்டில் சுற்றாது.

- Advertisement -