இரும்பு தோசை கல்லை மாதத்திற்கு ஒரு முறை இப்படி செஞ்சி வச்சிடீங்கன்னா போதும் எப்ப தோசை ஊற்றினாலும் நல்லா மொறு மொறுன்னு கிறிஸ்ப்பியா கல்லில் ஒட்டாமல் வரும். இனி உங்க ஆயுசுக்கும் தோசை கல்லை மாற்ற வேண்டிய அவசியமே இல்லை.

dosai
- Advertisement -

பொதுவாக இரும்பு தோசை கல்லை அடிக்கடி சோப்பு போட்டு தேய்க்க கூடாது. அப்படி தேய்த்தால் கல்லில் உள்ள சீசனிங் போய் விடும். இதனால் தோசை நன்றாக ஊற்ற வராது. அதற்காக அப்படியே வைத்தாலும் தோசை கல்லை சுற்றிலும் எண்ணெய் பிசுக்கு படிந்து கருப்பாக இருக்கும். இதில் தோசை ஊற்றி சாப்பிடுவது ஆரோக்கியமானதும் அல்ல. இப்போது இதை எப்படி சரி செய்வது என்பதை தான் இந்த வீட்டு குறிப்பு பதிவில் நாம் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

தோசை கல்லை பொறுத்த வரையில் ஒரு தோசை கல்லில் சப்பாத்தி போன்றவை செய்வதற்கும், இன்னொன்று தோசை ஊற்றுவதற்கு என தனியாக வைத்திருப்பார்கள். இதற்கு காரணம் சப்பாத்தி போட்ட பிறகு அந்த கல்லில் தோசை ஊற்றினால் சரியாக வராது. இந்த முறையை கையாண்டால் தனித்தனி தோசை கல்லாக வைத்துக் கொள்ளாமல் ஒரே தோசை கல்லில் இரண்டையுமே சுலபமாக செய்யலாம். அதுமட்டுமின்றி முட்டை ஆம்லெட் அல்லது சப்பாத்தி இரண்டில் எதை செய்த பின்பும் உடனே தோசை ஊற்ற முடியாது. முட்டை ஆம்லெட் போட்ட தோசை கல்லில் அடுத்த தோசை ஊற்றும் போது வாடை வரும். இதையெல்லாம் செய்து பிறகு சோப்பு போட்டு கழுவி ஊற்றினால் தோசையும் வராது.

- Advertisement -

இப்படி முட்டை ஆம்லெட் சப்பாத்தி என எதை செய்தாலும் செய்து முடித்த பிறகு தோசை கல்லில் கொஞ்சமாக டூத் பேஸ்ட்டை தடவிக் கொள்ளுங்கள். அதன் பிறகு நம் வீட்டில் இருக்கும் பழைய சாஃப்ட் ஸ்கிரப்பர் இதுக்கு புதிய ஸ்கிரப்பரை பயன்படுத்தக் கூடாது. அதே நேரத்தில் இரும்பு நாரையும் பயன்படுத்தக் கூடாது. பழைய ஸ்கிரப்பர் வைத்து ஒரு முறை தோசை கல்லை சுற்றிலும் தேய்த்து விட்ட பிறகு அதில் இருக்கும் எண்ணெய் பிசுக்கு கருப்பு துகள்கள் அனைத்தும் சீக்கிரம் வந்து விடும்.

இப்படி சுத்தம் செய்த பிறகு தோசை ஊற்றினாலும் சரியாக வராது. ஏனென்றால் கல்லில் கொஞ்சம் கூட எண்ணெய் இருக்காது. அதற்கு அடுப்பில் தோசை கல்லை வைத்து சூடான பிறகு அடுப்பிபை மீடியம் பிலேமில் வைத்து கொஞ்சம் கல்லுப்பை எடுத்து போட்டு லேசாக வறுத்த பிறகு அந்த கல் உப்பு எடுத்து விடுங்கள். இந்த உப்பை மீண்டும் சமையலுக்கு பயன்படுத்த வேண்டாம். வேறு உபயோகத்திற்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

- Advertisement -

அடுத்து இந்த தோசை கல்லில் மீண்டும் அடுப்பில் வைத்து ஒரே ஒரு சொட்டு எண்ணை மட்டும் விட்டு நன்றாக சுற்றிலும் தேய்த்து எடுத்து வைத்து விடுங்கள். ஒரு வேளை உங்களுக்கு அப்போதே தோசை ஊற்ற வேண்டும் என்றாலும் கூட இதை செய்த பிறகு ஊற்றினால் தோசை நன்றாக வரும். இதே போல சப்பாத்தி செய்யும் போது செய்யலாம்.

இனி நீங்கள் சப்பாத்தி ஆம்லெட் என எதை செய்தாலும் அதன் பிறகு உடனே இப்படி சுத்தம் செய்து தோசை ஊற்றினால் வாடை வராது. இந்த முறையில் தோசைக்கல்லை மாதத்திற்கு ஒரு முறை சுத்தம் செய்து வைத்து விட்டால் தோசை கல்லை சுற்றி எப்பொழுதுமே கருப்பாக படிந்து எண்ணெய் பிசுக்கு இருக்காது. அதைப் போல தோசைக்கல்லில் சீசனிங்கும் போகாமல் எப்போது தோசை ஊற்றினாலும் தோசை மொறு மொறு என்று சூப்பராக வரும். இதனால் அடிக்கடி தோசை கல்லை மாற்ற வேண்டிய அவசியம் கிடையாது. அதுமட்டுமின்றி சப்பாத்தி போட ஒரு கல் தோசைக்கு ஒரு கல் என தனித்தனியாக வாங்க வேண்டிய செலவு கிடையாது.

இதையும் படிக்கலாமே: தேங்காய் விலை மலிவா கிடைக்கும் போது எவ்வளவு வேணும்னாலும் வாங்கி இந்த டிரிங்க்ஸ் யூஸ் பண்ணி ஸ்டோர் பண்ணிக்கோங்க. ஒரு வருடம் ஆனால் கூட தேங்காய் பிரஷ்ஷா கெட்டுப் போகாம சூப்பரா அப்படியே இருக்கும்.

இந்த எளிமையான குறிப்பை பயன்படுத்தி இரும்பு தோசை கல்லில் தோசை சுட்டு ருசியுடன் சேர்த்து ஆரோக்கியமாகவும் இருக்க முயற்சி செய்யலாம். இது போன்ற சின்ன சின்ன விஷயங்களை நாம் தெரிந்து கொண்டு செய்யும் பொழுது நம் ஏற்படும் பெரும் பெரிய பிரச்சனைகளை ஏற்படாமல் சுலபமாக தவிர்த்து விடலாம்.

- Advertisement -