தேங்காய் விலை மலிவா கிடைக்கும் போது எவ்வளவு வேணும்னாலும் வாங்கி இந்த டிரிங்க்ஸ் யூஸ் பண்ணி ஸ்டோர் பண்ணிக்கோங்க. ஒரு வருடம் ஆனால் கூட தேங்காய் பிரஷ்ஷா கெட்டுப் போகாம சூப்பரா அப்படியே இருக்கும்.

cocount
- Advertisement -

முன்பெல்லாம் அன்றாட சமையலுக்கு தேவையானதை அன்றே வாங்கி சமைத்து வந்தோம். ஆனால் இப்போதுள்ள சூழ்நிலையில் அது போல செய்வது எல்லாம் கொஞ்சம் சிரமமான காரியம் தான். அந்த வகையில் மற்ற காய்கறிகளை ஒரு வாரம் வைத்திருந்தால் கூட இந்த தேங்காய் மட்டும் உடைத்த ஒன்று, இரண்டு நாட்களுக்குள் சமைக்கா விட்டால் வாடை வந்து வீணாகி விடும். இனி அப்படி ஆகாமல் இருக்க தேங்காய் வாங்கிய உடனே இப்படி ஸ்டோர் செய்து வைத்துக் கொண்டால், ஒரு வருடம் ஆனால் கூட தேங்காய் கெட்டுப் போகாமல் இருக்க மூன்று சூப்பர் டிப்ஸ் இந்த வீட்டுக் குறிப்பு பதிவில் இருக்கு வாங்க தெரிஞ்சுக்கலாம்.

குறிப்பு:1
தேங்காய் வாங்கியவுடன் அதை உடைத்து அதில் இருக்கும் தண்ணீரை சுத்தமாக துணி வைத்து துடைத்து விட வேண்டும். தண்ணீருடன் வைக்கும் போது தேங்காய் சீக்கிரம் அழுகி விடும். துடைத்த தேங்காயை சின்ன சின்ன துண்டுகளாக ஓட்டில் இருந்து எடுத்த பிறகு காய் சீவலில் துருவி கொள்ளுங்கள். உங்களிடம் தேங்காய் துருவல் இருந்தால் அதிலும் கூட துருவிக் கொள்ளலாம்.

- Advertisement -

இதன் பிறகு அடுப்பில் அடி கனமான ஒரு பாத்திரத்தை வைத்து அதில் துருவிய தேங்காயை சேர்த்து தேங்காய் நிறம் மாறாமல், அதே சமயம் அதில் இருக்கும் ஈரப்பதம் போகும் வரை லேசாக வறுத்தப் பிறகு எடுத்து தட்டில் கொட்டி ஆற வைத்த பிறகு கண்ணாடி பாக்ஸ் அல்லது சில்வர் பாக்ஸில் போட்டு பிரிட்ஜில் ஸ்டோர் செய்து கொள்ளுங்கள். இதற்கு பிளாஸ்டிக் டப்பா பயன்படுத்தக் கூடாது.

குறிப்பு:2
இந்த முறையிலும் தேங்காய் இரண்டாக உடைத்த பிறகு அடுப்பை பற்ற வைத்து அரை மூடி தேங்காய் அப்படியே அடுப்பின் மேல் வைத்து விடுங்கள். தேங்காயின் ஓடு முழுவதும் கருப்பாக மாறும் வரை இந்த தேங்காய் அடுப்பின் மீது இருக்க வேண்டும். இதனால் தேங்காய் ஈரப்பதம் முழுவதும் வற்றுவதுடன், தேங்காயும் நன்றாக வெந்து ஒரு வித நல்ல மணத்துடனும் சுவையுடனும் இருக்கும். இந்த தேங்காயை சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி அதே போல் கண்ணாடி பாட்டில் அல்லது சில்வர் பாக்ஸில் போட்டு பிரிட்ஜில் ஸ்டோர் செய்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த தேங்காயை சட்னி அரைத்து சாப்பிடும் போது சுவை பிரமாதமாக இருக்கும்.

- Advertisement -

குறிப்பு:3
இந்த முறையில் எடுத்து வைக்கும் தேங்காய் சுலபமாக பால் எடுக்கவும் பயன்படும். இதற்கும் தேங்காய் உடைத்து துருவி எடுத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு மிக்ஸி ஜாரில் சேர்த்து கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி கெட்டியாக அரைத்து எடுக்க வேண்டும். இப்போது நாம் பிரிட்ஜில் ஐஸ் க்யூப்காக வைக்கும் டிரேயில் அரைத்த இந்த விழுதை போட்டு வைத்து விட்டால், தேவைப்படும் போது அதிலிருந்து ஒவ்வொரு கியூப்பாக எடுத்து சமையலுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

தேங்காய் பால் வேணும் என்னும் பட்சத்தில் கொஞ்சமாக டம்ளரில் வெதுவெதுப்பான தண்ணீரை எடுத்துக் கொண்டு அதில் உங்களுக்கு தேவையான தேங்காய் கியூபை எடுத்து போட்ட பிறகு வடிகட்டினால் நல்ல திக்கான தேங்காய்ப் பால் உடனே தயாராகி விடும்.

இதையும் படிக்கலாமே: அடிக்கிற வெயிலுக்கு மாவை எப்படி அரைச்சாலும் புளிஞ்சு போயிடுதா? வாயில வைக்க முடியாத அளவுக்கு புளிச்ச மாவை கூட அரை மணி நேரத்தில் புளிப்பே தெரியாம ஈசியா மாத்திடலாம். எப்படிடா? அப்படின்னு யோசிக்கிறீங்களா வாங்க தெரிஞ்சுக்கலாம்.

இதில் உள்ள இந்த குறிப்புகளின்படி தேங்காவை ஸ்டோர் செய்து வைக்கும் போது, அதிக நாள் கெட்டுப் போகாமல் பிரஷாக இருக்கும் என்பதோடு, வேலைக்கு செல்பவர்கள் இது போல செய்து வைத்துக் கொள்ளும் போது அவர்களின் அவசர நேர வேளையில் மிகவும் உதவியாக இருக்கும். இந்த குறிப்பு உங்களுக்கு பயனுள்ள இருக்கும் என நினைத்தால் ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -