- Advertisement -
Homeவீட்டு குறிப்புகள்இந்த ஒரு சிம்பிள் டெக்னிக் மட்டும் உங்களுக்கு தெரிஞ்சா போதும், இனி உங்க இரும்பு கல்லில்...

இந்த ஒரு சிம்பிள் டெக்னிக் மட்டும் உங்களுக்கு தெரிஞ்சா போதும், இனி உங்க இரும்பு கல்லில் எப்போதும் தோசை ஒட்டாவே ஒட்டாது . இதுக்கப்பறம் நல்ல மொறு மொறு என்று முறுகலான தோசை சுட்டு சாப்பிடலாம்.

- Advertisement -

இல்லத்தரசிகள் அனைவருக்கும் இருக்கும் பெரிய சவாலான பிரச்சனைகளில் இதுவும் ஒன்று தான். அதிலும் காலையில் வேலைக்கு செல்லும் நேரத்தில் இது போல தோசை வராமல் கல்லில் பிடித்துக் கொண்டால் கேட்கவே வேண்டாம். அன்றைய நா ளே வீணாகி விடும் அந்த அளவிற்கு டென்ஷனில் உச்சக்கட்டத்திற்கு சென்று விடுவார்கள். தோசை கல்லில் தோசை ஒட்டாமல் வருவதற்கு இந்த சின்ன டெக்னிக்ஸ் மட்டும் தெரிஞ்சு வச்சுக்கிட்டா போதும் டென்ஷனை இல்லாமல் இருக்கலாம் அது என்ன என்பதை இந்த வீட்டுக்குறிப்பு பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

அது மட்டும் இன்றி தோசைக் கல்லை அடுப்பில் வைத்து அதிக நேரம் சூடாகி விட்டால் கல் முறிந்து விடும். அதன் பிறகு நீங்கள் தோசை ஊற்றினாலும் தோசை வராது. இவை அனைத்திலும் விட முக்கியமான குறிப்பு பிரிட்ஜில் இருந்து மாவை எடுத்த உடனே தோசை ஊற்றினாலும் தோசை வராது. தோசை ஊற்றுவதற்கு சிறிது நேரத்திற்கு முன்பே மாவை எடுத்து வெளியில் வைத்து விட வேண்டும் இவையெல்லாம் தோசை கல்லை சரியான முறையில் பயன்படுத்துவதற்கான சில டிப்ஸ்.

- Advertisement -

தோசை கல்லில் தோசை ஒட்டாமல் வர:
இப்போது தோசை ஊற்றிய பிறகு கல்லிலே ஒட்டிக் கொண்டு வராமல் இருந்தால் அந்த நேரத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம். அப்படியான சந்தர்ப்பங்களில் தோசை கல்லில் இருக்கும் மாவை எல்லாம் சுத்தமாக எடுத்த பிறகு கல் நன்றாக சூடாக இருக்கும் போது தண்ணீரை தெளித்து சுத்தமாக துடைத்து விட வேண்டும். அதன் பிறகு லேசாக எண்ணெய் தேய்த்து மறுபடியும் ஒருமுறை தண்ணீரை தெளித்து துடைத்து விட்டாலே ஓரளவிற்கு கல்லில் தோசை ஊற்ற வரும்.

இப்படி செய்த பிறகும் வரவில்லை என்றால் ஒரு மெல்லிய காட்டன் துணியில் கொஞ்சமாக புளியை வைத்து நன்றாக கட்டி அதன் பிறகு எண்ணெயில் தொட்டு தோசைக்கல்லை தேய்த்துப் பிறகு தோசை ஊற்றினால் ஒட்டாமல் வரும்.

- Advertisement -

அசைவம் சாப்பிடுபவர்களா இருந்தால் இது போன்ற சமயத்தில் முட்டையை உடைத்து ஊற்றி ஆம்லெட் போட்ட பிறகு தோசை ஊற்றினால் ஒட்டாமல் வரும். அதுமட்டுமின்றி நாம் எப்பொழுது தோசை ஊற்றினாலும் கடைசியில் கல்லில் கொஞ்சமாக வெங்காயத்தை எண்ணெயில் தொட்டு கல் முழுவதும் தேய்த்துப் எடுத்து வைத்து விடுங்கள். அடுத்த முறை ஊற்றும் போது வெறும் துணி வைத்து துடைத்து ஊற்றினால் போதும் தோசை நன்றாக வரும்.

இதையும் படிக்கலாமே: எண்ணெய் பிசுக்கு படிந்த கண்ணாடி பாட்டில்களை நொடிப் பொழுதில் சுத்தம் செய்ய நீங்கள் வேண்டாம் என்று தூக்கிப் போடும் இந்த ஒரு பொருள் போதும். பல வருட கண்ணாடி பாட்டில் கூட புதுசு போல மின்னும்.

தோசை கல்லை பொறுத்த வரையில் அடிக்கடி நார் சோப்பு வைத்து தேய்க்கும் போது இது போன்ற பிரச்சனைகள் வர வாய்ப்பு அதிகம். ஏனென்றால் தோசை கல் எப்போதும் எண்ணெய் தேய்த்து வைத்து இருந்தால் மட்டுமே தோசை கல் நன்றாக பழகி எப்பொழுது ஊற்றினாலும் நல்ல முறுகலான தோசையை ஊற்ற முடியும்.

சற்று முன்