எண்ணெய் பிசுக்கு படிந்த கண்ணாடி பாட்டில்களை நொடிப் பொழுதில் சுத்தம் செய்ய நீங்கள் வேண்டாம் என்று தூக்கிப் போடும் இந்த ஒரு பொருள் போதும். பல வருட கண்ணாடி பாட்டில் கூட புதுசு போல மின்னும்.

oil cane cleaning tips
- Advertisement -

வீட்டில் சமைக்க பயன்படுத்தும் எண்ணெய் பாட்டில், ஊறுகாய் பாட்டில் போன்றவைகள் எல்லாம் எப்படி சுத்தம் செய்து வைத்தாலும் கொஞ்சமாவது அதில் எண்ணெய் பிசுக்கு படித்திருக்கும். அதிலும் எண்ணெயில் உள்ள அழுக்குகள் கசடாக படிந்து பாட்டிலை பார்க்கவே அருவெறுப்பாக இருக்கும். இந்த வீட்டுக் குறிப்பு பதிவில் இது போன்ற எண்ணை கறை படிந்த பாட்டில்களை எல்லாம் சுலபமாக எப்படி சுத்தம் செய்வது என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

எண்ணெய் பிசுக்கு படிந்த கண்ணாடி பாட்டில்களை சுலபமாக சுத்தம் செய்ய:
இந்த முறையில் சுத்தம் செய்ய நாம் வீட்டில் தேவை இல்லை என்று வீணாக வெளியே போடும் ஒரு பொருள் இருந்தால் மட்டும் போதும். ரொம்பவே சுலபமா கண்ணாடி பாட்டில்கள் எல்லாம் புதிதாக வாங்கியதை போலவே பளிச்சென்று மின்ன ஆரம்பித்து விடும். அது வேறு ஒன்றும் இல்லை நாம் வீட்டில் இட்லி தோசைக்கு பயன்படுத்தி மீதமாகி தூக்கி ஊற்றும் புளித்த மாவு தான். நாம் எப்படி தான் மாவை பயன்படுத்தினாலும் கடைசியாக கொஞ்சமாக மீந்து விடும் அந்த மாவை நாம் வீணாகத் தான் தூக்கி கீழே ஊற்றுவோம் அதை வைத்தே சுலபமாக இந்த பாட்டில்களை சுத்தம் செய்து விடலாம்.

- Advertisement -

இந்த மாவை வைத்து தான் இப்பொழுது கண்ணாடி பாட்டில்களை எல்லாம் சுத்தம் செய்கிறோம் இதனுடன் வேறு எந்த பொருளையும் கூட சேர்க்க வேண்டியது இல்லை. இந்த மாவை கொஞ்சமாக கையில் எடுத்து கண்ணாடி பாட்டில் முழுவதுமாக தேய்த்து இதே போல் பாட்டில் உள்ளே கொஞ்சமாக மாவை போட்டு தண்ணீர் ஊற்றி அலசி ஊற்றினாலே போதும் பாட்டில் பளிச்சென்று மாறி விடும். இதை தேய்த்து ஊற வைக்க கூட தேவையில்லை.

அதேஸபோல் எண்ணெய் ஊற்றி வைக்கும் பாட்டில்களில் எல்லாம் அடியில் கசடு படிந்து இருக்கும் அதையும் இதே முறையில் சுத்தம் செய்யலாம். ஆனால் இத்துடன் கொஞ்சமாக கல் உப்பை சேர்த்து பாட்டிலே குளிக்கும் போது அது உள்ளே ஒரு ஸ்க்ரப்பர் போல வேலை செய்து அடியில் இருக்கும் கசடுகளை எல்லாம் நீக்கி விடும்.

- Advertisement -

இப்படி சுத்தம் செய்த பிறகு கொஞ்சமாக பாத்திரம் தேய்க்க பயன்படுத்தும் லிக்வீடை வைத்து தேய்த்து விட்டால் போதும். எண்ணெய் பிசுக்கு இருந்த இடம் தெரியாமல் காணாமல் போய் விடும். கண்ணாடி பாட்டில்கள் மட்டுமல்ல பிளாஸ்டிக் சில்வர் பாட்டில்களை கூட இந்த முறையில் சுத்தம் செய்யலாம்.

இதையும் படிக்கலாமே: இனி சோப்பு வாங்கினால் இப்படி பயன்படுத்தி பாருங்க மாசம் ஃபுல்லா பயன்படுத்தினா கூட சோப்பு கறைவே கறையாது. பாத்திரங்களும் பளிச்சென்று மின்னும். எப்படி அது தெரிஞ்சுக்கலாம் வாங்க.

இப்படி மீந்த மாவை வைத்து புதிதாக அரைக்கும் மாவை புளிக்க வைப்பதற்காக சிலர் பயன்படுத்துவார்கள். அப்படி செய்யவே கூடாது மாவு புளிக்க புளிக்க அதில் நுண்ணுயிரிகள் அதிகமாக பெருகி இருக்கும். இதை சாப்பிடும் போது வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் அதிகமாக வரும். இந்த புளித்த மாவில் தண்ணீர் ஊற்றி நன்றாக கலந்து அதை செடிகளுக்கு ஊற்றினால், நல்ல ஒரு ஊட்டச்சத்து மிக்க உரமாக மாறும். இனி வீட்டில் மாவு புளித்து மீதம் ஆகிவிட்டால் இது போல உபயோகத்திற்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

- Advertisement -