இரும்பு தோசைக்கல் மற்றும் நான்ஸ்டிக் தோசைக்கல் இவற்றை எவ்வாறு எளிமையாக சுத்தம் செய்யலாம் தெரியுமா?

dosaikal
- Advertisement -

வீட்டில் உள்ள பொருட்களில் எந்த பொருள் பயன்படுகிறதோ இல்லையோ தோசைக்கல் மட்டும் கட்டாயமாக தினமும் பயன்படும். காலை அல்லது மாலை இவற்றில் ஒருவேளையாவது நிச்சயம் தோசை சுட இந்த தோசைக்கல்லை பயன்படுத்தி விடுவோம். இவ்வாறு தினமும் பயன்படுத்தும் தோசைக்கல்லின் ஓரங்களில் நாளடைவில் எண்ணெய் கரைகள் ஒட்டிக் கொள்ள ஆரம்பித்து விடும். நாம் என்னதான் தினமும் சுத்தம் செய்து வைத்தாலும் கூட அவற்றில் இருக்கும் விடாப்பிடியான கறைகளை அகற்றுவது என்பது சுலபமான விஷயமல்ல. இப்படி விடாப்பிடியான கறையுடன் இருக்கும் தோசைக்கல்லை எவ்வாறு எளிமையான முறையில் சுத்தம் செய்யலாம் என்பதைப் பற்றியே இந்த பதிவில் விரிவாக தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

dosai2

தோசை சுடவும், சப்பாத்தி சுடவும், முட்டை ஆம்லேட் போடவும் இந்த தோசைக்கல்லை பெரும்பாலும் தினமும் ஒரு முறையாவது பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறான உணவுகளை செய்வதற்காக தோசைக் கல்லில் அதிகமாக சேர்க்கப்படும் எண்ணெய் அதன் ஓரங்களில் ஒட்டிக்கொண்டு அப்படியே விடாப்பிடியான காரையாக மாறிவிடுகிறது. தோசைக்கல்லை வாஷிங் லிக்விட் வைத்து தினமும் சுத்தம் செய்தாலும் அதில் இருக்கும் எண்ணெய் பிசுக்குகள் மிகவும் அடர்த்தியாக இருப்பதனால் அவை முழுவதுமாக சுத்தமாகிவிடாது.

- Advertisement -

நான்ஸ்டிக் தோசை கல்:
ஒரு சிறிய கிண்ணத்தில் ஒரு ஸ்பூன் பல் துலக்கும் பேஸ்ட், ஒரு ஸ்பூன் பேக்கிங் சோடா மற்றும் ஒரு ஸ்பூன் வினிகர் இவை மூன்றையும் ஒன்றாக சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின்னர் ஒரு இரும்பு நாரினை வைத்து, கலந்து வைத்துள்ள கலவையை தொட்டு தோசைக்கல்லின் முன்புறமும், பின்புறமும் நன்றாக தேய்த்துவிட வேண்டும்.

dosaikal-2

5 நிமிடங்கள் இந்த கலவையை தொட்டு தொட்டு நன்றாகத் தேய்த்துக் கொண்டே இருக்க வேண்டும். பிறகு தண்ணீர் விட்டு சுத்தமாக கழுவிவிட வேண்டும். அதன்பின் எப்பொழுதும் போல வாஷிங் லிக்விட் வைத்து ஒரு முறை தேய்த்து கழுவ வேண்டும். இப்பொழுது தோசைகல்லை பார்க்கும்பொழுது எந்த ஒரு எண்ணெய் பிசுக்குகளும், கரைகளும் இல்லாமல் பளிச்சென்று மாறி இருக்கும்.

- Advertisement -

இரும்பு தோசைக்கல்:
ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி கொண்டு, அதனுள் 3 ஸ்பூன் துணி துவைக்கும் வாஷிங் பவுடரை சேர்த்து நன்றாகக் கரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதனுள் தோசைக்கல்லை நன்றாக மூழ்க வைத்து, ஒரு நாள் இரவு முழுவதும் அப்படியே ஊற வைத்துவிட வேண்டும்.

dosai-kal5

பிறகு மறுநாள் காலை இரும்பு நார் வைத்து ஒரு முறை நன்றாக தேய்த்து விட்டால் தோசைக் கல்லில் இருக்கும் என்னைத் திட்டுக்கள் சுத்தமாகி அதிலிருக்கும் விடாப்பிடியான கருப்பு நிற கரைகள் மட்டும் சிறிதளவு ஒட்டிக் கொண்டிருக்கும்.

soil

அதற்காக தோசை கல்லில் ஒரு ஸ்பூன் வாஷிங் பவுடர், ஒரு ஸ்பூன் பேக்கிங் சோடா மற்றும் 2 ஸ்பூன் வீட்டிற்கு வெளியே இருக்கும் சாதாரண மண் இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து மறுபடியும் இரும்பு நார் வைத்து நன்றாக தேய்த்து விட வேண்டும். இப்பொழுது அதில் ஒட்டியிருக்கும் விடாப்பிடியான கருப்பு நிற கறைகள் அனைத்தும் கொஞ்சம் கூட இல்லாமல் சுத்தமாகி இருக்கும்.

- Advertisement -