தோஷங்களும் பாவங்களும் நீங்க விநாயகர் வழிபாடு

vinayagar valipadu
- Advertisement -

நம் தாய் தந்தையர் சேர்த்து வைத்த சொத்தை நாம் அனுபவிப்பது போல அவர்கள் சேர்த்து வைத்த பாவத்தையும் நாம் அனுபவித்தே தான் தீர வேண்டும். இதே போல் தான் நாம் செய்கின்ற சேர்த்து வைத்த பாவத்தையும் தோஷத்தையும் நம்முடைய பிற்கால சங்கதியினரும் அனுபவித்து தான் தீர வேண்டும். இதைத்தான் கர்ம வினை என்று கூறுகிறோம். இந்த கர்ம வினையை நீக்குவதற்கும் நம் முன்னோர்கள் செய்த தோஷங்கள், பாவங்கள், தீய சக்திகள் போன்றவை விலகவும் நம்முடைய பிற்கால சங்கதிகள் இன்பமுடன் வாழவும் செய்யக்கூடிய ஒரு எளிமையான விநாயகர் வழிபாட்டை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

வம்சாவளியாக வரக்கூடியது சொத்துக்களும், பெயர்களும் மட்டுமல்ல பாவங்களும், தோஷங்களும், தீய சக்திகளும் தான். நாம் எந்த பாவமும் செய்யாவிட்டாலும் நம்முடைய முன்னோர்கள் ஏதாவது பாவம் செய்திருந்தால் அந்த பாவத்தின் விளைவாக நாமும் கஷ்டப்பட வேண்டிய சூழ்நிலை வரும். நம்முடைய பிற்கால சங்கதிகளும் கஷ்டப்பட வேண்டிய சூழ்நிலை வரும் என்று புராணங்கள் கூறுகின்றன. இவற்றை மாற்ற வேண்டும் என்று நினைப்பவர்கள் விநாயகப் பெருமானை சரணடைய வேண்டும்.

- Advertisement -

செவ்வாய்க்கிழமை அன்று அருகில் இருக்கக்கூடிய விநாயகர் ஆலயத்திற்கு செல்ல வேண்டும். அப்படி செல்லும் விநாயகர் ஆலயம் ஆனது நித்திய அபிஷேக பூஜை செய்யும் ஆலயமாக இருக்க வேண்டும். அதாவது தினமும் விநாயகருக்கு அர்ச்சகர்களால் வேத மந்திரங்கள் முழங்க அபிஷேக ஆராதனை செய்யக்கூடிய கோவிலாக பார்த்து செல்ல வேண்டும்.

அதை தவிர்த்து விட்டு அரச மரத்தடியில் இருக்கும் விநாயகர் கோவிலுக்கோ அல்லது யாரும் எந்த பூஜையும் செய்யாமல் இருக்கும் விநாயகர் ஆலயத்திலோ அல்லது அர்ச்சகர்கள் இல்லாமல் சாதாரண பாமர மக்களால் எந்தவித மந்திரங்களும் ஜெபிக்கப்படாமல் வழிப்படும் விநாயகர் ஆலயத்திலோ இந்த பரிகாரத்தை செய்யக்கூடாது.

- Advertisement -

இப்படி ஆகம விதிப்படி அபிஷேகம் செய்யக்கூடிய விநாயகர் ஆலயத்திற்கு செவ்வாய்க்கிழமை அன்று செல்ல வேண்டும். அப்படி செல்லும் பொழுது விநாயகரை முழு மனதோடு வழிபட்டு அவரை ஏழு முறை வலது புறமாக வலம் வர வேண்டும். மறுபடியும் திரும்ப ஏழு முறை இடதுபுறமாக வலம் வர வேண்டும்.

இப்படி தொடர்ந்து ஏழு வாரங்கள் விநாயகர் பெருமானை நாம் வளம் வந்து வழிபட்டால் நம்முடைய வாழ்நாளில் நாம் செய்த பாவங்களாக இருந்தாலும் சரி நம் முன்னோர்கள் செய்த பாவங்களாக இருந்தாலும் சரி அதனால் ஏற்படக்கூடிய தோஷங்களாக இருந்தாலும் சரி எதிர்மறை ஆற்றல்கள் என்று சொல்லக்கூடிய ஏவல் பில்லி சூனியம் போன்றவையாக இருந்தாலும் சரி அவை அனைத்தும் நீங்கும். மேலும் நம்முடைய வருங்கால சங்கதியினரை பாதிக்காத அளவிற்கு நம்மை காப்பாற்றும் கடவுளாக விநாயகர் திகழ்வார்.

இதையும் படிக்கலாமே: மாசி வெள்ளி சங்கு தீப வழிபாடு

மிகவும் எளிமையான இந்த விநாயகர் வழிபாட்டில் முழு நம்பிக்கையுடன் ஈடுபடுபவர்களின் வாழ்வில் இருக்கக்கூடிய பாவங்களும், தோஷங்களும், எதிர்மறை ஆற்றல்களும் விலகி ஓடும்.

- Advertisement -