மாசி வெள்ளி சங்கு தீப வழிபாடு

mahalashmi4
- Advertisement -

உங்களுடைய குடும்பத்திற்கு எந்த வகையில் வருமானம் வந்து கொண்டிருந்தாலும் சரி, அந்த வருமானம் அப்படியே இரட்டிப்பாகும். உதாரணத்திற்கு நீங்கள் வேலைக்கு சென்று சம்பாத்தியம் செய்பவர்களாக இருந்தாலும் சரி, சொந்த தொழில் செய்து சம்பாத்தியம் செய்பவர்களாக இருந்தாலும் சரி, தினசரி கூலி வாங்கி வருமானம் பெறுபவர்கள் ஆக இருந்தாலும் சரி, உங்கள் வருமானத்தை உயர்த்திக் கொள்ள இந்த வழிபாடு நிச்சயம் ஒரு வழியை காட்டிக் கொடுக்கும்.

நாளை மாசி மாதத்தின் இரண்டாம் வெள்ளி. நாளைக்கும் இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம். நாளைக்கு செய்ய முடியாது என்பவர்கள் அதற்கு அடுத்து வரக்கூடிய வெள்ளிக்கிழமைகளிலும் இந்த விளக்கை ஏற்றி மகாலட்சுமியை வழிபாடு செய்யலாம்.

- Advertisement -

சங்கு தீப வழிபாடு

இந்த வழிபாட்டிற்கு நமக்கு மிக மிக முக்கியமாக தேவை படக்கூடிய பொருள் சங்கு. சாதாரணமாக இப்போது எல்லோர் வீடுகளிலும் சங்கை பூஜை அறையில் வைத்து வழிபடக்கூடிய வழக்கம் இருக்கிறது. அந்த சங்கில் இந்த தீபத்தை ஏற்றலாம். வீட்டில் சங்கே இல்லை என்பவர்களும், புதுசாக சங்கு வாங்கி தீபம் ஏற்றுவதாக இருந்தாலும் புது சங்கு வாங்கி தீபம் ஏற்றலாம்.

ஆனால் புது சங்கு வாங்கினால் அதை முதலில் தண்ணீரில் கழுவி, பன்னீரில் கழுவி, பிறகு கோமியத்தில் கழுவி, பிறகு பசும்பால் அபிஷேகம் செய்து, பிறகு சங்குக்கு சந்தன குங்குமம் பொட்டு எல்லாம் இட்டு அதற்கு பிறகு தான் வழிபாடு செய்ய பயன்படுத்த வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.

- Advertisement -

சரி, தீபம் ஏற்றக்கூடிய முறையை பார்த்து விடுவோம். ஒரு அகலமான பாத்திரத்தில் கல் உப்பை கொட்டிக் கொள்ளுங்கள். அந்த கல்லுப்புக்கு மேலே இந்த சங்கை நிறுத்தி வைத்து, சங்குக்கு உள்ளே பசு நெய் ஊற்றி பஞ்சத்திரி போட்டு விளக்கு ஏற்றி வைக்கணும். இந்த விளக்கை வீட்டின் ஈசானியமூலையான வடகிழக்கு மூலையில் ஏற்றி வையுங்கள்.

வெள்ளிக்கிழமை சுக்கிர ஹோரையில், இந்த விளக்கை வீட்டில் ஏற்றி வைத்தால் மகாலட்சுமி அம்சம் வீட்டிற்கு நிறைவாக கிடைக்கும். உங்களுடைய வீட்டில் செல்வ வளம் அதிகரிக்க இந்த ஒரு விளக்கே போதுமானது. அதிலும் இந்த மாசி மாதம் வெள்ளிக்கிழமைகளில் இந்த விளக்கை ஏற்றினால் அபரிவிதமான பலன் கிடைக்கும். இதைத்தொடர்ந்து உங்களால் எத்தனை வெள்ளிக்கிழமை இந்த விளக்கை ஏற்ற முடியுமோ ஏற்றி வைக்கலாம் தவறு கிடையாது.

இதையும் படிக்கலாமே: மேல் அதிகாரிகளிடம் நல்ல பெயர் வாங்க பரிகாரம்

ஆனால் மாசிவெள்ளியில் இந்த விளக்கை ஏற்றும் போது மலை போல் வீட்டில் செல்வம் குவியும் என்ற நம்பிக்கை ஆன்மீகத்தில் சொல்லப்பட்டுள்ளது. வலம்புரி சங்கு, இடம்புரி சங்கு எந்த சங்கில் வேண்டும் என்றாலும் இந்த விளக்கை ஏற்றி வழிபாடு செய்யலாம்‌. நம்பிக்கை உள்ளவர்கள் ஆன்மீகம் சார்ந்த இந்த வழிபாட்டை பின்பற்றி பலன் பெறவும்.

- Advertisement -