- Advertisement -
Homeவீட்டு குறிப்புகள்டாய்லெடிலும் சிங்கிலும் இருக்கும் அடைப்பை நீக்க எளிமையான குறிப்பு

டாய்லெடிலும் சிங்கிலும் இருக்கும் அடைப்பை நீக்க எளிமையான குறிப்பு

- Advertisement -

நம்ம வீட்டு டாய்லெட், நம்ம வீட்டு சிங்க், வாஷ்பேஷன் இவைகள் எல்லாம் அடைத்துக் கொண்டு தண்ணீர் கொஞ்சம் மெதுவாக செல்லும்படி இருந்தால், அதை சரி செய்ய நமக்கு தெரியாது. லேசாக அடைப்பு இருந்தால் ஒரு குச்சியை வைத்து குத்துவோம். அப்படியும் அடைப்பு நீங்க வில்லை என்றால் உடனடியாக பிளம்பரை கூப்பிட்டு காசு செலவு செய்யவோம்.

இனிமேல் ஏதாவது சின்ன பிரச்சினையாக இருந்தால் பிளம்பரை கூப்பிடாதீங்க. ஒரு முறை இந்த குறிப்பை முயற்சி செய்து பாருங்கள். இப்படி செய்து உங்களுக்கு அடைப்பு நீங்கவில்லை எனும் பட்சத்தில், வேலையாட்களை கூப்பிட்டு என்ன பிரச்சனை என்பதை பார்த்துக் கொள்ளலாம்.

- Advertisement -

டாய்லெட்டில் இருக்கும் அடைப்பு நீங்க

ஒரு பவுல் எடுத்துக்கோங்க. அதில் தூள் உப்பு 3 டேபிள்ஸ்பூன், சோடா உப்பு 2 டேபிள் ஸ்பூன், போட்டு இதை கலப்பதற்கு வினிகர் ஊற்ற வேண்டும். தாராளமாக கால் லிட்டர் அளவு வினிகரை ஊற்றி கலந்து கொள்ளுங்கள். இது அப்படியே முதலில் பொங்கி வரும். (தூள் உப்புக்கு பதில் இதில் நீங்கள் கல்லுப்பையும் சேர்க்கலாம். ஆனால் தண்ணீரில் கல் உப்பு நன்றாக கரையனும்).

ஒரு ஸ்பூனை வைத்து கலந்து பொங்கி வருவது அடங்கியவுடன். இதை எடுத்து அப்படியே டாய்லட்டில் ஊற்றி விட்டிடுங்க. இரண்டு மணி நேரத்திற்கு நீங்கள் டாய்லைட்டை பயன்படுத்தக் கூடாது. ராத்திரி நேரத்தில் இந்த குறிப்பை முயற்சி செய்யுங்கள். இரண்டு மணி நேரம் கழித்து ஒரு பக்கெட் நிரம்ப தண்ணீர் வைத்து, கொஞ்சம் வேகமாக அடிச்சு அந்த தண்ணீரை ஊற்றி விட்டால், டாய்லெட்டில் இருக்கும் அடைப்பு நீங்கும்.

- Advertisement -

இதே போல லிக்விடை சிங்கிள் மாதத்திற்கு ஒருமுறை ஊற்றி விட்டால் சிங் அடைப்பும் நீங்கிவிடும். வாஷ்பேஷனிலும் இதே போல லிக்விடை ஊற்றி சுத்தம் செய்து கொள்ளலாம். இப்படி செய்தால் அடைப்பு நீங்குவது மட்டும் கிடையாது. டாய்லெட்டில் வீசும் துர்நாற்றம் ஆனது வீசுவது குறையும்.

துர்நாற்றத்தை நீக்கக்கூடிய சக்தியும் இந்த லிக்வீட்டுக்கு உண்டு. சிங்கில் இருந்து சில சமயம் கெட்ட வாடை வீசும் அல்லவா அதெல்லாம் வீசாமல் இருக்கும். எளிமையான குறிப்பு தான். மாதத்திற்கு ஒருமுறை இந்த குறிப்பை பின்பற்றி வந்தாலே உங்க வீட்டு டாய்லட்டோ சின்கோ அடைத்து பிரச்சனை செய்யாது.

- Advertisement -

சில பேர் சொல்லலாம். இப்படி டிரைனேஜ் சுத்தம் செய்ய கடைகளிலேயே பவுடர் கிடைக்கின்றது. அதை வாங்கி பயன்படுத்தலாம் என்று. என்னதான் கடைகளில் காசு கொடுத்து நாம் அந்த பவுடரை வாங்கினாலும், அதில் இருக்கும் கெமிக்கல் நம்முடைய பூமிக்கு கேடு செய்யக் கூடியவையாகத்தான் இருக்கும். ஆகவே கூடுமானவரை அதிக அடைப்பு இருந்தால் மட்டும் கடையிலிருந்து வாங்கக்கூடிய டிரைனேஜ் கிளீனர் பவுடரை பயன்படுத்துங்கள்.

இதையும் படிக்கலாமே: கெட்டுப்போன தேங்காய்க்கு பின்னாடி இப்படி ஒரு ஐடியாவா?

மாதத்திற்கு ஒரு முறை மேலே சொன்ன இந்த முறையை பின்பற்றினால் இதன் மூலம் நமக்கு எந்த பாதிப்புகளும் வராது. இந்த லிக்விட் பூமியை போய் சென்றடைவதாலும் பாதிப்புகள் ஏற்படாது என்பது குறிப்பிடத்தக்கது. தேவை என்பவர்கள் இந்த எளிமையான வீட்டு குறிப்பு பின்பற்றி பலன் பெறலாம்.

சற்று முன்