உலகக்கோப்பை தொடரில் அனைத்து ஆட்டங்களும் 300 ரன்களுக்கு மேலு குவித்து இந்த அணி வெற்றி பெரும் – டிராவிட்

dravid

இந்திய அணி தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் விளையாடி வருகிறது. முதல் மூன்று போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. நான்காவது போட்டியில் தோல்வி அடைந்தது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான ஐந்தாவது போட்டி நாளை (03-02-2019) நடைபெற உள்ளது.

bay-oval

இந்த தொடர் முடிந்து இந்திய அணி ஆஸ்திரேலிய தொடர் மற்றும் ஐ.பி.எல்.முடிந்து உடனடியாக உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க உள்ளது. மே மாத இறுதியில் தொடங்கும் இந்த தொடரில் வெற்றி பெரும் அணி குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் ராகுல் டிராவிட் பேட்டி ஒன்றினை அளித்துள்ளார்.

அதில் டிராவிட் கூறியதாவது : இந்திய அணி தென்னாபிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து மண்ணில் அவர்களுக்கு எதிராக ஒருநாள் தொடரை கைப்பற்றி பலமாக உள்ளது. அதேபோல், இங்கிலாந்து மண்ணிலும் அங்கு இருக்கும் பிளாட் பிட்சில் 300-க்கும் அதிக ரன்கள் குவித்து இந்திய அணி சிறப்பாக விளையாடி வெற்றி பெரும் என்று டிராவிட் கூறினார்.

worldcup

மேலும், தற்போது உள்ள இந்திய வீரர்கள் வேகம் மற்றும் பவுன்ஸ் போன்ற கலவையான தன்மை கொண்ட மைதானங்களில் சிறப்பாக விளையாடும் அளவிற்கு தங்களை மாற்றிக்கொண்டனர். தொடர்ந்து வெளிநாட்டு சுற்றுப் பயனங்களில் சிறப்பாக விளையாடி தொடரை கைப்பற்றும் இந்திய அணி இந்த தொடரையும் கைப்பற்றும் என்பதில் எனக்கு அதிக நம்பிக்கை உள்ளது என்று டிராவிட் தெரிவித்தார்.

இதையும் படிக்கலாமே :

தனது 200ஆவது ஒருநாள் போட்டியில் சதமடித்த ஒரே இந்திய வீரர். வியக்க வைக்கும் சாதனை – தொகுப்பு உள்ளே

மேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்