தனது 200ஆவது ஒருநாள் போட்டியில் சதமடித்த ஒரே இந்திய வீரர். வியக்க வைக்கும் சாதனை – தொகுப்பு உள்ளே

sachin

நியூசிலாந்து அணிக்கு எதிரான நான்காவது போட்டி ரோஹித் சர்மாவிற்கு 200ஆவது ஒருநாள் போட்டியாகும். இதன்மூலம் 200 ஒருநாள் போட்டிகளை ஆடிய இந்திய வீரர்கள் பட்டியலில் ரோஹித் சர்மா 14ஆவது வீரராக பட்டியலில் இடம்பிடித்தார்.

rohith

ஆனால், இந்த போட்டியில் இந்திய அணி தோற்றது, ரோஹித் சர்மா வெறும் 7 ரன்கள் மட்டுமே அடித்தார். இதுவரை இந்திய அணிக்காக மொத்தம் 14 வீரர்கள் 200 ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ளனர். அதில், ஒருவர் மட்டுமே 200ஆவது போட்டியில் சதமடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இதோ அந்த சாதனை விவரம் உங்களுக்காக :

இந்திய அணியின் கேப்டனான விராட் கோலி கடந்த 2017ஆம் ஆண்டு மும்பை வான்கடே மைதானத்தில் நியூசிலாந்து அணிக்கு எதிராக 200ஆவது போட்டியில் பங்கேற்றார். அந்த போட்டியில் 125 பந்துகளுக்கு 121 ரன்களை குவித்து சாதனை படைத்தார். இது அவருடைய 31ஆவது சதமாகும். இந்த போட்டியில் கோலி 7 பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் அடித்தார்.

kohli

மேலும், 200 ஆவது போட்டியில் சதமடித்த முதல் இந்திய வீரர் என்ற அறிய சாதனை படைத்தார். மேலும், 200 போட்டிகளில் விளையாடி அதிக ரன்கள்(8888) குவித்த வீரர் என்ற சாதனையும் படைத்தார்.இவரின் சாதனைகள் என்றும் தொடர வாழ்த்துக்கள்.

இதையும் படிக்கலாமே :

என்னுடைய மகனுக்கு பிடித்த இந்திய வீரர் சச்சின்,கோலி,தோனி என்று யாருமில்லை. இவரைத்தான் பிடிக்கும் – தவான்

மேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்