உங்கள் கனவில் உங்களை நீங்களே! இப்படியெல்லாம் பார்த்தால் என்ன பலன் என்று தெரிந்து கொள்ளுங்கள்.

dream

எப்படி எல்லாமோ கனவு வருகிறது. சில கனவுகள் நம்மை சிரிக்க வைக்கின்றன. சில கனவுகள் நம்மை சிந்திக்க வைக்கின்றன. ஒரு சில கனவுகள் நம்மை பயமுறுத்தவும் செய்கின்றன. கனவுகள் பலிக்குமா? என்ற சந்தேகம் எப்போதும் நமக்குள் எழுந்து கொண்டே தான் இருக்கின்றன. கனவுகள் நிச்சயம் பலிக்கும். ஆனால் எல்லா கனவுகளும் அல்ல. ஒரு சில கனவுகள் பலிக்கும். அந்த கனவுகள் அனைத்தும் எதையோ நமக்கு நினைவூட்ட தான் வருகிறது என்கிறது சாஸ்திரங்கள். நாம் மறந்து போன எதையோ நமக்கு நினைவூட்டவும், சில விஷயங்களில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளவும் இது போன்ற கனவுகள் வருகின்றன. இது தான் உண்மை. இவ்வகையில் உங்களை நீங்களே கனவில் கண்டால் என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கும்? இவர்களை எல்லாம் கனவில் கண்டால் என்ன நடக்கும்? என்பதை பற்றியும் இப்பதிவில் காணலாம்.

mirror1

உங்கள் கனவில் உங்களை நீங்களே கண்ணாடி முன் நின்று உங்களைப் பார்ப்பது போல வந்தால் உங்களுக்கு விரைவில் திருமண யோகம் கைகூட போகிறது என்று எடுத்துக்கொள்ளலாம். உங்கள் மனதிற்கு பிடித்தபடி வாழ்க்கை துணை நிச்சயம் அமையும். உங்கள் கனவில் உங்களை யாராவது அலங்காரம் செய்வது போல நீங்கள் கண்டால், நீங்கள் மிகவும் நம்பிய ஒருவர் உங்களை ஏமாற்ற போகிறார் என்று அர்த்தம். அவர் உங்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்யப் போகின்றார் என்பதை உணர்த்துகிறது. மாறாக உங்களை நீங்களே அலங்காரம் செய்வது போல கனவில் வந்தால், நஷ்டம் ஏற்பட இருப்பதை உணர்த்துகிறது. வியாபார ரீதியாகவும், தொழில் ரீதியாகவும் நீங்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று எடுத்துக் கொள்ளுங்கள்

நீங்கள் பிறரால் அவமானப்படுவது போல கனவில் வந்தால், எதிர்பாராத பிரச்சனைகளும் அதனால் சில கஷ்டங்களும் சந்திக்க நேரலாம். அதுவே நீங்கள் யாரையாவது அவமானப்படுத்துவது போல கனவில் வந்தால் நீங்கள் நடக்கவே நடக்காது என்று நினைத்த காரியம் கூட நடந்து விடும் என்பதை இக்கனவு உணர்த்தும். நீங்கள் உங்கள் கனவில் யாரிடமாவது ஆசி பெறுவது போல் வந்தால், மறைமுக எதிரிகள் மூலம் பிரச்சனைகள் ஏற்படலாம். நீங்கள் தெளிவாக யோசித்து வைத்திருக்கும் ஒன்றை குழப்பிக் கொள்வீர்கள். இதனால் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

bleeding-blood

நீங்கள் ரத்தம் சிந்துவது போல கனவில் வந்தால் மிகப்பெரும் யோகம் பெற போகிறீர்கள் என்று அர்த்தம். உங்களது விடாமுயற்சியும், திறமையும் வெளியுலகிற்கு தெரியப்போகிறது. உங்கள் வாழ்க்கை பிரகாசமடைய போகிறது என்பதை உணர்த்துகிறது. நீங்கள் இதுவரை அறியாத நபர்களிடம் திடீரென பேசுவது போல் கனவில் வந்தால், மற்றவர்களின் மூலம் நீங்கள் வளர்ச்சி அடைய போகிறீர்கள். உங்கள் முன்னேற்றம் வெகு விரைவில் நடக்க இருப்பதாக இவை உணர்த்துகிறது.

- Advertisement -

இதுவரை நீங்கள் உங்கள் நிஜ வாழ்க்கையில் பார்த்திராத அழகான பெண்ணை கனவில் கண்டால் உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியான சம்பவங்கள் நடைபெற இருப்பதை இக்கனவு உணர்த்துவதாக எடுத்துக்கொள்ளலாம். அழகிய பெண் உங்களை நோக்கி வருவது போல கனவில் வந்தால், மகாலட்சுமி உங்கள் வீட்டு கதவை தட்டப் போகிறாள் என்பதை உணர்த்துகிறது. உங்கள் கனவில் நீங்கள் எந்த வயதினராக இருந்தாலும் நீங்கள் படித்துக் கொண்டிருக்கும் காலத்தில் உங்களுக்கு பாடம் நடத்திய ஆசிரியர்கள் வந்தால் நன்மைகள் நடைபெறும். உங்களின் முன்னேற்றம் ஏற்றகரமாக இருக்கப்போகிறது என்பதை இக்கனவு உணர்த்துவதாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

baby-laughing

உங்கள் கனவில் மழலை சிரிப்பை கண்டால் திடீர் பணவரவும் அதிர்ஷ்டமும் உண்டாகும். உங்கள் குழந்தைகளோ தெரிந்தவர்கள் குழந்தைகளோ கனவில் வந்தால் செல்வம் பெருகும். உங்கள் கனவில் உங்களுடன் பிறந்தவர்களை காண நேர்ந்தால், அவருடன் உரையாடுவது போல கனவில் வந்தால், நீங்கள் இப்போது இருக்கும் கஷ்ட நிலை மாறும். பொருளாதார ரீதியாக நீங்கள் மேன்மை அடைவீர்கள் என்பதை உணர்த்துகிறது. மேலும் தீரா பிணியில் இருந்தால் விரைவில் குணமடைவீர்கள் என்பதையும் இக்கனவு சுட்டிக்காட்டும்.

உங்கள் கனவில் உங்கள் தகப்பனாரை காண நேர்ந்தால் நிச்சயமாக உங்கள் வாழ்வில் மாற்றம் உண்டாகும். நீங்கள் பட்ட கஷ்டங்களுக்கு எல்லாம் நல்ல பலன் கிடைக்கப் போகிறது என்பதை கனவு உணர்த்துகிறது. உங்கள் கனவில் நீங்கள் தனியாக அமர்ந்து உணவருந்துவது போல கண்டால் நீங்கள் மன இறுக்கத்திற்கு ஆளாக போகிறீர்கள் என்பதை உணர்த்துகிறது. ஏதோ ஒரு விஷயம் உங்களை மிகப் பெரிய அளவில் பாதிக்கச் செய்யும்.

kobam1

நீங்கள் யாருக்காவது புத்திமதி கூறுவது போல கனவில் வந்தால் உங்களுக்கு மிகவும் பிடித்தவர்களிடம் கருத்து வேறுபாடு உண்டாகும். சில சமயத்தில் வலியை தரும் பிரிவும் நேரலாம். நீங்கள் கோபப்படுவது போல கனவில் கண்டால், நிச்சயம் நீங்கள் எடுக்கும் முயற்சியில் தோல்வி அடையப் போகிறீர்கள் என்பதை கனவு உணர்த்துவதாக எடுத்துக்கொள்ள வேண்டும். இதன் மூலம் எச்சரிக்கையாக இருக்கலாம்.

உங்கள் மனதிற்கு பிடித்தவர்களிடம் காதலை சொல்வது போல கனவில் வந்தால் உங்களுக்கு அனைத்திலும் வெற்றி கிடைக்கப் போகிறது என்பதை உணர்த்துவதாக எடுத்துக்கொள்ள வேண்டும். உங்கள் கனவில் உங்களது மாமனார் வந்தால் எதிர்பாராத திருப்பங்கள் ஏற்படலாம். நல்ல செய்திகள் வீடு தேடி வரும் என்பதை இக்கனவு உணர்த்துகிறது. அதேபோல மாமியார் வந்தால் நீங்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய அவசியம் ஏற்படலாம். அவசரக்குடுக்கையாக செயல்படக் கூடாது என்பதை இக்கனவு உணர்த்துகிறது.

Betrayed-dhrogam

நீங்கள் உங்கள் கனவில் உங்களை அதிகமாக நம்பும் நபர்களுக்கு துரோகம் செய்வது போல கண்டால், ஏதோ ஒரு கெட்ட விஷயத்திலிருந்து நீங்கள் வெளியே வரப் போகிறீர்கள் என்று எடுத்துக் கொள்ள வேண்டும். உங்களுக்கு வரும் மிகப்பெரிய ஆபத்திலிருந்து எச்சரிக்கை செய்யவே இது போன்ற கனவுகள் வரும். கனவு பலன்களை தெரிந்துகொண்டு அதற்கு ஏற்றாற்போல் எச்சரிக்கையுடன் இருந்தால் நன்மைகள் நடைபெறும்.

இதையும் படிக்கலாமே
உயிரோடு இருப்பவர்கள் இறந்தது போல் கனவு வந்தால், இதெல்லாம் நடக்குமா? கனவு பலன் தெரிந்து கொள்ளுங்கள்.

இது போன்று மேலும் உங்களுக்குரிய ஜோதிட சாஸ்திர பலன்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Kanavugalin palangal in Tamil. Kanavu palan in Tamil. Kanavu palan Tamil. Kanavugal sollum palan. Kanavugalin palan.