இம்முறைகளில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா?

water-drinking-procedure

“நீரின்றி அமையாது உலகு” என்று எவ்வளவு அற்புதமாக உலகின் எதார்த்த நிலையை வள்ளுவ பெருந்தகை கூறியிருக்கிறார் என்பதை பலரும் அறிந்து வியக்கின்றனர். உலகில் வாழும் அனைத்து உயிர்களுக்கும் தண்ணீர் மிகவும் அவசியமாகும். அவற்றில் மனிதர்களும் அடங்குவர். தண்ணீர் அற்புதமான ஒரு இயற்கையின் வரப்பிரசாதமாகும். அத்தகைய தண்ணீரை அருந்துவதற்கு சில முறைகள் இருக்கின்றன. அவற்றை பின்பற்றி தண்ணீர் அருந்துவதால் நமக்கு ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை அறிந்து கொள்ளலாம்.

river aaru

முதலில் தண்ணீரை நாம் நமது உடல் தாகம் எடுக்கும் போது மட்டுமே அருந்த வேண்டும். தாகம் எடுக்கும் போது தாமதிக்காமல் உடனடியாக நீரை அருந்த வேண்டும். உடலில் நீர் அதிகம் இருக்க வேண்டும் என்பதற்காக அளவுக்கு அதிகமான நீரை பருக கூடாது. இப்படி ஒவ்வொரு சமயமும் அளவு கடந்த தண்ணீர் அருந்துவதால் சிறுநீரகங்கள் அதிகம் வேலை செய்ய வேண்டிய நிலை உண்டாகி எதிர்காலங்களில் சிறுநீரகங்கள் பாதிப்பு ஏற்பட வழிவகுக்கும்.

பொது மக்கள் அனைவரும் பயன்படுத்தும் வகையில் இருக்கும் பாத்திரங்களில் தண்ணீரை அன்னார்ந்து பருகுவதில் தவறில்லை. உங்கள் வீடுகளில் தண்ணீரை பருகுகும் போது கோப்பையில் தண்ணீர் ஊற்றி, ஒரு பாயசம் அல்லது பழரசம் எப்படி அருந்துவோமோ அத்தகைய பதத்தில் தண்ணீரை மெதுவாக ரசித்து அருந்த வேண்டும்.

water

தொண்டை கட்டு, ஜலதோஷம், ஜுரம் போன்ற காலங்களில் தண்ணீரை காய்ச்சி குடிப்பதால் பெரிய பாதிப்புகள் இல்லை. ஆனால் மற்ற நேரங்களில் காய்ச்சிய நீரை அருந்துவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் தண்ணீரை காய்ச்சும் போது மற்ற சத்துகளுடன் இரும்பு சத்தும் அந்நீரில் அழிந்து விடுகிறது. இத்தகைய சத்துகள் நீங்கிய நீரை தொடர்ந்து அருந்துபவர்களுக்கு எதிர்காலங்களில் எலும்பு தேய்மானம் மற்றும் அவ்வப்போது உடல்நிலை பாதிக்கும் நிலையும் உண்டாகிறது.

- Advertisement -

water drink

தண்ணீரை சுத்திகரிக்க நவீன இயந்திரங்களை பயன்படுத்துவதால், தண்ணீரில் இருக்கும் அத்தியாவசிய சத்துகளும் சேர்த்து வடிகட்டப்பட்டு, நமக்கு சத்து சாரமற்ற நீரே பருகுவதற்கு கிடக்கிறது. இதற்கு மாற்றாக நமது வீடுகளில் கிராமங்களில் செய்து விற்கப்படும் மண்பானை வாங்கி வந்து, அதில் தண்ணீரை ஊற்றி குறைந்தது 12 மணி நேரம் ஊறிய பிறகு பருகி வருவதால் உடலிற்கு வேண்டிய சத்துகள் அந்நீரில் இருந்து கிடைக்கும்.

ManPaanai

மேலும் நீரை சுத்திகரிப்பதற்கு நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் தேத்தான்கொட்டைகள் வாங்கி அதை தண்ணீர் ஊற்றும் மண்பானையின் அடியில் நன்கு தேய்த்து, பிறகு அதில் நீரூற்றி வைப்பதால் நீரில் இருக்கும் கிருமிகளும், நச்சுக்களும் நீங்கி குடிப்பதற்கு தூய்மையான தண்ணீர் கிடைக்கிறது. இதற்கு மாற்றாக கொய்யா மரம், நெல்லி மரத்தின் கிளைகளின் சிறு துண்டுகளை பானை போட்டு நீரூற்றி வைத்திருந்தாலும் சுத்தமான குடிநீரை நாம் பெற முடியும். மேற்கூறிய விதிகளை பின்பற்றி நாம் தண்ணீர் அருந்துவோமேயானால் பல நோய்களை உடலை பீடிக்காமல் நாம் தடுக்க முடியும்.

இதையும் படிக்கலாமே:
கணவன் – மனைவி பிரச்சனை தீர்க்கும் பரிகாரம்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Drinking water procedure in Tamil. It is also called as Water drinking tips in Tamil or Water drinking method in Tamil or Thaneer kudikum murai in Tamil or Thaneer eppadi kudikka vendum in Tamil.