இந்த 2 பொருட்களை வைத்து வீட்டில் இவ்வளவு விஷயங்களை சுலபமா சுத்தம் செய்ய முடியுமா? ஆச்சரியமா இருக்கே!

mixi-jaar-cleaning
- Advertisement -

வீட்டில் நாம் பயன்படுத்திவிட்டு தூக்கி எறியும் இந்த பொருளை சேகரித்து வைத்தால் அதன் மூலம் எவ்வளவவோ விஷயங்களை நாம் சுத்தம் செய்து கொள்ளலாம். வீட்டில் இருக்கும் சில பொருட்களின் விடாப்பிடியான கரைகளை கூட நீக்கும் சக்தி இதற்கு உண்டு. இதிலிருக்கும் சிட்ரஸ் சமையல் உபகரணங்களில் இருக்கும் கடுமையான பாசி படிவுகளைக் கூட நீக்கி புத்தம் புதியதாக மாற்றித் தரும். அப்படியான அந்த பொருள் என்ன? அதை வைத்து வேறு என்னவெல்லாம் செய்யலாம்? என்பதை அறிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

lemon

நாம் சமையலுக்கு அடிக்கடி பயன்படுத்தும் ஒரு பொருள் என்றால் அது எலுமிச்சை. சமையலுக்கு மட்டும் அல்லாமல் பூஜைகள் செய்யவும் எலுமிச்சைப் பழத்தை நாம் பயன்படுத்துவது உண்டு. இந்த எலுமிச்சை பழத்தை பயன்படுத்திவிட்டு அதன் தோலை தூக்கி எறிய வேண்டாம். தோலை உலர வைத்து ஒரு பாலிதீன் பையில் போட்டு பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள். இந்த எலுமிச்சை தோல் பல்வேறு உபயோகங்களுக்கு பயன்படுவது உண்டு. அதை தான் இனி பார்க்க இருக்கிறோம்.

- Advertisement -

வீணாக தூக்கி எறியும் எலுமிச்சை பழத்தின் தோலை காய்ந்த பின்பு நன்கு துண்டு துண்டாக கத்தரித்து மிக்ஸி ஜாரில் போட்டு லேசாக தண்ணீர் ஊற்றி அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அரைத்து எடுத்த இந்த எலுமிச்சை பழ தோல் விழுதுடன் ஒரு டீஸ்பூன் அளவிற்கு வாஷிங் சோடா சேர்த்துக் கொள்ளுங்கள். வாஷிங் சோடா என்பது சமையலுக்கு பயன்படுத்தும் பேக்கிங் சோடா அல்ல. துணி துவைக்க பயன்படுத்தும் இந்த வாஷிங் சோடா சில பொருட்களில் இருக்கும் விடாப்பிடியான உப்பு கரைகளை நீக்கி எளிதாக சுத்தம் செய்ய உதவி செய்யும்.

இந்த கலவை நீங்கள் சிரமப்பட்டு சுத்தம் செய்யக் கூடிய விஷயங்களை மிக மிக எளிதாக சுத்தம் செய்யும் வகையில் நமக்கு உதவும். வீட்டில் இருக்கும் மிக்ஸி ஜாரை நாம் அவ்வளவாக சுத்தம் செய்வது கிடையாது. அதன் அடியில் கொடுக்கப்பட்டிருக்கும் பிளாஸ்டிக் பகுதியானது நாளடைவில் அழுக்கு படிந்து பாசி பிடிக்க துவங்கிவிடும். அந்த பாசியை எளிதாக நீக்க இந்த கலவை நமக்கு உதவி செய்யும். பல் துலக்கும் பிரஷ் கொண்டு லேசாக இந்த கலவையை எடுத்து அழுத்தி தேய்த்தால் போதும். இப்படியான அழுக்குகள், பாசிகள் எல்லாம் வெளியேறி புத்தம் புதிய ஜார் போல மாறிவிடும்.

- Advertisement -

அதே போல இந்த கலவையை கொண்டு அடுப்படியில் இருக்கும் எண்ணெய் பிசுபிசுப்பு உள்ள டைல்ஸ் கூட சுலபமாக சுத்தம் செய்து பளபளப்பாக மாற்றிக் காட்ட முடியும். சமைக்கும் பொழுது தெறிக்கும் எண்ணெய் பிசுக்கு நீங்க இந்த கலவையை இரும்பு நார் கொண்டு தொட்டு லேசாக சுத்தம் செய்து பாருங்கள், நல்ல பலன் கிடைக்கும்.

tiles-cleaning

சிலிண்டர் வைத்த இடத்தில் இருக்கும் அழுக்குகள் நீங்க, பாத்ரூம் டைல்ஸ்களில் இருக்கும் விடாப்பிடியான உப்பு கரை, பிவிசி டோரில் இருக்கும் உப்பு கரை நீங்கவும் இந்த கலவையை பயன்படுத்தி கொள்ளலாம். மேலும் தண்ணீர் வரும் குழாய் மற்றும் பைப்புகளில் இருக்கும் விடாப்பிடியான அழுக்குகள், கறைகள் நீங்கவும் இந்த கலவையை லேசாகத் தேய்த்தால் போதும். அதிகம் மெனக்கெட வேண்டிய அவசியம் கூட இல்லை. ரொம்பவே சுலபமான முறையில் நம் வேலையை மிச்சப்படுத்த கூடிய இந்த குறிப்பு உங்களுக்கு நிச்சயம் உபயோகமாக இருக்கும்.

- Advertisement -