மன அழுத்தத்தால் உண்டாகும் சரும பிரச்சனைகள் இருந்து விடுபட இந்த குறிப்புகளை சரியாக பின்பற்றி பலன் பெறுங்கள்

face2
- Advertisement -

வாழ்க்கை எவ்வளவு எக்ஸைட்டிங்காக இருக்கிறதோ அவ்வளவு மன அழுத்தத்தையும் கொண்டிருக்கிறது. வேலையில் இருக்கும் ஸ்ட்ரெஸ், டெட்லைன், வீட்டை கவனிப்பது, தினமும் செய்யவேண்டிய விஷயங்களின் பட்டியல் என்று பலவற்றை நம் மனதில் வைத்துக் கொண்டு வாழ்க்கை நகர்கிறது. மன அழுத்தம் என்பது ஒருவரது உடலில் பல பிரச்சனைகள் எளிதில் வர காரணமாக இருக்கும். தற்போது நிறைய மக்கள் பல்வேறு உடல்நல பிரச்சனையால் அவஸ்தைப்படுவதற்கு இந்த மன அழுத்தம் தான் காரணம். மன அழுத்தம் உடலில் மட்டுமின்றி, சருமத்திலும் பல பிரச்சனைகளை உண்டாக்கும். மன அழுத்தம் மற்றும் நரம்பு பதற்றம் அதிகரிக்கும் போது, சரும அரிப்பு பிரச்சனையைத் தூண்டும். நீங்கள் அதிகமான அளவில் அழுத்ததில் இருக்கும்போது, முகத்தில் பருக்களும் ஏற்படும். இதற்கு ஹார்மோன் கார்டிசோல் காரணம். மன அழுத்தம் அதிகரிக்கும் போது, தூக்கமின்மை ஏற்பட்டு, அதன் காரணமாக கருவளையங்கள் ஏற்படும். மன அழுத்தம் அதிகரிக்கும் போது, முகத்தில் இரத்த ஓட்டம் குறைந்து, அதனால் கண்களைச் சுற்றி கருவளையங்கள் ஏற்படும். வாருங்கள் இவற்றை சரி செய்ய உதவும் குறிப்புகளை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்

துளசி டோனர்:
உலர் துளிசி இலைகள் – ஒரு குத்து,
வெந்நீர் – 1 கப்,

- Advertisement -

செய்முறை:
உலர் துளசி இலைகலை நசுக்கி, கோப்பை நெந்நீரில கலக்கி கொள்ளவும். இந்த கலைவை ஆறியவுடன் இலைகளை எடுத்துவிட்டு நீரை ஸ்பிரே பாட்டிலில் ஊற்றி, உங்கள் சருமம் மீது தெளித்துக்கொள்ளவும். தினமும் முகம் கழுவும் முன், டோனர் முகம் முழுவதும் பரவும் வகையில் பஞ்சு கொண்டு துடைத்துக்கொள்ளவும். பரு உள்ளவர்களுக்கு இது ஏற்றது. துளசி கிருமிசாசினியாக் செயல்பட்டு கிருமிகளை நீக்குகிறது. சருமத்தையும் மேம்படுத்துகிறது.

மன அழுத்தம் மற்றும் சுற்றுச்சூழல் காரணங்கள் சருமத்தின் ஈரப்பத்தை உறிஞ்சலாம். இதற்கு மாய்ஸ்சரைசர் சிறந்த தீர்வு. இது ஈரப்பதத்தை காக்கிறது. சுருக்கங்களுக்கான தற்காலிக பில்லர்களாக செயல்பட்டு மென்மையை அளிக்கிறது.

- Advertisement -

அவோகடோ-தேன் மாய்ஸ்சுரைசர்:
பிரெஷ் கிரீம் – 3 ஸ்பூன், அவோகடோ – பாதி அளவு, தேன் – 1 ஸ்பூன்.

பாதி அளவு அவகேடா பிரஷ் கிரீம் மற்றும் தேன் ஆகிய எல்லாவற்றையும் மிக்ஸி ஜாரில் போட்டு க்ரீமாக அரைத்துக்கொள்ள வேண்டும். இதை முகத்தில் பூசி, 25 நிமிடங்கள் உலர வைத்து, அதன் பின்னர் வெதுவெதுப்பான நீரில் கழுவவும். வறண்ட கண்களுக்கு ஒரு குளிர்ச்சியான தீர்வு உள்ளது. இந்த கிரீம் வேலை செய்ய காத்திருக்கும் நேரத்தில் கண்கள் மீது சில்லென்று வெள்ளரி துண்டுகளை வைத்துக்கொள்ளவும். அல்லது பன்னீரில் நனைத்த பஞ்சை வைத்துக்கொள்ளவும். மாய்ஸ்சுரைசர் வயதாகும் தன்மைக்கு எதிரானது. இது சருமத்தில் ஈரப்பத்த்தை தக்க வைப்பதுடன் தற்காலிக தூணாகவும் செயல்படுகிறது.

- Advertisement -