குளிர் காலத்தில் சருமத்தில் உண்டாகும் மூன்றுவித பிரச்சனைகளை சரிசெய்ய இந்த ஒரு க்ரீம் மட்டும் போதும். இதனை உங்கள் வீட்டில் நீங்களே தயார் செய்து கொள்ளலாம்

face
- Advertisement -

பனிக்காலம் என்றாலே பலவித சரும பிரச்சனைகள் வந்து விடும். அதிலும் முக்கியமான பாதிப்பு என்னவென்றால் சருமத்தில் உண்டாகும் வெடிப்புகள் தான். உடலில் நீர்ச் சத்து குறைந்து உடல் முழுவதும் சூடாவதால், தோல் சுருக்கம், தோல் வெடிப்பு போன்ற பிரச்சனைகள் உண்டாகிறது. எனவே தான் சருமம் எப்போதும் வறட்சியாக காணப் படுகிறது. இது போன்ற சரும பிரச்சனையை சரி செய்யவும், முகத்தில் இருக்கும் முகப்பரு தழும்புகளை அகற்றவும், முகம் மற்றும் உடலை பொலிவுடன் வைத்திருக்கவும் இந்த மூன்று பொருட்கள் சேர்த்து செய்யும் இந்த கிரீமை சுலபமாக வீட்டிலேயே தயாரித்துக் கொள்ளலாம். இதனை இரண்டு மாதங்கள் வரை ஃப்ரிட்ஜில் வைத்து பயன்படுத்தலாம். இரண்டு மாதங்கள் வரையிலும் வீணாகாமல் செய்து வைத்தபடியே ஃபிரஷ்ஷாக இருக்கும். வாருங்கள் இந்த க்ரீமை எவ்வாறு தயார் செய்வது என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

dry-skin

ஆண்களை விட பெண்கள் தான் தங்களின் அழகில் முக்கிய கவனம் செலுத்துகின்றனர். ஆனால் இந்த பணிக்கால பிரச்சனை என்பது ஆண் பெண் இருவருக்கும் சமமாக ஏற்படுகின்ற ஒன்று தான். எனவே இந்த க்ரீமை ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரும் பயன்படுத்திக்கொள்ளலாம். இதில் சேர்க்கப்படும் பொருட்களால் எந்தவித சரும பாதிப்பும் ஏற்படாது.

- Advertisement -

ஆனால் இதனை தினமும் காலை, இரவு என இருவேளையும் தொடர்ந்து பயன்படுத்தி வரும் பொழுதுதான் நல்ல பலன் கிடைக்கிறது. ஒரு முறை, இரண்டு முறை உபயோகித்து விட்டு மீண்டும் அதனை பயன்படுத்தாமல் அப்படியே விட்டுவிட்டால் எந்தவித பலனும் இருப்பதில்லை. இது நமது உடலுக்குள் இருக்கும் பிரச்சனையை சரிசெய்ய வேண்டி உள்ளதால் இதனை தொடர்ந்து செய்து வர அவை நமது சருமத்தின் மூலம் உட்கிரகிக்கப்பட்டு அதன் பின்பு அதற்கான பலனை கொடுக்கிறது.

alovera-gel4

முதலில் மூன்று ஸ்பூன் ஆலுவேரா ஜெல் எடுத்து கொள்ள வேண்டும். பிறகு அதனுடன் விட்டமின் இ ஆயில் 2 மாத்திரை சேர்க்க வேண்டும். பின்னர் இதனுடன் 3 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்க்க வேண்டும். இவை மூன்றையும் ஒன்றாக சேர்த்து 5 நிமிடம் நன்றாக கலந்துவிட வேண்டும். பின்னர் இந்த க்ரீமை ஒரு கண்ணாடி பாட்டிலில் போட்டு வைத்துக்கொள்ள வேண்டும். இதனை ஃப்ரிட்ஜில் வைத்துக் கொண்டு தேவைப்படும் நேரத்தில் எல்லாம் பயன்படுத்திக் கொள்ளலாம்.

- Advertisement -

காலை குளித்து முடித்ததும் நமது உடல் ஈரப்பதத்துடன் இருக்கும் பொழுதே இந்த க்ரீமை சிறிதளவு எடுத்து முகம், கை, கால் கழுத்து, மூட்டு பகுதிகளில் தேய்த்து விட வேண்டும். சிறிது நேரம் அப்படியே விட்டு விட்டு முகத்தில் பவுடர் போட வேண்டுமென்றால் போட்டுக் கொள்ளலாம். அதே போல் இரவு நேரத்தில் முகம் கழுவிய பின்னர் படுக்கும் முன்பு இதனை முகத்தில் தேய்த்துக் கொண்டு உறங்க வேண்டும்.

face1

பின்னர் வெளியில் செல்லும்பொழுது நமது முகம் பளிச்சென்று இருக்க இந்த க்ரீமை லேசாக முகத்தில் தடவி, 10 நிமிடங்கள் மசாஜ் செய்த பின்னர், முகத்தை தண்ணீரில் கழுவிக் கொண்டு, அதன் பின்னர் வெளியில் சென்று வந்தால் முகம் பார்ப்பதற்கு பலபலவென்று பிரஷ்ஷாக இருக்கும். இப்படி இந்த க்ரீமை முறையாகத் தொடர்ந்து பயன்படுத்தி வர உங்கள் சருமம் நல்ல பொலிவுடன் மிருதுவாக இருக்கும்.

- Advertisement -