வரும் 13/10/2021 புதன்கிழமை துர்காஷ்டமி! துர்க்கை அம்மனை போற்றி வழிபட வேண்டிய ஸ்தோத்திரம் என்ன? அதனால் உண்டாகும் பலன்கள் என்ன?

durgai-amman-manthiram
- Advertisement -

மகா அஷ்டமி என்று கூறப்படும் இந்த துர்காஷ்டமி நவராத்திரியின் நிறைவாக அனுஷ்டிக்கப்படுகிறது. துர்க்கை அம்மனை நினைத்து விரதமிருந்து துர்காஷ்டமியில் இந்த மந்திரத்தை கூறி வழிபட எண்ணியது எண்ணியபடி ஈடேறும் என்பது நம்பிக்கை. இந்நாளில் மகா சக்தி படைத்த துர்கா தேவியை சரணடைந்தவர்களுக்கு எத்தகைய பாவங்களும் தீர்வதாக ஐதீகம் உண்டு. வீரத்திற்கும், தியாகத்திற்கும் சான்றாக இருக்கும் இந்த துர்க்கை அம்மனை வழிபடும் இந்த அஷ்டமி திதி துர்காஷ்டமி என்று பெருமையுடன் போற்றப்படுகிறது. இந்நாளில் நாம் துர்க்கை அம்மனை நினைத்து சொல்ல வேண்டிய ஸ்தோத்திரம் என்ன? அதனால் உண்டாகும் பலன்கள் என்ன? என்பதைத்தான் இந்த பதிவின் மூலம் பார்க்க இருக்கிறோம், வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

Durgai amman

அஷ்ட சக்திகளும் நமக்கு கிடைக்க, நம்மை சுற்றி இருக்கும் பகைமை ஒழிந்து, தெய்வீக ஆற்றல் பெருக துர்காஷ்டமியில் துர்க்கை அம்மனை நினைத்து ஐந்து அல்லது ஏழு திருமணம் ஆகாத இளம் பெண்களை அழைத்து அவர்களை மனையில் அமர்த்தி அவர்களுடைய கால்களை தாம்பூலத்தில் வைத்து பன்னீர் மற்றும் மஞ்சள் கலந்த தண்ணீரால் கழுவி, குங்குமப் பொட்டிட்டு நலங்கு வைக்க வேண்டும். இவ்வாறு அனைவருக்கும் செய்து முடித்த பின் அவர்களுக்கு இனிப்பு பலகாரங்களை கொடுத்து, அன்னதானம் போட்டு, சுவாமிக்கு படைத்த நைவேத்தியங்கள் படைத்து கௌரவிக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் துர்க்கை அம்மன் அருளை நாம் முழுமையாக பெற்றுக் கொள்ள முடியும்.

- Advertisement -

துர்காஷ்டமி துர்காதேவி சிறப்பு ஸ்தோத்திரம்:
ஜெய ஜெய தேவி துர்கா தேவி சரணம்
ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி துர்கா தேவி சரணம்
ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி துர்கா தேவி சரணம்

durgai amman

துர்க்கையம்மனை துதித்தால் என்றும் துன்பம் பறந்தோடும்
தர்மம் காக்கும் தாயாம் அவளை தரிசனம் கண்டால் போதும்
கர்ம வினைகளும் போகும் சர்வமங்களம் கூடும் (ஜெய ஜெய தேவி..)

- Advertisement -

பொற்கரங்கள் பதினெட்டும் நம்மை சுற்றி வரும் பகை விரட்டும்
நெற்றியிலே குங்குமப் பொட்டு வெற்றிப் பாதையைக் காட்டும்
ஆயிரம் கரங்கள் உடையவளே ஆதி சக்தி அவள் பெரியவளே
ஆயிரம் நாமங்கள் கொண்டவளே தாய் போல் நம்மை காப்பவளே (ஜெய ஜெய தேவி..)

Durgai amman

சங்கு சக்கரமும் வில்லும் அம்பும் மின்னும் வாளும் வேலும் சூலமும்
தங்க கைகளில் தாங்கி நிற்பாள் அம்மா……..!!!!!!!!
சிங்கத்தின் மேல் அவள் வீற்றிருப்பாள் திங்களை முடிமேல் சூடி நிற்பாள்
மங்கள வாழ்வும் தந்திடுவாள் மங்கையர்கரசியும்
அவளே அங்கையர்க்கண்ணியும் அவளே

ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி துர்கா தேவி சரணம்
ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி துர்கா தேவி சரணம்
கனக துர்கா தேவி சரணம்
கனக துர்கா தேவி சரணம்.

durga-amma

துர்க்கை அம்மனை வழிபடும் பொழுது கீழ்வரும் இந்த ஸ்தோத்திரத்தை உச்சரிப்பது சிறப்பு! ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு விதமாக கொண்டாடப்படும் இந்த துர்காஷ்டமி சிறப்பு வழிபாடுகளில் மேற்கூறிய வழிபாடும் ஒன்றாகும். இந்த வழிபாட்டை செய்பவர்களுக்கு மாங்கல்ய பலம் நீடிக்கும். திருமணமாகாத பெண்களுக்கு மனதிற்கு பிடித்த நல்ல வரன் அமையும். தொழில் முறை போட்டி, பகைகள் அத்தனையும் ஒழியும். வருமானம் பன்மடங்காகப் பெருகும். ஆயுள் பலம், ஆன்ம பலம் ஆகியவை கூடும். எனவே இந்த நாளை தவறவிடாமல் துர்க்கை அம்மனை நினைத்து இவ்வாறு வழிபட்டு அனைவரும் பயன் பெறலாமே.

- Advertisement -