வறுமை நீங்க, தீராத கடன் பிரச்சனை தீர, சுகபோகமான வாழ்க்கை பெற துர்க்கை அம்மனை 9 வாரம் ராகு காலத்தில் இந்த முறைப்படி, வீட்டில் இருந்த படியே, இப்படி வழிபாடு செய்து பாருங்கள்! கைமேல் பலன் உண்டு.

durgai-amman

தீராத கஷ்டமாக இருந்தாலும், அந்த துயரத்தை துடைப்பதற்கு நம்முடைய சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ள பரிகாரம் தான் ராகு காலத்தில் துர்க்கை அம்மன் வழிபாடு. இந்த ராகு கால துர்க்கை அம்மன் வழிபாட்டை, பலபேர் கோவிலுக்கு சென்று தான், வழிபடுவார்கள். சமீபகாலமாக கோவிலுக்கு செல்ல முடியாத சூழ்நிலை நிலவி வருகிறது. கோவிலுக்கு சென்று அம்மனை வழிபட முடியாதவர்கள் கூட வீட்டில் இருந்தபடியே ராகு காலத்தில் எப்படி பூஜை செய்வது? எந்த கிழமையில் ராகுகால பூஜை செய்தால் என்ன பலனை அடைய முடியும்? என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

blue-durga

துர்க்கை அம்மன் வழிபாடு என்றாலே, செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் வழிபட வேண்டும் என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒன்று. இந்த செவ்வாய்க்கிழமையில் துர்க்கை அம்மனை ராகு காலத்தில் வழிபாடு செய்தால் திருமணத்தடை விலகும். கணவன் மனைவி பிரச்சனை நீங்கும். தீராத கடன் தீரும். வாழ்க்கையில் உள்ள வறுமை நீங்கி, செல்வ வளம் பெறலாம். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ராகு திசை, ராகு தோஷம் உள்ளவர்களுக்கு அதன்மூலம் உண்டாகக்கூடிய பிரச்சனைகள் குறையும்.

அடுத்தபடியாக வெள்ளிக்கிழமை ராகுகால நேரத்தில் துர்க்கை அம்மனை வழிபட்டு வந்தோமேயால் குடும்பத்தில் நிம்மதி அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே உள்ள சண்டை சச்சரவுகள் நீங்கி, ஒற்றுமையான சூழல் நிலவும். குடும்பம், சண்டை சச்சரவு இல்லாமல் ஒற்றுமையாக இருந்து விட்டாலே, வாழ்வில் பெரிய நிம்மதி கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக கையில் இருக்கும் சேமிப்பு உயரத் தொடங்கும். அந்த மகாலட்சுமியின் அருள் கிடைக்கும்.

durga-amma

ஞாயிற்றுக்கிழமை அன்று ராகு காலத்தில் துர்க்கை அம்மனை வழிபட்டுமேயானால், தீராத நோய் தீரும். வெளிநாட்டில் வேலைக்கு முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு விரைவாக விசா கிடைக்க, சீக்கிரமே வெளிநாட்டில் வேலை கிடைக்க, வெளிநாட்டில் இருக்கும் தங்களுடைய உறவினர்களின் குடும்பம், அதாவது இன்றைய சூழலில், தாய் தந்தையரை பிழிந்துவிட்டு நிறைய பேர் வெளிநாடுகளில் வசித்து வருகிறார்கள். அவர்களுடைய நலனுக்காக துர்க்கையம்மனை ஞாயிற்றுக்கிழமைகளில் ராகுகால நேரத்தில் வழிபாடு செய்யலாம்.

- Advertisement -

குறிப்பாக உங்களுக்கு இருக்கக்கூடிய எதிரிகள் தொல்லை நீங்க வேண்டும் என்பதற்காக இந்த ஞாயிற்றுக்கிழமையில் ராகுகால நேரத்தில் வழிபாடு செய்யலாம். வேலை செய்யும் இடத்தில் நம்மை முன்னேற விடாமல் தடுக்கும், நம்முடைய மேலதிகாரிகளின் தொல்லை நீங்கவும் இந்த வழிபாடு மிக மிக சிறப்பானது.
durga

இறுதியாக வளர்பிறை அஷ்டமி தினத்தன்று, வரக்கூடிய ராகு கால நேரத்தில் துர்க்கையம்மனை வழிபாடு செய்வதால், சகல சௌபாக்கியத்தையும் நமக்கு பெற்றுத் தந்து, நிம்மதியான சுகபோக வாழ்க்கையை வாழ, சகல ஐஸ்வர்யமும் நமக்கு வந்து சேரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

kumkum

துர்க்கையம்மனை வீட்டிலிருந்தபடியே எப்படி வழிபாடு செய்வது? வழக்கம்போல பூஜை செய்வதற்கு முந்தைய நாளே உங்களுடைய வீட்டை சுத்தம் செய்து வைத்துக் கொள்ளுங்கள். ராகுகால நேரம் வரும்போது உங்கள் வீட்டு பூஜை அறையில் உள்ள துர்க்கை அம்மனின் திருவுருவ படத்திற்கு சிவப்பு நிறப் பூக்களால் அலங்காரம் செய்ய வேண்டும். அரளிப்பூ துர்க்கை அம்மனுக்கு விசேஷமானது. அரளிப்பூ கிடைக்கவில்லை என்றால் செம்பருத்திப் பூவை பயன்படுத்திக்கொள்ளலாம். எந்த சிவப்பு நிற பூவும் கிடைக்கவில்லை என்றால், வாசனை நிறைந்த எந்த பூக்களையும் அம்மனுக்கு சூட்டலாம் அதில் தவறொன்றும் கிடையாது.

paanagam

உங்களால் முடிந்த நிவேதனத்தை அம்மனுக்கு செய்து வையுங்கள். எதுவுமே செய்ய முடியாதவர்கள் ஒரு டம்ளர் பானகம் கரைத்து வைத்தால் கூட அது மிகவும் விசேஷமானது. துர்க்கை அம்மனுக்கு சிவப்பு நிற குங்கும அர்ச்சனை செய்வது அதிகப்படியான நன்மையை கொடுக்கும். ஒரு சிறிய கிண்ணத்தில் குங்குமத்தை எடுத்து வைத்துக்கொண்டு, மோதிர விரல் கட்டை விரல் இரண்டு கைகளால் குங்குமத்தை ஒரு சிட்டிகை அளவு எடுத்து அம்மனின் பாதங்களில் சமர்ப்பணம் செய்ய வேண்டும். அம்மனுடைய பாதத்திற்கு கீழ் ஒரு சிறிய கிண்ணமோ, அல்லது வெற்றியையோ அல்லது சிறிய வாழை இலை துண்டையோ வைத்துக் கொள்ளுங்கள். அர்ச்சனை செய்த அந்த  குங்குமத்தை, ஒரு டப்பாவில் சேகரித்து வைத்துக் கொண்டு தினம் தோறும் வீட்டில் இருக்கும் பெண்கள் நெற்றியில் இட்டுக்கொண்டால் மிகவும் நல்லது.

kungumam

இப்படியாக குங்கும அர்ச்சனை செய்யும்போது இந்த ஒரு வரி மந்திரத்தை உச்சரிப்பது துர்க்கை அம்மனின் அருளை முழுமையாக நமக்கு பெற்றுத்தரும் உங்களுக்காக அந்த மந்திரம் இதோ!

‘ஓம் ஐம் க்ரீம் க்லீம் சாமுண்டாய விச்சே’

kungumam

உங்களுக்கு வாழ்க்கையில் எந்த பிரச்சனையின் மூலம் அதிகப்படியான பாதிப்பு இருக்கின்றதோ, அந்த பிரச்சனை சரியாக வேண்டும் என்று குறிப்பிட்ட நாளை தேர்ந்தெடுத்து தொடர்ந்து 9 வாரங்கள், 11 வாரங்கள் இந்த பூஜையை உங்களுடைய வீட்டிலேயே தாராளமாக செய்யலாம். தவறொன்றுமில்லை. உங்களுடைய பிரச்சினைகள் மிகவும் வலிமையாக உள்ளது. தீருவதற்கு வெகு நாட்கள் எடுக்கும் என்றால், பிரச்சனை தீரும் வரை துர்க்கை அம்மன் வழிபாட்டை தொடர்ந்து செய்து வாருங்கள். விரைவில் அந்த பிரச்சினைக்கான தீர்வு கிடைக்கும் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
உங்க வீட்டில் இந்த மரம் இருந்தால், இதை மட்டும் செய்ய தவறி விடாதீர்கள்! அதிர்ஷ்டத்தை இழந்து விடுவீர்கள்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.