உங்க வீட்டில் இந்த மரம் இருந்தால், இதை மட்டும் செய்ய தவறி விடாதீர்கள்! அதிர்ஷ்டத்தை இழந்து விடுவீர்கள்.

neem-tree-vilakku
- Advertisement -

ஒவ்வொரு மரமும், ஒவ்வொரு செடியும் மனிதனை போலவே தனித்துவமான அம்சங்களைக் கொண்டுள்ளது. விஷமுள்ள முட்செடிகளை தவிர்த்து மற்ற எல்லா செடி மற்றும் மரம் வகைகளுக்கும் தெய்வீக அம்சங்கள் நிறைந்து இருக்கும். இயற்கையாகவே மனிதனுக்கு படைக்கப்பட்ட செடிகளும், மரங்களும் உண்மையில் மனிதனுக்கு கிடைத்த வரங்கள் தான். அவ்வகையில் இந்த மரத்திற்கு ஆன்மீக ரீதியாகவும், மருத்துவ ரீதியாகவும் விசேஷ அம்சங்கள் அதிகமாக இருப்பதை நாம் வியந்து கூறலாம்.

neem-tree

இந்த ஒரு மரத்தை நீங்கள் வளர்த்து வந்தால், அதற்கு நிச்சயம் இதை செய்தாக வேண்டும். அவ்வாறு செய்வதால் கிடைக்கக் கூடிய பலன்கள் மற்றும் அதிர்ஷ்டங்கள் சொல்லில் அடங்காதவை என்றே கூறலாம். ராஜ யோகத்தையும், அதிர்ஷ்டத்தையும் கொடுக்கவல்ல அந்த மரத்தைப் பற்றிய தகவல்களை தான் இந்த பதிவில் பார்க்க இருக்கிறோம்.

- Advertisement -

விசேஷ சக்திகளும், மகாலட்சுமி கடாட்சம் நிறைந்துள்ள இந்த மரம் கோவில்களிலும், வீடுகளிலும் பெரும்பாலும் வளர்க்கப்பட்டு வருகின்றன. சாலையோரங்களில் இந்த மரத்தை பார்த்தாலே சிலர் அதற்கு மஞ்சள், குங்குமம் இட்டு கடவுளாகவே பாவித்து வழிபட துவங்கி விடுகின்றனர். அந்த அளவிற்கு அதிக பெருமைகளை நிறைந்துள்ள இந்த மரம் உண்மையில் போற்றுதலுக்கு உரியவை தான். சரி அது என்ன மரம்? அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்? என்பதை இனி பார்ப்போம்.

Amman

உங்கள் எல்லோருக்கும் தெரிந்த அம்மனின் அம்சம் உள்ள வேப்ப மரம் தான் அது. வேப்ப மரத்தை பற்றி தெரியாதவர்கள் யாருமே இருக்க முடியாது. மருத்துவ ரீதியாகவும், ஆன்மீக ரீதியாகவும் பெயர் போன வேப்பமரம் உண்மையில் தெய்வீக அம்சம் கொண்டவை என்பது மறுக்க முடியாதது. சாலையில் இருக்கும் வேப்ப மரத்திற்கு சிலர் வஸ்திரம் சாற்றி, மஞ்சள் குங்குமம் இட்டு கற்பூரம் கொளுத்தி விட்டு செல்வதை நாம் வேடிக்கையாக பல இடங்களில் பார்த்திருப்போம். ஆனால் அம்பாளின் அம்சமாக விளங்கும் வேப்பமரத்தை வழிபட்டால் நாம் வேண்டுவது வேண்டியபடியே அப்படியே நடக்கும் என்பது எத்தனை பேருக்கு தெரியும்?

- Advertisement -

விஷப்பூச்சிகள் நெருங்க முடியாத வேப்பமரம் துஷ்ட சக்திகளை அழிக்கும் ஆற்றல் கொண்டவை. உங்கள் வீட்டில் வேப்ப மரம் இருந்தால் போதும். எந்த விதமான தீவினைகளும் உங்களை நெருங்காது. வீட்டிற்கு முன்னால் அல்லது பின்னால் எங்கு வேண்டுமானாலும் தாராளமாக வேப்ப மரத்தை நட்டு வளர்த்து வரலாம். வேப்ப மரத்தை நீங்கள் எந்த அளவிற்கு வெட்டிவிட்டு வெட்டி விட்டு நேராக வளர்த்து வருகிறீர்களோ அந்த அளவிற்கு உங்கள் வீட்டில் நல்லவைகள் நடக்கும். அது போல் வேப்பமரத்தை எப்பொழுதும் படர்ந்து வளர விடக்கூடாது. காடு போல், புதர் போல் படர்ந்து வளரும் வேப்ப மரத்தை விட, அழகாக நேராக வளரும் வேப்பமரத்திற்கு சக்திகள் அதிகம்.

neem-tree1

வீட்டில் வேப்ப மரம் வைத்திருப்பவர்கள் கட்டாயம் அதற்கு ஒரு விளக்கு ஏற்றுவது நேர்மறை ஆற்றல்களை வீட்டில் பரவ செய்யும். சாதாரண சுவாமி படங்கள் எப்படி தெய்வீக ஆற்றலை பெறுகிறதோ! அதே போல தான் வேப்பமரத்தில் விளக்கேற்றுவதால் அந்த மரமே தெய்வமாக மாறிவிடும். வாரம் ஒரு முறை வெள்ளிக்கிழமை அன்று உங்கள் வீட்டு வேப்ப மரத்திற்கு விளக்கு ஏற்றினால் வீட்டில் வர வேண்டிய அதிர்ஷ்டங்கள் வந்து சேர்ந்துவிடும்.

- Advertisement -

neem-tree2

மற்ற மரங்களை வெட்டுவது போல் வேப்பமரத்தை வைத்திருப்பவர்கள் சுலபமாக வெட்டி விட முடியாது. வேப்ப மரத்திற்கு பொங்கலிட்டு பூஜைகள் செய்து அதன் பின்னர் வெட்டினால் தான் உங்களுடைய குடும்பத்திற்கு நல்லது. வீட்டில் இருக்கும் வேப்ப மரத்தை சந்தர்ப்ப சூழ்நிலைகளின் காரணமாக வேரோடு வெட்ட விரும்புபவர்கள் கட்டாயம் இதை செய்திருக்க வேண்டும். இல்லையென்றால் வேப்பமரத்தை வெட்டி அதன் பலனாக நிச்சயம் ஏதாவது ஒரு கெட்ட அதிர்வலைகள் வீட்டில் உருவாகும். இதை பலரும் அனுபவபூர்வமாக உணர்ந்திருப்பார்கள். எனவே வேப்பமரத்தை சாதாரணமாக பார்க்காமல் அதற்கு விளக்கு ஏற்றி உங்களுடைய பிரார்த்தனைகளை வைத்தால் எண்ணியது எண்ணியபடியே நடக்கும் என்பதை நினைவில் வையுங்கள்.

இதையும் படிக்கலாமே
இந்த 1 பொருள் கலந்த தண்ணீரில் இவ்வளவு நன்மைகளா? அதிர்ஷ்டம் பெருக நாம் வீட்டில் செய்யக்கூடாத தவறு என்ன?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -