நீண்ட நாள் வேண்டுதல் நிறைவேற உதவும் துர்கை மந்திரம்

durgai-amman-manthiram
- Advertisement -

பார்வதி தேவியின் ஆங்கார வடுவான்களில் ஓர் வடிவமாக திகழ்கிறாள் துர்கை. துர்கை என்றால் வெற்றிக்கு உரியவள் என்று பொருள். செவ்வாய் மற்றும் வெள்ளி கிழமைகளில் துர்க்கைக்கு விசேஷமான வழிபாடு நடைபெறுவது வழக்கம். ராகுவின் அதிதேவதையாக விளங்குகிறாள் துர்கை. ஆகையால் வாரம் தோறும் செவ்வாய்க்கிழமைகளில் நடக்கும் ராகு கால துர்க்கா பூஜையில் கலந்துகொள்வது நமக்கு மேன்மையை தரும். அதேபோல் ஞாயிற்று கிழமை மாலை 4.30 மணி முதல் 6 மணிக்குள் நடக்கும் துர்கை பூஜையில் கலந்து கொண்டு முறையாக துர்காயை வழிபட்டால் நீண்ட நாள் வேண்டுதல் நிறைவேறும், நோய்கள் தீரும் என்பது நம்பிக்கை. துர்காயை வழிபடும் சமயத்தில் கூற வேண்டிய துர்கை மந்திரம் இதோ.

amman

துர்கை சுலோகம் :

வாழ்வு ஆனவள் துர்கா வாக்குமானவள்
வானில் நின்றவள் இந்த மண்ணில் வந்தனள்
தாழ்வு அற்றவள் துர்கா தாயுமானவள்
தாபம் நீக்கியே என்னைத் தாங்கும் துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே

- Advertisement -

உலகையீன்றவள் துர்கா உமையுமானவள்
உண்மையானவள் எந்தன் உயிரைக் காப்பவள்
நிலவில் நின்றவள் துர்கா நித்யையானவள்
நிலவி நின்றவள் எந்தன் நிதியும் துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே

செம்மையானவள் துர்கா செபமுமானவள்
அம்மையானவள் அன்புத் தந்தையானவள்
இம்மை ஆனவள் துர்கா இன்பமானவள்
மும்மையானவள் என்றும் முழுமையானவள்
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே

- Advertisement -

உயிருமானவள் துர்கா உடலுமானவள்
உலகமானவள் எந்தன் உடமையானவள்
பயிருமானவள் துர்கா படரும் கொம்பவள்
பண்பு பொங்கிட என்னுள் பழுத்த துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே

துன்பமற்றவள் துர்கா துரிய வாழ்பவள்
துறையுமானவள் இன்பத் தோணி யானவள்
அன்பு உற்றவள் துர்கா அபய வீடவள்
நன்மை தங்கிட என்னுள் நடக்கும் துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே

- Advertisement -

குருவுமானவள் துர்கா குழந்தையானவள்
குலமுமானவள் எங்கள் குடும்ப தீபமே
திருவுமானவள் துர்கா திருசூலி மாயவள்
திருநீற்றில் என்னிடம் திகழும் துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே

ராகு தேவனின் பெரும் பூஜை ஏற்றவள்
ராகு நேரத்தில் என்னைத் தேடி வருபவள்
ராகு காலத்தில் எந்தன் தாயை வேண்டினேன்
ராகு துர்க்கையே என்னைக் காக்கும் துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே

கன்னி துர்க்கையே இதயக் கமலா துர்க்கையே
கருணை துர்க்கையே வீரக் கனக துர்க்கையே
அன்னை துர்க்கையே என்றும் அருளும் துர்க்கையே
அன்பு துர்க்கையே ஜெய துர்க்கை துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே

மேலே உள்ள ஸ்லோகத்தில் “தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே” என்று எங்கெல்லாம் வருகிறதோ அப்போதெல்லாம் துர்கையை வணங்கி நமஸ்காரம் செய்வது நல்லது.

இதையும் படிக்கலாமே:
சனிக்கிழமை அன்று இந்த மந்திரத்தை சொன்னால் சனியின் தாக்கம் குறையும்

செய்வாய்க்கிழமை ராகு கால துர்கை பூஜையில் கலந்துகொண்டு துர்க்கைக்கு கிழக்கு அல்லது மேற்கு முகமாக விளக்கேற்றி மேலே உள்ள மந்திரத்தை கூறி வழிபடுவதன் பயனாக திருமணத்தடை நீங்கும், வாழ்வில் மங்களம் பெருகும்.

- Advertisement -