காலமும் நேரமும் நமக்கு நல்லது செய்ய வேண்டும் என்று நினைத்தால் கூட, நம் வீட்டில் தங்கியிருக்கும் கெட்ட சக்தியானது நமக்கான நல்லதை நடக்க விடாது. வெளியில் இருக்கும் போது எல்லாம் சந்தோஷமாக இருக்கும். வெளியில் இருக்கும் போது எல்லா நல்லதும் நடக்கும். ஆனால் வீட்டிற்குள் நுழைந்தால் மட்டும் பிரச்சனைகள் தொடங்கும்.
வீட்டிற்குள் நுழையும் போது மட்டும் ஏதோ ஒரு உணர்வு நம்மை சோர்வடையச் செய்யும். வீட்டில் தங்கியிருக்கும் கண்ணுக்குத் தெரியாத எதிர்மறை ஆற்றல் தான் இதற்கு காரணம். நிறைய பேர் இதை அனுபவப் பூர்வமாக உணர்ந்திருப்பீர்கள். நிறைய பேர் இதனால் இருக்கும் வீட்டை கூட விட்டு இடம்பெயர்ந்து வேறு வீட்டிற்கு குடி செல்வார்கள். இப்படிப்பட்ட பிரச்சனைகள் உங்களுக்கு இருக்கிறது. உங்களால் இருக்கும் வீட்டை விட்டு இடம்பெற முடியவில்லை.
வீட்டில் இருந்தாலே எனக்கு மன நிம்மதி இல்லை என்பவர்கள் இந்த ஒரு எளிமையான விளக்கை உங்களுடைய வீட்டில் ஏற்றி பாருங்கள். வீட்டில் இருக்கும் எதிர்மறை சக்தியானது விலகும். உங்களுடைய வீட்டிற்குள் கண்ணுக்குத் தெரியாத இருக்கும் இருள் நீங்கி, நிம்மதி பிறக்கும். அந்த விளக்கு என்ன. அதை எப்படி ஏற்றுவது, எந்த நாளில் ஏற்றுவது ஆன்மீகம் சார்ந்த பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோமா.
இந்த விளக்கை ஏற்ற நாட்டு மருந்து கடைகளில் இருந்து முதலில் இந்த இரண்டு பொருட்களை வாங்கிக் கொள்ள வேண்டும். பிரண்டை உப்பு, முடக்கத்தான் கீரை பொடி. நீங்கள் பிரண்டை கிடைக்கக்கூடிய ஊரில் இருக்கிறீர்கள். முடக்கத்தான் கீரை கிடைக்கக்கூடிய ஊரில் இருக்கிறீர்கள். இது இரண்டும் உங்களுக்கு பச்சையாகவே செடியில் இருந்து கிடைக்கும் என்றால் இன்னும் சிறப்பு.
நிறைய பேருக்கு இது பச்சையாக கிடைக்காது. அப்படி இருந்தால் நாட்டு மருந்து கடையிலிருந்து பிரண்டை உப்பு, முடக்கத்தான் கீரை பொடியும் வாங்கி பரிகாரத்திற்கு பயன்படுத்த வேண்டும். எப்படி என்று பார்த்து விடுவோம்.
ஒரு மண் அகல் விளக்கு வாங்கிக் கொள்ளுங்கள். அதை தண்ணீரில் கொஞ்ச நேரம் போட்டு ஊற வைத்து எடுத்து காய வைத்துக் கொள்ளவும். வியாழக்கிழமை தோறும் இந்த விளக்கை ஏற்றலாம். 5 வாரம் வியாழக்கிழமைகள் இந்த விளக்கை ஏற்றும் போது, அந்த குரு அனுக்கிரகத்தின் மூலம், இந்த விளக்கின் திரு அருளாலும் உங்களுக்கான நல்லது நடக்கும். தேவை என்பவர்கள் தொடர்ந்து 48 நாள் இந்த விளக்கை வீட்டில் ஏற்றலாம். துவங்கும் நாள் வியாழக்கிழமையாக இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. (வீட்டில் இருக்கும் ஆண்கள் பெண்கள் யார் வேண்டுமென்றாலும் இந்த விளக்கை ஏற்றலாம்).
வியாழக்கிழமை இரவு 7:00 மணிக்கு மேல் அல்லது 8:00 மணிக்கு மேல் இருட்டான பிறகு இந்த விளக்கு ஏற்ற வேண்டும். இரவு 11 மணிக்கு முன்பாக இந்த விளக்கு உங்கள் வீட்டில் எரியட்டும். பூஜை அறையை தவிர்த்து விட்டு வேறு இடங்களில் ஒரு சின்ன தட்டில் மண்ணகல் விளக்கை வைத்து அதில் நல்லெண்ணெய் ஊற்றி 2 சிட்டிகை பிரண்டைஉப்பு, 2 சிட்டிகை முடக்கத்தான் கீரை பொடி போட்டு திரி போட்டு இந்த எண்ணெயில் விளக்கு ஏற்றி வைத்து விட வேண்டும்.
வீட்டு வரவேற்புறையிலும் இந்த விளக்கை ஏற்றி வைக்கலாம். அவ்வளவுதான் குலதெய்வத்தையும் மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். எங்கள் வீட்டில் இருக்கும் துஷ்ட சக்திகள் அனைத்தும் வெளியேற வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள். 1 மணி நேரம் அந்த அகல் விளக்கில் இருக்கும் எண்ணெய்க்கு ஏற்ப அந்த விளக்கானது தானாக எரிந்து குளிரட்டும். அப்படியே விட்டுவிடுங்கள்.
தினமும் 1 மணி நேரம் இப்படி உங்களுடைய வீட்டில் இந்த 2 பொருட்கள் சேர்ந்த விளக்கு எறிந்தால், வீட்டை பிடித்த துஷ்ட சக்தி, கெட்ட சக்தி, கண் திருஷ்டி, ஏவல், பில்லி, சூனியம் போன்ற பெரிய பெரிய கெட்ட சக்திகள் கூட வீட்டை விட்டு விலகிவிடும் என்பது நம்பிக்கை. பிரண்டையும் முடக்கத்தான் கீரையும் உங்களுக்கு பச்சையாக கிடைத்தால் பிரண்டைத் துண்டு சின்னது, முடக்கத்தான் கீரை இரண்டு போட்டு, இந்த விளக்கை ஏற்றலாம் அதுவும் தவறு கிடையாது.
இதையும் படிக்கலாமே: பண வரவுக்கு குரு பகவான் பரிகாரம்
ஒவ்வொரு முறை விளக்கு ஏற்றும் போது, விளக்கில் இருக்கும் பழைய பொருட்களை எடுத்து சுத்தமாக துடைத்துவிட்டு, புதுசாக எண்ணெய் ஊற்றி, புதுசாக இந்த இரண்டு பொருட்களையும் போட்டு ஏற்ற விளக்கு ஏற்ற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த காலத்திலேயே சித்தர்களால் சொல்லப்பட்ட பரிகாரம் இது. எளிமையாக உங்களுக்கு சொல்லப்பட்டுள்ளது. உங்களுக்கும் இதுபோல் பிரச்சனை இருந்தால் இந்த வழிபாட்டை பின்பற்றி பலன் பெறவும்.