இன்று வியாழக்கிழமை. குரு பகவானுக்கு உரிய கிழமை. தக்ஷிணாமூர்த்தி என்றும் இவரை சொல்லுவார்கள். குருவை ஆங்கிலத்தில் ஜூபிடர் என்று சொல்லுவார்கள். ஜூப்பிட்டருக்கு சொந்தமான சிம்பல் தான் இது. அதாவது ஜூப்பிட்டருக்கு சொந்தமான சின்னம் இது. இன்றைய தினம் குருபகவானை மனதார வேண்டி, இந்த சின்னத்தை பின் சொல்லக்கூடிய முறைப்படி உங்களுடைய கையில் வரைந்து கொண்டால் போதும்.
வராத பணம் கூட உங்கள் கையைத் தேடி வரும். நிறைய பேரிடம் பணம் கொடுத்து ஏமாந்திருப்பீர்கள். கடன் கொடுத்து ஏமாந்து இருப்பீர்கள். நகை கொடுத்து ஏமாந்திருப்பீர்கள். சில பேர் சொத்து சம்பந்தப்பட்ட விஷயத்தில் ஏமாற்றமடைந்திருப்பீர்கள். இப்படி நீங்கள் ஏமாந்த பொருளாதார ரீதியான எந்த ஒரு விஷயத்தையும் நீங்கள் திரும்பவும் மீட்டெடுக்க வேண்டும் என்றால் இந்த பரிகாரம் நிச்சயம் உங்களுக்கு உதவி செய்யும்.
இன்று வியாழக்கிழமை. எந்த நேரத்தில் வேண்டுமென்றாலும் இந்த பரிகாரத்தை செய்யலாம். தவறு கிடையாது. குறிப்பாக குரு ஹோரையில் இந்த பரிகாரத்தை செய்தால் விரைவில் பலன் உங்களுக்கு கிடைக்கும். கொஞ்சமாக சுத்தமான மஞ்சள் தூள் எடுத்து, அதில் பன்னீர் விட்டு, கலந்து பேஸ்ட் போல தயார் செய்து கொள்ளுங்கள். ஒரு தீப்பெட்டி குச்சியில் இந்த மஞ்சளை தொட்டு உங்களுடைய வலது கையில் குரு மேட்டில் இந்த வரைபடத்தை வரைய வேண்டும்.
மேலே குரு பகவானுக்கு பக்கத்தில் இந்த வரைபடம் கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து வரைந்து கொள்ளுங்கள். 10 நிமிடங்கள் கையில் அந்த சின்னம் இருக்கும்போது உங்களுடைய வேண்டுதலை குருபகவானிடம், பிரபஞ்சத்திடம் வைக்க வேண்டும். யாரிடம் பணம் கொடுத்து ஏமாந்தீர்களோ, அந்த நபரின் பெயரைச் சொல்லி அந்த பணம் எனக்கு திரும்பவும் வர வேண்டும், என்று பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.
உங்களுடைய வேண்டுதல் எதுவோ அதை சொல்லி பிரார்த்தனை செய்யணும். உங்களுடைய பிரச்சனை என்ன என்பது உங்களுக்கு தானே தெரியும். அதை ஒரு வரியில் சொல்லி மனம் உருகி பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.
10 நிமிடம் கழித்து பிரார்த்தனையை முடித்துவிட்டு கையை சுத்தமான தண்ணீரில் கழுவிக்கொள்ளலாம். இவ்வளவுதான் பரிகாரம். குரு பகவானை நினைத்து இந்த சின்னத்தை உங்களுடைய வலது கை குரு வீட்டில் வரைந்தால் அத்தனை அதிர்ஷ்டம் உங்களை தேடி வரும். ஆள்காட்டி விரலுக்கு கீழே இருக்கக்கூடிய இடம்தான் குரு மேடு.
இதையும் படிக்கலாமே: செப்டம்பர் 14 ஏகாதசி பெருமாள் வழிபாடு
வலது கை குரு மேட்டில் இதை வரைவது சிறப்பு. இடது கையில் குச்சியை எடுத்து, மஞ்சளை தொட்டு, வலது கையில் இந்த சிம்பலை வரைவதில் சிரமம் இருக்கும். அடுத்தவர்களுடைய உதவியை கொண்டு கூட இந்த வரைபடத்தை உங்கள் கையில் வரைந்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் எந்த தவறும் கிடையாது. கணவனுக்கு மனைவி வரைந்து கொடுக்கலாம். அல்லது பிள்ளைகள் யாராவது இந்த சின்னத்தை வரைந்து கொடுக்கலாம். நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன ஆன்மீகம் சார்ந்த இந்த பரிகாரத்தை செய்து பலன் பெறவும்.