உங்களுக்கு வேலைகளில் பதவி உயர்வு கிடைக்க இவற்றை செய்யுங்கள் போதும்

sani

வாழ்க்கையில் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்கு பணம் மிகவும் அவசியம். அந்தப் பணத்தை ஈட்டுவதற்கு அனைவருமே ஏதாவது ஒரு வேலை செய்ய வேண்டியதாக இருக்கிறது. அரசாங்கம் மற்றும் தனியார் நிறுவனங்களில் எந்தவொரு வேலைகளில் இருந்தாலும் சில வருடங்களில் ஒவ்வொருவருக்கும், அவரின் பணி அனுபவம் மற்றும் திறமையை அடிப்படையாகக் கொண்டு பதவி உயர்வுகள் கிடைக்கின்றன. ஆனால் ஒரு சிலருக்கு மட்டும் பல ஆண்டுகள் ஒரு இடத்தில் வேலை செய்தாலும் பதவி உயர்வு என்பது எட்டாக்கனியாகிவிடுகிறது. இவர்கள் தங்களுக்கு உரிதான பதவி உயர்வுகளை பெறுவதற்கு செய்ய வேண்டியது என்ன என்பதை இங்கே தெரிந்து கொள்ளலாம்.

Govt job

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை செய்பவர்களுக்கு கிடைக்கும் பதவி உயர்வு பொருளாதார நன்மைகளோடு வேலை சார்ந்த பல அனுகூலங்களை தருகிறது. இப்படியான பணியாளர்களில் சிலருக்கு மட்டும் பல ஆண்டுகள் அனுபவம் மற்றும் திறமை இருந்தும், தங்களுக்கு உரிய அங்கீகாரமான பதவி உயர்வு கிடைக்காமல் போய்விடுகிறது. இதற்கு அவர்களின் ஜாதக அமைப்பு மற்றும் கர்மவினை போன்றவை காரணமாக இருக்கலாம்.

ஒருவரின் ஜாதகத்தில் பத்தாம் இடம் என்பது ஒருவர் செய்யக்கூடிய வேலை, தொழில், வியாபாரத்தை பற்றி கூறும் இடமாக இருக்கிறது. உங்கள் ஜாதகத்தில் இந்த பத்தாம் இடத்தில் பாதகமான நிலையில் கிரகங்கள் இருந்தாலும், பத்தாமிடம் வலு குறைந்து இருந்தாலும் வேலைகளில் பதவி உயர்வு கிடைப்பதில் தடைகள், தாமதங்கள் உண்டாகும். அப்படிப்பட்டவர்கள் தங்கள் ஜாதகத்தில் இருக்கும் பத்தாமிட அதிபதிக்கு உரிய மந்திரங்களை தினமும் துதித்து வழிபட்டு வந்தால் பதவி உயர்வு ஏற்படுவதற்கான சூழல் உருவாகும்.

உங்கள் பிறந்த நட்சத்திர தினத்தில் கோயிலில் நவக்கிரக ஹோமம் செய்து வழிபடுவதால் கிரக தோஷங்கள் அனைத்தும் நீங்கி, உங்களுக்கு பதவி உயர்வுகள் வெகு விரைவில் கிடைக்கும் வாய்ப்பு உருவாகும். தினமும் சூரிய உதயத்திற்கு முன்பாக அதிகாலையில் எழுந்து குளித்து முடித்துவிட்டு, சிறிய செம்பு பாத்திரத்தில் தூய்மையான நீரை சூரியனுக்கு நிவேதனம் செய்து, சூரிய காயத்திரி மந்திரம் துதித்து, சூரிய பகவானை வழிபட்டு வந்தால் பதவி உயர்வுகள் வெகு விரைவில் கிடைக்கும்.

- Advertisement -

Sani baghavan

சனிக்கிழமைகளில் சனி பகவான் சன்னிதிக்குச் சென்று, நல்லெண்ணெயில் கருப்பு எள் கலந்து தீபம் ஏற்றி சனி பகவான் மந்திரங்களை துதித்து வழிபட்டு வருவதாலும் பதவி உயர்வுகள் கிடைப்பதில் ஏற்படும் தடங்கல்கள், தாமதங்கள் நீங்கும். செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் ஊற வைக்கப்பட்ட அரிசியை எடுத்து சிறிது வெல்லம் கலந்து காகங்களுக்கும், எறும்புகளுக்கும் உணவாக இடுவதால் உங்களின் தோஷங்கள் நீங்கி வேலைவாய்ப்புகளில் உங்களுக்கு உரிய பதவி உயர்வுகள் சீக்கிரம் கிடைக்க வழிவகை செய்யும்.

இதையும் படிக்கலாமே:
தொழில், வியாபார கூட்டாளிகளால் லாபம் ஏற்பட இதை செய்யுங்கள்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Pariharam for job promotion in Tamil. It is also called as Velaivaippu in Tamil or Velai kidaika pariharam in Tamil or Palan tharum parigarangal in Tamil or Paniuyarvu pera in Tamil.