மழை பெய்து முடித்த ஒரு சில நாட்களில் ஈசல் கூட்டம் உங்கள் வீட்டில் படையெடுக்குமா? கூட்டமாக அதை அப்படியே பிடிக்க இதோ ஒரு சூப்பர் ஐடியா.

easal
- Advertisement -

ஒரு சில இடங்களில் மழை பெய்து முடித்த பின்பு, ஓரிரு நாட்களில் இரவு நேரத்தில் ஈசல் கூட்டம் அலை அலையாக படை எடுக்கும். குறிப்பாக பால்கனியில், வீட்டிற்கு வெளியே இருக்கும் போர்டிகோவில் மின்விளக்கு போட்டால், ஈசல் தொல்லை தாங்க முடியாது. கூட்டம் கூட்டமாக வந்து ஐந்தே நிமிடத்தில் கும்பல் கும்பலாக ஆங்காங்கே செத்துவிடும். அதை கூட்டி சுத்தம் செய்வதற்குள் மறுநாள் நமக்கு போதும் போதும் என ஆகும். சில சமயம் ஜன்னல் வழியாக வீட்டிற்குள்ளேயும் இந்த ஈசல் தொல்லை வந்துவிடும். இந்த பிரச்சனையிலிருந்து சுலபமாக தப்பிக்க ஒரு சுலபமான ஐடியா உள்ளது. அது என்ன ஐடியா உங்களுக்கும் தெரிந்து கொள்ள ஆசையாக இருக்கா. ஈசல் பிரச்சனையிலிருந்து தப்பிக்க உங்களுக்கு இந்த குறிப்பு தேவை என்றால் பதிவை முழுமையாக படித்து தெரிந்து கொள்ளலாம்.

இரவு நேரத்தில் வீட்டில் எரியக்கூடிய மின்விளக்கு வெளிச்சத்திற்கு ஈசல் தேடி வரும். உங்களுடைய வீட்டில் ஈசல் தொல்லை எங்கு அதிகமாக இருக்கிறதோ அந்த இடத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். உதாரணத்திற்கு வீட்டின் வெளிப்பக்கம் போர்டிகோ இருக்கிறது. போர்டிகோவை சுற்றி அடைக்க முடியாத ஜன்னல் கம்பிகள். கட்டாயம் அந்த இடத்தில் ஈசல் வரும் அல்லவா.

- Advertisement -

அந்த இடத்தில் ஒரு அகலமான தாம்பூல தட்டை வைத்துக் கொள்ளுங்கள். அதில் இரண்டு டம்ளர் அளவு தண்ணீரை ஊற்றி விடுங்கள். தண்ணீருக்கு நடுவே ஏதாவது ஒரு கனமான பாத்திரத்தை கவிழ்த்து, வைத்து அந்த பாத்திரத்திற்கு மேலே ஒரு மண் அகல் விளக்கை வைத்து எண்ணெய் ஊற்றி திரி போட்டு விளக்கு ஏற்றி வைத்து விடுங்கள். விளக்கு திரியை கொஞ்சம் மொத்தமாக போட்டு கொஞ்சம் பிரகாசமாக எரிய விடுங்கள். முக்கியமாக நீங்கள் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் இந்த விளக்கு ஏற்றி வைத்திருக்கக் கூடிய இடத்தில் மின்விளக்கு எரியக் கூடாது. லைட்டை அணைத்துவிட்டு இந்த ஐடியாவை ட்ரை பண்ணுங்க.

இருட்டில் ஒரே ஒரு விளக்கு எரியும். அந்த விளக்கு வெளிச்சத்தை தேடி ஈசல் கும்பல் வரும். எல்லா ஈசலும் விளக்குக்கு அடியில் இருக்கும் தண்ணீரிலேயே விழுந்து இறந்துவிடும். அவ்வளவுதான். நீங்கள் தண்ணீரை அப்புறப்படுத்தி விடலாம். ஈசல் வீடு முழுவதும் நிரம்பி உங்கள் வீட்டை அசுத்தம் செய்யாது உங்களுக்கு தொல்லையும் கொடுக்காது.

- Advertisement -

வெளியில் பால்கனியிலோ, போர்டிகோவிலோ இந்த குறிப்பை நீங்கள் முயற்சி செய்வதாக இருந்தால் அந்த இடத்தில் ஒரே ஒரு விளக்கு தான் எரிய வேண்டும். நிறைய விளக்குகளை ஏற்றி வைக்காதீங்க. டிப்ஸ் வொர்க் அவுட் ஆகாது. விளக்கை சுற்றி நிறைய தட்டில் வேண்டுமென்றால் தண்ணீரை நாம் வைத்துக் கொள்ளலாம்.

உங்களுக்கு ஈசல் தொல்லை இருந்தால் அதிலிருந்து தப்பிக்க ஒரே ஒரு முறை இந்த ஐடியாவை ட்ரை பண்ணி பாருங்களேன். நிச்சயமாக நல்ல பலன் இருக்கும். ஈசல் மட்டும் அல்லாமல் இன்னும் மிகச் சிறிய அளவில் பூச்சிகள் வண்டுகள் எல்லாம் கூட நம் வீட்டு மின்விளக்கு வெளிச்சத்தை தேடி படையெடுக்கும். அந்த பூச்சிகள் எல்லாம் கூட இந்த விளக்கு வெளிச்சத்தை தேடி வந்து அந்த தண்ணீரிலேயே விழுந்து விடும். குறிப்பு பிடிச்சிருந்தா, உங்க வீட்ல இந்த பூச்சி தொல்லை இருந்தால் முயற்சி செய்து பார்க்கலாம்.

- Advertisement -