4 பொருள் இருந்தால் போதும் நாவூரும் தக்காளி சட்னி இப்படி நொடியில் தயார் செய்து விடலாம்! அவசர நேரத்தில் அருமையான சட்னி செய்வது எப்படி?

tomato-chutney-onion
- Advertisement -

அவசரமான சூழ்நிலையில் சட்டென சட்னி செய்வதற்கு தேங்காயை தான் தேட வேண்டியிருக்கும். தேங்காய் சட்னி சுலபம் என்பதால் அதை அடிக்கடி அரைத்து சாப்பிடுபவர்களும் உண்டு. வதக்காமல் கொள்ளாமல் செய்யப்படும் தேங்காய் சட்னிக்கு குட்பை சொல்லிவிட்டு இரண்டு நிமிடத்தில் 4 பொருட்களை மட்டும் வைத்து செய்யக்கூடிய இந்த தக்காளி சட்னியை ஒருமுறை செஞ்சு பாருங்க, இனி அடிக்கடி செய்வீங்க! அவசர நேரத்தில் அருமையான தக்காளி சட்னி வைப்பது எப்படி? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

காலையில் எழுந்ததும் இட்லி, தோசை என்று எதையாவது சுட்டு வைத்து விடலாம். ஆனால் அதற்கு தொட்டுக் கொள்ள என்ன செய்வது? என்பது தான் ரொம்பவே பிரச்சனையான ஒன்றாக இருக்கும். பெரும்பாலும் காரச் சட்னியை விரும்பும் நபர்களுக்கு தேங்காய் சட்னி பிடிப்பதில்லை. இப்படி அவசரமான சூழ்நிலையில் ரொம்பவே எளிதாக வைக்கக் கூடிய இந்த தக்காளி சட்னி வைக்க நாலு பொருட்களை போதும்!

- Advertisement -

தக்காளி சட்னி அரைக்க தேவையான பொருட்கள்:
பெரிய தக்காளி – 3, பெரிய வெங்காயம் – 2, வர மிளகாய் 3, உளுத்தம் பருப்பு – 2 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

தக்காளி சட்னி செய்முறை விளக்கம்:
முதலில் தக்காளி சட்னி செய்ய தக்காளி பழங்களை நன்கு பழுத்த பழங்களாக பார்த்து எடுத்துக் கொள்ளுங்கள். அதனை சுத்தம் செய்து நான்காக வெட்டிக் கொள்ளுங்கள். பொடியாக நறுக்க வேண்டிய அவசியமில்லை. அதே போல பெரிய வெங்காயத்தையும் தோல் உரித்து சுத்தம் செய்து நான்கைந்தாக வெட்டி வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

பின்னர் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வையுங்கள். அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் விட்டு நன்றாக காய விடுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்ததும் அதில் 2 டீஸ்பூன் அளவிற்கு உளுந்து சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுக்க வேண்டும். பருப்பு வகை பொன்னிறமாக வறுபட்டால் தான் சட்னி சுவையாக இருக்கும். பின்னர் காரத்திற்கு ஏற்ப வர மிளகாய் சேர்த்து கொள்ளுங்கள்.

வர மிளகாய் சேர்த்ததும் 2 நிமிடம் வதக்கி விட்டு, பின்னர் வெட்டி வைத்துள்ள வெங்காயத் துண்டுகளை சேர்த்து லேசாக வதக்கி விட வேண்டும். வெங்காயம் லேசாக வதங்கியதும், வெட்டி வைத்துள்ள தக்காளித் துண்டுகளைச் சேர்த்துக் கொள்ளுங்கள். இப்போது ஓரளவுக்கு தக்காளி பழம் நன்கு வதக்கி விட வேண்டும். இதற்கு வேறு எந்த பொருட்களையும் சேர்க்க வேண்டிய அவசியமில்லை. ஓரளவுக்கு நன்கு வெந்த பின்பு அடுப்பை அணைத்து ஆற விட்டு விடுங்கள்.

பின்னர் ஒரு மிக்சி ஜாரை கழுவி சுத்தம் செய்து இந்த பொருட்களை சேர்த்து நைஸாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அரைத்த சட்னியுடன் தாளிக்க விரும்பினால் தாளித்துக் கொள்ளலாம் அல்லது அப்படியே கூட இட்லி, தோசைக்கு தொட்டுக் கொண்டு சாப்பிட்டால் அருமையாக இருக்கும். ரொம்ப சுலபமாக 4 பொருட்களை மட்டும் வைத்து செய்யக் கூடிய இந்த தக்காளி சட்னி ஒரு முறை இப்படி செய்து சாப்பிட்டு பாருங்கள், அசத்தலாக இருக்கும். கொஞ்சம் நல்லெண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளித்துக் கொட்டினால் இன்னும் சூப்பர்!

- Advertisement -