பாத்ரூம் கிளீன் பண்றதுக்கு கஷ்டமாக இருக்கா? இது தெரிஞ்சா இனி இப்படித்தான் உங்க பாத்ரூமையும் கிளீன் பண்ணுவீங்க!

toilet-salt
- Advertisement -

நம் வீட்டில் இருக்கும் எல்லா இடங்களையும் சுத்தமாக வைத்திருப்பதை காட்டிலும் பாத்ரூம் சுத்தமாக இருக்கிறதா? என்பது தான் மிகவும் முக்கியம். கிருமிகளின் பிறப்பிடமாக இருக்கக் கூடிய டாய்லெட், பாத்ரூம் போன்றவற்றை எப்பொழுதும் சுத்தமாக பராமரிக்க வேண்டும். நீங்கள் தினமும் பராமரிக்காவிட்டாலும் வாரம் ஒரு முறையாவது இவ்வாறு செய்ய, எப்போதுமே உங்களுடைய பாத்ரூம் பளிச்சிடும். ஆசிட் இல்லாமல் நறுமணமாக பாத்ரூமை வைத்திருக்கவும், பளபளப்பாக சிரமப்படாமல் சுத்தம் செய்யவும் என்ன செய்வது? என்பதைத் தான் இந்த வீட்டுக்குறிப்பு பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

நம் வீட்டில் இருக்கக் கூடிய எல்லா இடங்களை காட்டிலும், பாத்ரூமை சுத்தம் செய்வது தான் ரொம்பவே சிரமமான ஒரு விஷயமாக இருந்திருக்கும். என்னதான் ஹேர்பிக், டோமெக்ஸ் என்று பாத்ரூம் கிளீனர்கள் உபயோகித்தாலும் சுத்தம் செய்ய முடியாத உங்களுடைய கடினமான விடாப்பிடியான கரையுள்ள பாத்ரூமை ரொம்பவே சுலபமாக சுத்தம் செய்வதற்கு சோப்பு கட்டி ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். ஐந்து ரூபாயில் இருந்து பத்து ரூபாய்க்கு கிடைக்கும் துணி துவைக்கும் நீல நிற வண்ண சோப்பு கட்டி ஒன்றை எடுத்து அதை ஒரு கேரட் துருவியில் வைத்து துருவி கொள்ளுங்கள்.

- Advertisement -

துருவிய இந்த சோப்பு துகள்கள் கால் கப் அளவிற்கு எடுத்துக் கொண்டால், அதனுடன் கால் கப் அளவிற்கு உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள். உப்பு கல் உப்பாக இருக்க வேண்டும். பின்னர் இதனுடன் அரை எலுமிச்சை மூடி அளவிற்கு சாறை எடுத்து பிழிந்து கொள்ளுங்கள். ரெண்டு டீஸ்பூன் லைசால் அல்லது ஹேர்பிக் ஏதாவது ஒன்றை சேர்த்துக் கொள்ளுங்கள்.

பின்னர் அரை கப் அளவிற்கு தண்ணீர் சேர்த்து நைசாக நீர்க்க கரைத்துக் கொள்ள வேண்டும். இந்த கரைசலை ஏதாவது ஒரு டப்பாவில் போட்டு நன்கு குழுக்கி வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் நீங்கள் எப்பொழுது பாத்ரூம் கழுவ வேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அப்பொழுது டைல்ஸ் மற்றும் டாய்லெட்டில் இதை எல்லா இடங்களிலும் படும்படி ஊற்றி தேய்த்து விடுங்கள். நன்கு தேய்த்த பின்பு ஊற விட்டு விட வேண்டும்.

- Advertisement -

20 நிமிடம் ஊறிய பிறகு லேசாக நீங்கள் தேய்த்தாலே, எல்லா இடத்தில் இருக்கும் உப்புக் கரை, மஞ்சள் கரை போன்றவை எளிதாக நீங்கிவிடும். அதில் ஒட்டிக் கொண்டிருக்கும் அழுக்குகளும், கிருமிகளும் கூட மடிந்து, ஒழிந்துவிடும். அதன் பிறகு நீங்கள் சாதாரணமாக தண்ணீர் விட்டு கழுவினாலே போதும், உங்களுடைய பாத்ரூம் புத்தம் புதியதாக பளிச்சென மின்னும். இதில் உப்பு மற்றும் எலுமிச்சை போன்றவை சேர்த்து இருப்பதால் எளிதாக அழுக்குகள் விடாப்பிடியாக இருப்பவை கூட வந்து விடுகிறது.

டிடர்ஜென்ட் பவுடர் அல்லது மீந்து போன ஷாம்பூ கொண்டு நீங்கள் குளிக்கும் போது தினமும் லேசாக பாத்ரூம் முழுவதும் தேய்த்து விட்டாலே பாத்ரூம் எப்பொழுதுமே நறுமணம் ஆகவும், பளிச்செனவும் இருக்கும். அப்படி தொடர்ந்து செய்ய முடியாதவர்கள் வாரம் ஒரு முறை இதை செய்தால் கொஞ்சம் கூட அழுக்குகள் இல்லாத, சுத்தமான, நறுமணமான பாத்ரூம் உங்களுக்கு எளிதாக கிடைக்கும். இதனால் நீங்கள் கஷ்டப்பட்டு, கை வலிக்க தேய்க்க வேண்டிய அவசியமே இருக்காது, ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -