பிரேக்பாஸ்டை மிகவும் ஈஸியான முடிக்கணுமா அப்போ உடனே இந்த உணவை ட்ரை செய்து பாருங்கள்

upma
- Advertisement -

காலையில் வேலைக்கு செல்லும் பெண்கள் தங்கள் குழந்தைகள் மற்றும் கணவரை பள்ளிக்கும் அனுப்பிவிட்டு, அதன் பிறகுதான் அவர்கள் தயாராகி வேலைக்கு செல்வார்கள். இதுபோன்ற நேரத்தில் அவர்கள் முன்கூட்டியே சீக்கிரமாக எழுந்து காலை உணவு, மதிய உணவை தயார் செய்து வைத்து விடுவார்கள். ஆனால் என்றாவது ஒருநாள் சற்று தாமதமாக கிளம்பினால், சிம்பிளாக செய்யக் கூடிய உணவு வகைகளை மட்டுமே செய்ய முடியும். அதற்காக முதலில் காலை உணவை எளிதாக முடித்துக் கொண்டால் மதிய உணவை நன்றாக சமைத்து விடலாம். அதற்காக மிகவும் ஈஸியான இந்த உணவை ட்ரை செய்து பாருங்கள். இது உடம்பிற்கு மிகவும் நல்லது. அதைவிட சுவையும் அருமையாக இருக்கும். அது என்ன உணவு என்று தெரியுமா? மிகவும் சிம்பிளான அரிசி உப்புமா தாங்க. இதனை சட்டென எப்படி செய்வது என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

தேவையான பொருட்கள்:
பச்சை அரிசி – இரண்டு டம்ளர், கேரட் – 2, பீன்ஸ் – 10, பச்சை மிளகாய் – 3, வெங்காயம் – 2, எண்ணெய் – 4 ஸ்பூன், கடுகு – ஒரு ஸ்பூன்9 உளுத்தம் பருப்பு – ஒரு ஸ்பூன், கடலைப்பருப்பு – 2 ஸ்பூன், உப்பு – ஒரு ஸ்பூன், தண்ணீர் – 4 டம்ளர்.

- Advertisement -

செய்முறை:
முதலில் வெங்காயம், பச்சை மிளகாய் இவற்றை மெல்லிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பிறகு கேரட் மற்றும் பீன்ஸை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது ஒரு குக்கரை வைக்க வேண்டும். பிறகு குக்கரில் 4 ஸ்பூன் எண்ணெய் சேர்க்க வேண்டும்.

எண்ணெய் நன்றாக காய்ந்ததும் அதில் ஒரு ஸ்பூன் கடுகு, ஒரு ஸ்பூன் உளுத்தம் பருப்பு மற்றும் இரண்டு ஸ்பூன் கடலை பருப்பு சேர்த்து தாளிக்க வேண்டும். அதே சமயம் இரண்டு டம்ளர் பச்சை அரிசியை ஒரு கிண்ணத்தில் சேர்த்து, இரண்டு முறை நன்றாகக் கழுவி விட்டு, தண்ணீர் ஊற்றி 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

- Advertisement -

பிறகு நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சைமிளகாய் மற்றும் கேரட், பீன்ஸ் இவற்றையும் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். இவை வதங்கிக் கொண்டிருக்கும் பொழுது இவற்றுடன் ஒரு ஸ்பூன் உப்பு, ஒரு கொத்து கறிவேப்பிலை சேர்த்து கலந்து விட வேண்டும். காய்கறிகள் நன்றாக வதங்கும் வரை மற்றொரு அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து 4 டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க விட வேண்டும்.

பிறகு கொதித்த தண்ணீரை காய்கறிகளுடன் சேர்த்து நன்றாகக் கலந்து விட வேண்டும். பிறகு இவற்றுடன் ஊற வைத்த அரிசியை சேர்த்து நன்றாக கலந்து விட்டு, குக்கரை மூடி, விசில் போட்டு 2 விசில் வரும் வரை வேக வைக்க வேண்டும். பின்னர் குக்கரில் பிரஷர் குறைந்ததும் நன்றாக கலந்து விட்டு, பரிமாறிக் கொடுத்தால் போதும். சுவையான அரிசி உப்புமா அனைவருக்கும் பிடித்தமான சுவையில் இருக்கும்.

- Advertisement -