இந்த குறிப்பெல்லாம் உங்களுக்கு தெரிந்தால் நீங்கள் தான் உங்கள் வீட்டின் சமையல் ராணி.

samayal kurippu
- Advertisement -

சமையல் என்பது சாதாரணமாக செய்யும் வேலை கிடையாது. மிகவும் நுணுக்கமாகவும் நிதானமாகவும் செய்யும் ஒரு கலையாகும். சமைக்கும் பொழுது இவற்றை செய்யலாம் இவற்றை செய்யக்கூடாது என்று பல நெறிமுறைகள் உள்ளன. சிறு தவறு செய்தாலும் பெரும் பிரச்சனை உண்டாகும். சமையலில் சில முக்கியமான குறிப்புகளை தெரிந்து கொண்டால் மட்டுமே போதும் நீங்களும் சமையல் ராணி ஆகலாம். உங்கள் வீட்டில் உள்ளவர்கள் உங்களை தலையில் வைத்து கொண்டாடுவார்கள். அதோடு வாய்க்கு சுவையாக மற்றும் வயிற்றுக்கு நிறைவாக உணவளிக்கும் உங்களை மனதார வாழ்த்துவார்கள்.

saadham

குறிப்பு 1:
சில அரிசிகளில் குக்கரில் சாதம் வடிக்கும் பொழுது சாதத்தின் நிறம் மஞ்சளாக இருக்கும். இதனை தவிர்ப்பதற்கு அரிசியை கழுவி வைக்கும்பொழுது அதனுடன் இரண்டு சொட்டு எலுமிச்சைச் சாறு சேர்த்தால் சாதம் மஞ்சள் நிறமாக மாறாது.

- Advertisement -

குறிப்பு 2:
கோதுமை மாவினை எவ்வளவு நன்றாக பிசைந்தாலும் சப்பாத்தி மிருதுவாக வருவதில்லை. ஆனால் கோதுமைமாவு பிசையும் பொழுது சிறிதளவு சுடுதண்ணீரை சேர்த்து பிசைந்தால் சப்பாத்தி மிகவும் மிருதுவாக வரும்.

Chapathi maavu

குறிப்பு 3:
கருவேப்பிலை அதிக நாட்கள் வாடாமல் இருக்க அதனை ஒரு அலுமினிய பாத்திரத்தில் போட்டு வைக்க வேண்டும். அதே போல கோதுமை மாவில் வந்து வராமல் இருக்க ஒரு பிடி உப்பினை கோதுமை மாவில் கலந்து வைத்தால் வண்டுகள் வராமல் இருக்கும்.

- Advertisement -

குறிப்பு 4:
இட்லிக்கு அரைக்கும் மாவு மிருதுவாக இருப்பதற்கு அரிசியை அரைக்கும் பொழுதே அதனுடன் சிறிதளவு வெண்டைக் காய்களை சேர்த்து அரைக்கவேண்டும். இதனால் இட்லி மிகவும் மிருதுவாக கிடைக்கும். அதே போல இட்லி மாவு சீக்கிரம் புளித்து விடாமலிருக்க வெத்தலையின் காம்பினை கில்லாமல் அதனை மாவு பாத்திரத்தினுள் குப்புற இருக்குமாறு போட்டு வைக்க வேண்டும்.

potato

குறிப்பு 5:
உருளைக்கிழங்கு வறுவல் சுவையாக இருக்க சமைக்கும் பொழுது ஒரு ஸ்பூன் தயிரை சேர்த்து சமைத்தால் மிகவும் சுவையாக இருக்கும். அதே போல தயிர் சீக்கிரம் புளித்து விடாமல் இருக்க ஒரு துண்டு தேங்காயைப் போட்டு வைக்க வேண்டும்.

- Advertisement -

குறிப்பு 6:
சேனைக்கிழங்கை சீக்கிரமாக வேக வைப்பதற்கு ஒரு கடாயை அடுப்பில் வைத்து கடாய் நன்றாக காய்ந்ததும் அதில் சிறிதளவு உப்பு சேர்த்து, உப்பு நன்றாக வெடித்தவுடன் 2 டம்ளர் தண்ணீர் சேர்த்து, அதனுடன் சேனைக் கிழங்கை சேர்த்து வேக வைத்தால் சீக்கிரம் வெந்துவிடும்.

senaikizhangu

குறிப்பு 7:
சிறிதளவு புளியை ஒரு சிறிய துணியில் மூட்டையாக கட்டி எண்ணெயில் நனைத்து தோசைக்கல்லில் தேய்த்து பிறகு தோசை சுட்டால் தோசை ஒட்டாமல் வரும். அதே போல சமையலில் உப்பு அதிகமாகிவிட்டால் அதில் ஒரு உருளைக்கிழங்கை நான்காக அரிந்து சேர்த்து விட்டால் போதும் உப்பின் அளவு சரியாகிவிடும்.

குறிப்பு 8:
எண்ணெய் பலகாரங்களை பல நாட்கள் எடுத்து வைத்தால் அதில் காரல் வாடை வந்து விடும் இதனை தவிர்க்க சிறிதளவு உப்பினை ஒரு துணியில் மூட்டையாகக் கட்டி பலகாரங்களுடன் சேர்த்து வைக்க வேண்டும்.

sweets

குறிப்பு 9:
சாம்பார் வைக்கும் பொழுது மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய், சிறிதளவு தனியா ஆகியவற்றை நன்றாக வறுத்து பொடிசெய்து இறுதியாக சேர்த்தால் சாம்பார் மிகவும் சுவையாக இருக்கும்.

குறிப்பு 10:
அவசரத்திற்கு பயன்படுத்துவதற்காக சிலர் காய்கறிகளை அறிந்து பிரிட்ஜில் வைத்து பயன்படுத்துவார்கள். அவ்வாறு செய்வதென்பது நல்லதல்ல. காய்கறிகளை அறிந்து வைப்பதன் மூலம் அவற்றின் அனைத்து சத்துக்களும் வெளியேறிவிடுகின்றன இவற்றை உண்பதால் உடல் நல பாதிப்பு மட்டுமே உண்டாகும். சமையல் செய்யும் பொழுது தான் காய்கறிகளை அறிந்து சமைக்க வேண்டும். இதனால் சமையலின் சுவை கூடும்.

- Advertisement -