அதிவேகமாக முடி வளர்ச்சியை பெற அழகான ஹேர் பேக். தலைக்கு எண்ணெய் வைக்கிறதை விட இந்த ஹேர் பேக்கை போடுவது அவ்வளவு ஈசி.

hair6
- Advertisement -

நிறைய முடி வளர்ச்சி இருக்க வேண்டும். ஆனால் முடி வளர்ச்சிக்கு ஆசைப்பட்டு ஹேர் பேக்கை தலையில் போட்டு அதை வாஷ் செய்வதற்குள் போதும் போதும் என ஆகி விடுகிறது. ஊட்டச்சத்து நிறைந்த ஹேர்பேக்கை போட வேண்டும். அதே சமயம் தலை கசக்குவதற்கும் எந்த ஒரு சிரமமும் இருக்கக் கூடாது என்பவர்களுக்காகவே இந்த பதிவு. ஒரு சுலபமான ஹேர் பேக்கை தான் இப்போது நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். எண்ணெய் வைப்பது போலவே இந்த ஹேர் பேக்கை தலையில் வைத்து சுலபமாக தலையை சுத்தம் செய்து விடலாம். அதேபோல லிக்விட் போல இந்த ஹேர் பேக்கை நாம் தயார் செய்வதால் நம்முடைய வேர்கால்களில் சீக்கிரம் இறங்கி அதிவேக முடி வளர்ச்சியையும் இது நமக்கு கொடுக்கும்.

பெரிய வெங்காயம் 1 தோல் சீவி நறுக்கியது, மீடியம் சைஸ் உருளைக்கிழங்கு – 1 தோல் சீவி பொடியாக நறுக்கியது, இயற்கையாக கிடைக்கும் கற்றாழை ஜெல் – 1/4 கப், செம்பருத்திப் பூ இலை – 10, இந்த பொருட்களை எல்லாம் மிக்ஸி ஜாரில் போட்டு விழுது போல அரைக்க வேண்டும். தேவைப்பட்டால் கொஞ்சம் தண்ணீர் ஊற்றிக் கொள்ளலாம்.

- Advertisement -

அரைத்த இந்த விழுதை ஒரு மெலிசான காட்டன் துணியில் அல்லது ஃபில்டரிலோ ஊற்றி, திப்பிய எல்லாம் பிழிந்து எடுத்து விடுங்கள். இந்த சாறு மட்டும் நமக்கு போதும். உங்களுடைய தலையில் லேசாக முதலில் எண்ணெய் வைத்து விடுங்கள். அதன் பின்பு இந்த சாறை ஒரு காட்டன் பஞ்சுலோ அல்லது வெள்ளை துணியிலோ நனைத்து உங்களுடைய தலை முடியின் மயிர் கால்களில் படும்படி தடவ வேண்டும். முடியை பாகம் பாகமாக பிரித்து இந்த ஹேர் லிக்விடை முடியில் நன்றாக தடவி ஒரு கொண்டை கட்டிக் கொள்ளுங்கள்.

ஹேர்பேக் மீதம் இருந்தால் முடியின் நுனி வரை ஹேர் பேக்கை போட்டு கொள்ளலாம். 20 நிமிடங்கள் கழித்து மைல்டான ஷாம்பு போட்டு உங்களுடைய தலையை அலசிவிடுங்கள். வாரத்தில் இரண்டு நாள் இந்த ஹேர் பேக்கை போட்டு வாருங்கள். முதல் இரண்டு முறை போடும்போதே உங்களுடைய முடியில் நல்ல வித்தியாசம் தெரியும்.

- Advertisement -

சில பேருடைய தலையில் பொடுகு அதிகமாக இருக்கும். அப்படி இருந்தால் இந்த ஹேர் பேக்கோடு இரண்டு டேபிள் ஸ்பூன் தயிர் ஊற்றி கலந்து தலையில் ஹேர் பேக் போட்டு வர பொடுகும் படிப்படியாக குறையும். ரொம்பவும் பேன் பொடுகு தொல்லை உங்களுக்கு இருந்தால் பத்து வேப்ப இலையைக் கூட இந்த ஹேர் பேக்கோடு சேர்த்து அரைத்துக் கொள்ளலாம். இன்னும் பெஸ்ட் ரிசல்ட் சீக்கிரம் கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே: இந்த 4 பொருட்கள் இருந்தால் போதும். 1 மாதத்திற்கு தேவையான விம் லிக்விடை, 20 ரூபாய் செலவில் நம் வீட்டிலேயே தயார் செய்து விடலாம். கடைகளில் அதிக காசு கொடுத்து இனி ஏமாறாதீங்க.

இறுதியாக வழக்கம் போல சொல்வது தான். நிறைய தண்ணீர் குடியுங்கள். உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய உணவுப் பொருட்களை சாப்பிடுங்கள். ஜங்க் ஃபுட் சாப்பிடுவதை அறவே தவிர்த்து விடுங்கள். இது தவிர உங்களுடைய ஆரோக்கியத்தில் ஏதேனும் பிரச்சனை இருக்கிறது என்றால் தொடர்ந்து நீங்கள் மருந்து மாத்திரை சாப்பிடுபவர்களாக இருந்தால் அப்படிப்பட்டவர்களுக்கு இந்த ஹர்பாக் மட்டும் முடி வளர்ச்சியை கொடுக்காது என்பதையும் இந்த இடத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். மற்றபடி சாதாரணமாக எல்லோரும் இந்த குறிப்பை பின்பற்றி பலன் பெறலாம்.

- Advertisement -