இந்த 4 பொருட்கள் இருந்தால் போதும். 1 மாதத்திற்கு தேவையான விம் லிக்விடை, 20 ரூபாய் செலவில் நம் வீட்டிலேயே தயார் செய்து விடலாம். கடைகளில் அதிக காசு கொடுத்து இனி ஏமாறாதீங்க.

vim
- Advertisement -

தினம் தினம் பாத்திரம் தேய்ப்பதற்கு கடையிலிருந்து ஒரு மாதத்திற்கு நூற்றுக்கணக்கில் காசு கொடுத்து விம் லிக்விட் அல்லது சோப் வாங்கி நாம் பயன்படுத்துகின்றோம். இந்த லிக்விடை நம் வீட்டிலேயே மிக மிக சுலபமான முறையில் நாமே தயார் செய்து கொள்ளலாம். 1 லிட்டர் அளவு பாத்திரம் தேய்க்கும் சோப்பு, தயார் செய்ய 20 ரூபாய் கூட நமக்கு செலவாகாது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். அதுவும் ரொம்ப ரொம்ப ஈஸியாக செய்யலாம் வாங்க. பாத்திரம் தேய்க்கும் லிக்விட் தயார் செய்ய தேவையான பொருட்கள் என்னென்ன. எந்த அளவுகளில் இதை கலந்து தயார் செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.

இன்ட்ரஸ்ட் இருக்கிறவங்க இந்த குறிப்பை ட்ரை பண்ணி பார்க்கலாம். இந்த குறிப்புக்கு நமக்கு தேவையான பொருட்கள். SLES லிக்விட் (sodium lauryl ether sulfate) – 200ml, மினரல் வாட்டர் 800ml, லெமன் எசன்ஸ் 1 மூடி, மஞ்சள் நிற ஃபுட் கலர் – 1/4 ஸ்பூன், உப்பு 40 கிராம், இந்த பொருட்கள் மட்டும் தான் நமக்கு தேவை. கெமிக்கல் பொருட்கள் விற்கும் கடைகளில் SLES கெமிக்கல் வேண்டும் என்று கேட்டால் கொடுப்பார்கள். ஒரு லிட்டர் அளவு பாட்டிலில் இது நமக்கு கிடைக்கும். அதை வாங்கி தேவையான அளவு நாம் பயன்படுத்திக் கொள்ளலாம். இதனுடைய விலை ஒரு லிட்டரே 150 ரூபாய்க்குள் தான் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

ஒரு ஆகலமான சில்வர் பாத்திரத்தையே எடுத்துக் கொள்ளுங்கள். அதில் முதலில் SLES கெமிக்கலை 200ml அளவு சரியாக அளந்து ஊற்றிக் கொள்ளுங்கள். இதோடு 800ml தண்ணீர் ஊற்றி கலக்க வேண்டும். கட்டாயமாக ஆர்.ஓ வாட்டர், மினரல் வாட்டர் தான் ஊற்ற வேண்டும். அடுத்தது லெமன் எசன்ஸ், ஃபுட் கலரை சேர்த்து நன்றாக கலக்கினால் மஞ்சள் நிறத்தில் ஒரு லிக்விட் நமக்கு கிடைத்திருக்கும். இதில் நம் வீட்டில் இருக்கும் தூள் உப்பு 40 கிராம் சேர்த்து ஒரு கரண்டியை வைத்து கலக்கும் போது இரண்டே நிமிடத்தில் நமக்கு தேவையான ஜெல் கிடைத்து விடும். இந்த ஜெல்லை ஒரு பாட்டிலில் ஊற்றி ஸ்டோர் செய்தால் மூன்று மாதங்கள் வரை கெட்டுப் போகாது.

அயோடின் கலந்த உப்பு சேர்க்கும்போது மூன்று மாதங்கள் வரை தான் நன்றாக இருக்கும். அயோடின் சேர்க்காத உப்பை இதோட சேர்த்து கலந்தால் இன்னும் கொஞ்சம் கூடுதல் நாட்கள் கெட்டுப் போகாமல் இருக்கும். இந்த லிக்விடை, வழக்கம்போல பாத்திரம் தேய்க்கும் லிக்விடை எப்படி பயன்படுத்துவோமோ அப்படித்தான் பயன்படுத்த போகின்றோம். பெரும்பாலும் யாருக்கும் இது கையில் அலர்ஜியை கொடுக்காது.

- Advertisement -

ஒருவேளை உங்களுக்கு ரொம்பவும் சென்சிடிவ் ஸ்கின்னாக இருந்து இந்த லிக்விட் அலர்ஜியை கொடுத்தால், இதை நீங்கள் பயன்படுத்த வேண்டாம். இந்த 1 லிட்டர் பாத்திரம் தேய்க்கும் சோப்பை தயார் செய்வதற்கு நமக்கு மிஞ்சிப் போனால் 20 ல் இருந்து 25 ரூபாய் மதிப்பு உள்ள பொருட்களை தான் பயன்படுத்தி இருப்போம். காரணம் SLES கெமிக்கலும் நமக்கு மீதமிருக்கும். எசன்ஸ், ஃபுட் கலர் எல்லாமே மீதம் இருக்கும். அதையெல்லாம் அடுத்த முறை இதே போல சோப் லிக்விட் செய்ய பயன்படுத்திக் கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே: வெள்ளை சர்க்கரையை வைத்து முகத்தை இவ்வளவு வெள்ளையாக மாற்ற முடியுமா? நிச்சயமாக முடியும் வாங்க அதை எப்படி தெரிந்து கொள்ளலாம்.

அவ்வளவு தாங்க. எல்லாம் பாத்திரங்களையும் தேய்ப்பதற்கு இது ஒரு சூப்பர் லிக்விட் ஆக இருக்கும். ஆனால் இதே லிக்விடை கடையில் நீங்கள் காசு கொடுத்து வாங்கினால் நிச்சயமாக 100 ரூபாய் க்கு மேல் செலவாகும். கொஞ்சம் பெரிய குடும்பமாக இருக்கிறீர்கள் என்றால் கட்டாயமாக கடையில் ஒரு பாட்டில் விம் லிக்விட் 10 நாட்களுக்கு கூட தாக்கு பிடிக்காது. உங்களுக்கு இந்த குறிப்பு பிடிச்சிருந்தா ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -