கை நிறைய கருவேப்பிலை எடுத்து இப்படி துவையல் செஞ்சு பாருங்க உலகத்தையே மறந்து சாப்பிடுவீங்க!

karuveppilai
- Advertisement -

கருவேப்பிலையின் சத்துக்கள் நமக்கு முழுமையாக எந்த ஒரு சமையலிலும் கிடைப்பது கிடையாது. அதை துவையலாக, சட்னியாக அரைத்து சாப்பிடும் பொழுது மட்டுமே அதில் இருக்கும் சத்துக்கள் நமக்கு முழுமையாக கிடைக்கிறது. கருவேப்பிலை கண் பிரச்சனை, தலைமுடி உதிர்தல் போன்ற எண்ணற்ற பிரச்சனைகளை தீர்க்கும் அற்புதமான மருந்தாக செயல்படுகிறது. ஆனால் அதை சாப்பிடும் பொழுது ஒதுக்கி வைத்து விடுகிறோம். கருவேப்பிலையின் சத்துக்கள் முழுமையாக கிடைக்க வாரம் இரு முறையாவது இது போல துவையல் செஞ்சி சாப்பிட்டு பாருங்க! இந்த துவையல் டிபன் வகைகளுக்கு மட்டுமல்லாமல், சூடான சாதத்துடன் பிசைந்து சாப்பிடவும் டேஸ்டியாக இருக்கும். சுவையான கருவேப்பிலை துவையல் எளிதாக எப்படி வீட்டில் அரைப்பது? என்பதை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

கருவேப்பிலை துவையல் செய்ய தேவையான பொருட்கள்
கறிவேப்பிலை இலைகள் – ரெண்டு கப், சமையல் எண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன், தனியா விதைகள் – ரெண்டு டீஸ்பூன், உளுந்து – 2 டீஸ்பூன், வர மிளகாய் – இரண்டு, இஞ்சி – சிறிதளவு, புளி – சிறு நெல்லிக்காய் அளவு, வெல்லம் – ஒரு சிறு துண்டு, உப்பு – தேவையான அளவு, தேங்காய் துருவல் அரை கப்.

- Advertisement -

கருவேப்பிலை துவையல் செய்முறை விளக்கம்:
முதலில் பச்சையாக பிரஷ்ஷாக இருக்கும் கறிவேப்பிலை இலைகளை இரண்டு கப் அளவிற்கு உருவி எடுத்துக் கொள்ளுங்கள். பிறகு தேவையான எல்லா பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அரைக்கப் அளவிற்கு தேங்காயை துருவி வைத்துக் கொள்ளுங்கள். அல்லது சிறுசிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.

அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வையுங்கள். அதில் ஒரு டேபிள் ஸ்பூன் அளவிற்கு எண்ணெய் விட்டு நன்கு காய விடுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்ததும் ரெண்டு வரமிளகாய்களை காம்பு நீக்கி கிள்ளி சேர்த்து தாளித்துக் கொள்ளுங்கள். பின்னர் அதனுடன் தனியா விதைகள் மற்றும் உளுந்து ஆகியவற்றை போட்டு சிவக்க வறுக்க வேண்டும்.

- Advertisement -

சிவக்க வறுத்ததும் ஒரு விரல் நீளத்திற்கு இஞ்சியை தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி சேருங்கள். இவற்றை நன்கு வறுத்ததும் பிரஷ்ஷாக உருவி வைத்துள்ள கருவேப்பிலை இலைகளை சேர்த்து சுருள வதக்க வேண்டும். கறிவேப்பிலை இலைகள் சுருள ஆரம்பித்ததும், ஒரு சிறு நெல்லிக்காய் அளவிற்கு புளியை நார், விதைகள் நீக்கி உருட்டி எடுத்து சேருங்கள். பின்னர் நன்கு வதக்கிய பின்பு அடுப்பை அணைத்து ஆற விட்டு விடுங்கள்.

கருவேப்பிலை இலைகள் நன்கு ஆறியதும் இதை மிக்ஸி ஜாரில் சேர்த்து இதனுடன் அரை கப் அளவிற்கு நீங்கள் துருவி வைத்துள்ள தேங்காயை சேர்க்க வேண்டும். பிறகு இந்த துவையலுக்கு தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து தண்ணீர் எதுவும் சேர்க்காமல் முதலில் அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். பிறகு தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீரை சேர்த்துக் கொள்ளலாம். இதனை சூடான சாதத்துடன் நெய் ஊற்றி பிசைந்து சாப்பிட்டு பாருங்கள், அவ்வளவு அருமையாக இருக்கும். இட்லி, தோசைக்கு தொட்டுக் கொள்ள செம்மையாக இருக்கும். நீங்களும் இந்த துவையலை இதே மாதிரி ஈஸியாக செஞ்சி ருசிச்சு பாருங்க உங்களுக்கும் ரொம்பவே பிடிக்கும்.

- Advertisement -